Cholesterol : உங்க உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்க இதுவும் காரணமா.. இந்த உணவுகளை எடுத்துக்கோங்க!
High cholesterol : கெட்ட கொலஸ்ட்ரால் என்பது மோசமான உணவுப்பழக்கம், உடல் உழைப்பு இல்லாமை, மன அழுத்தம், புகைபிடித்தல் போன்றவற்றால் மட்டுமல்ல, நியாசின் எனப்படும் வைட்டமின் பி3 குறைபாட்டாலும் ஏற்படுகிறது. இந்த வைட்டமின் குறைபாட்டால், நல்ல கொலஸ்ட்ராலை உடலால் சரியாக உற்பத்தி செய்ய முடிவதில்லை.

உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் சேர்ந்தால், பல வகையான பிரச்சனைகள் தொடங்கும். கெட்ட கொலஸ்ட்ரால் ஒரு அமைதியான கொலையாளி என்று சொல்லலாம். ஏனெனில் அது குவியும் அறிகுறிகளை நமக்கு காட்டுவதில்லை. இது முழுவதுமாக சேரும் போது, இதய நோய் மற்றும் நீரிழிவு நோய் ஏற்படுகிறது. எனவே கெட்ட கொலஸ்ட்ரால் ஆரம்பத்திலேயே சேராமல் தடுக்க வேண்டும்.
கெட்ட கொலஸ்ட்ரால் என்றால் என்ன?
கெட்ட கொலஸ்ட்ரால் குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதம் ஆகும். இது உடலில் குறைவாக இருக்க வேண்டும். அதன் அளவு அதிகரித்தால், தமனிகளில் பிளாக்குகள் உருவாகின்றன. இது இதய நோயை உண்டாக்கும். நொறுக்குத் தீனிகள், சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் கொண்ட உணவுகள், எண்ணெய் நிரம்பிய உணவுகளை உண்பது, உடற்பயிற்சியின்மை போன்றவற்றால் கெட்ட கொலஸ்ட்ரால் அடிக்கடி ஏற்படுகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.
ஆனால் கெட்ட கொலஸ்ட்ரால் என்பது மோசமான உணவுப்பழக்கம், உடல் உழைப்பு இல்லாமை, மன அழுத்தம், புகைபிடித்தல் போன்றவற்றால் மட்டுமல்ல, நியாசின் எனப்படும் வைட்டமின் பி3 குறைபாட்டாலும் ஏற்படுகிறது. இந்த வைட்டமின் குறைபாட்டால், நல்ல கொலஸ்ட்ராலை உடலால் சரியாக உற்பத்தி செய்ய முடிவதில்லை என்று மருத்துவர்கள் விளக்குகிறார்கள். எனவே, கெட்ட கொழுப்பைக் குறைக்க வைட்டமின் பி3 குறைபாட்டைத் தவிர்ப்பது அவசியம்.
