தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  ரூ. 20 ஆயிரம் தள்ளுபடி விலையில் ஐபோன் 13 வாங்கலாம்! எப்படி தெரியுமா?

ரூ. 20 ஆயிரம் தள்ளுபடி விலையில் ஐபோன் 13 வாங்கலாம்! எப்படி தெரியுமா?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jul 19, 2022 09:00 PM IST

ஐபோன் 13 மாடல் போன் ரூ. 20 ஆயிரம் குறைவாக வாங்கும் வாய்ப்பை அமேசான் நிறுவனம் வழங்கியுள்ளது. அடுத்த வாரம் நடைபெற இருக்கும் அமேசான் ப்ரைம் டே விற்பனையில் ஐபோன் 13 போன்களை இந்த தள்ளுபடி விலையில் வாங்கலாம்.

ரூ. 20 ஆயிரம் தள்ளுபடி விலையில் கிடைக்கும் ஐபோன் 13 சீரிஸ் போன்கள்
ரூ. 20 ஆயிரம் தள்ளுபடி விலையில் கிடைக்கும் ஐபோன் 13 சீரிஸ் போன்கள்

ட்ரெண்டிங் செய்திகள்

மிக முக்கியமாக கால்ட்லி ஸ்மார்ட்போன்களான ஆப்பிள் ஐபோன் 12, ஐபோன் 13 புரோ உள்பட சில மாடல் போன்களுக்கு ஆஃபர்களை அள்ளி அளித்துள்ளது. ஜூலை 23 நள்ளிரவு 12 மணி முதல் ஜூலை 24 வரை இந்த ப்ரைம் டே விற்பனையானது நடைபெறுகிறது.

மேற்கூறிய நாள்களில் ஐபோன்களுக்கு ரூ. 20 ஆயிரம் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி ஐபோன் 13. ஐபோன் 13 புரோ, ஐபோன் 13 புரோ மேக்ஸ் போன்களை இந்த தள்ளுபடி விலையில் வாங்கலாம்.

ஏற்கனவே ஐபோன் 13 சீரிஸ் போன்கள் அமேசான் ஸ்டோர்களில் நல்ல தள்ளுபடி விலையிலேயே கிடைக்கிறது. தற்போது ஐபோன் 13 போன்களின் 128GB, 256GB, 512GB ஸ்டோரேஜ் முறையே ரூ. 79, 900, ரூ. 89,900 மற்றும் ரூ. 1, 09,900 விலைகளில் இந்தியாவில் கிடைக்கிறது.

இந்த போன்களுக்கு அமேசான் ப்ரைம் டே விற்பனையின்போது ரூ. 20 ஆயிரம் தள்ளுபடி தரப்படுவதுடன், கூடுதலாக ICICI Bank மற்றும் State Bank of India கார்டுகளை வைத்திருக்கும் பயனாளர்களுக்கு 10 சதவீதம் உடனடி தள்ளுபடியும் கிடைக்கிறது. அதாவது ICICI Bank கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள், SBI கிரெடிட் கார்டு மற்றும் EMI பரிமாற்றங்களில் இது சலுகை பொருந்தும்.

இதுதவிர தங்களது பழைய போன்களை எக்சேஞ்ச் செய்து கொண்டால் ஐபோன் 13 மாடல் வெறும் ரூ. 59,990 அல்லது அதற்கும் குறைவான விலையில் வாங்கிவிடலாம்.

கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ஐபோன் 13 மாடல் போன்கள் 6.1 இன்ச் ரெட்டினா XDR OLED டிஸ்ப்ளே, 1170x2532 ரெசலூசனுடன், 460 PPI Pixel அடர்த்தி கொண்டதாக உள்ளது.

டூயல் கேமரா கொண்டுள்ள ஐபோன் 13, பிரதான் கேமரா 12MP, மற்றும் 12MP Ultra Wide லென்சில் மற்றொரு கேமராக கொண்டதாக உள்ளது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்களுடன், ios 15 இயங்குதளமும், ios 16 அப்கிரேத் செய்து கொள்ளும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது.

WhatsApp channel