Amla : முடி வளர்ச்சி முதல் தோல் பராமரிப்பு வரை தினமும் நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் இதோ!
Amla : நெல்லிக்காய் மெட்டபாலிசத்தை அதிகரித்து, பசியைக் குறைப்பதன் மூலம் எடையைக் கட்டுப்படுத்த உதவும். இது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துபவர்களுக்கு இது நன்மை பயக்கும்.
Amla : பொதுவாக நாம் நெல்லிக்காயை, நெல்லி மிட்டாய், ஜாம், ஊறுகாய், நெல்லிக்காய் சாதம் என பல வகையாக உணவில் சேர்த்து கொள்கிறோம். இன்றைய இளம் தலைமுறையினர் நெல்லிக்காய் ஜூஸை அதிகம் எடுத்து கொள்கின்றனர். காரணம் நெல்லிக்காய் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. அதில் வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதனால் நெல்லிக்காயை உட்கொள்வது உடலின் நோய் எதிர்ப்புச் செயல்பாட்டை ஆதரிக்கிறது. செரிமானத்தைத் தூண்டுவதில் இருந்து முடி மற்றும் தோல் பராமரிப்பு வரை இது நெல்லிக்காய் வழிகளில் நமக்கு நன்மை பயக்கும். அதனால் தான் நம் முன்னோர்கள் நெல்லிக்காயை பல நூற்றாண்டுகளாக ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது மற்றும் இரத்த சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. தினமும் நெல்லிக்காயை உட்கொள்வதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். இதனை தொடர்ந்து உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் பற்றிய தகவல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
நெல்லிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்
நோய் எதிர்ப்பு சக்தி:
நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இதனால் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி, தோல் ஆரோக்கியம் மற்றும் கொலாஜன் உற்பத்தியை அதிகரிப்பதில் நெல்லிக்காய் முக்கியமானது. இதனை தினமும் உட்கொள்வதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மேலும் நமது சரும பொலிவை அதிகரிப்பதில் நெல்லிக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள்:
நெல்லிக்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. இது உடலில் உள்ள ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது. இது நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்குவதன் மூலம் இதனால் தோல் சுருக்கத்தை போக்கி இளமையான தோற்றத்தை கொடுக்கிறது.
செரிமானம்:
நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிடுவது செரிமானத்திற்கு உதவுகிறது. நெல்லிக்காயில் பொதுவாக அதிக நார்ச்சத்து இருப்பதால், இது மலச்சிக்கலை நீக்குகிறது மற்றும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
இதய ஆரோக்கியம்:
நெல்லிக்காயை தொடர்ந்து உட்கொள்வது கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் ஒட்டுமொத்த இருதய ஆரோக்கியத்தையும் ஆதரிக்கின்றன.
எடை மேலாண்மை:
நெல்லிக்காய் மெட்டபாலிசத்தை அதிகரித்து, பசியைக் குறைப்பதன் மூலம் எடையைக் கட்டுப்படுத்த உதவும். இது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துபவர்களுக்கு இது நன்மை பயக்கும்.
முடி மற்றும் தோல் நன்மைகள்:
மயிர்க்கால்களை வலுப்படுத்தும் மற்றும் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் திறன் காரணமாக நெல்லிக்காய் பெரும்பாலும் முடி பராமரிப்பு பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. இதில் உள்ள வைட்டமின் சி சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, சரும சுருக்கங்களை குறைக்க உதவுகிறது.
தினசரி உணவில் நெல்லிக்காயை உட்கொள்வதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது முதல் செரிமானத்தை மேம்படுத்துவது மற்றும் தோல் மற்றும் முடியின் ஆரோக்கியத்தை அதிகரிப்பது வரை பல ஆரோக்கிய நன்மைகளுக்கு வழிவகுக்கும்.அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது பழமொழி. எனவே அதை அளவோடும், சரிவிகித உணவோடும் உட்கொள்வது அவசியம்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்த ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும்.
ஆரோக்கியம் தொடர்பாக தொடர்ந்து பல சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுடன் இணைந்திருங்கள்
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்