வெறும் வயிற்றில் ஊற வைத்த உலர் திராட்சை நீர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை பார்க்கலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Aug 28, 2024

Hindustan Times
Tamil

உலர் திராட்சையை கிஷ்மிஸ் என்றும் அழைப்பதுண்டு. ஊட்டச்சத்து மிகுந்த உலர் பழமான இதில் அடிப்படை ஊட்டச்சத்துகள், டயட்ரி நார்ச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம் நிறைந்துள்ளது

உலர் திராட்சையை தண்ணீர் ஊற வைத்து வெறும் வயிற்றில் பருகி வருவதன் மூலம் பல்வேறு வகைகளில் ஆரோக்கிய நன்மைகளை பெறலாம் என ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது

உலர் திராட்சை நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்

இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தி, ரத்த சரக்கரை அளவை சீராக்குகிறது

இதில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், டயட்ரி நார்ச்சத்து ரத்த நாளங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, ஹைபர் டென்ஷன் அபாயத்தை குறைக்கிறது

காலையில் வெறும் வயிற்றில் உலர் திராட்சை ஊற வைத்த நீர் பருகுவதனால் உடலில் ஆற்றல் அதிகரித்து நாள் முழுவதும் புத்துணர்வுடன் செயல்பட உதவுகிறது

கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் உடலில் இருக்கும் ட்ரைக்ளைசரைட்ஸ் அளவை வெகுவாக குறைக்கிறது

இரும்புச்சத்து, பி  காம்பிளக்ஸ் வைட்டமின், தாமிரம் நிறைந்து காணப்படுகிறது. இது புதிய ரத்த செல்கள் உருவாக்கத்துக்கு ஆதரவு அளிக்கிறது. தாமிரம் இரும்பு உறிஞ்சுதலை ஊக்கப்படுத்துகிறது

வயிற்றில் உள்ள நச்சுக்களை நீக்க உதவுகிறது. இதனால் வயிறு தொடர்பான பிரச்னைகளை தவிர்க்கப்படுகிறது

ரத்தத்தை சுத்திகரித்து அதன் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்க உதவுகிறது

மாரடைப்பை தடுக்கும் நட்ஸ்