அசத்தும் சுவையில் அப்பளக்குழம்பு! விருந்தினரை வீட்டுக்கு அழைத்துவரும் ஆற்றல் கொண்டது!
அசத்தும் சுவையில் அப்பளக் குழம்பு, விருந்தினரை வீட்டுக்கு அழைத்துவரும் ஆற்றல் கொண்டதால் இதை நீங்கள் கட்டாயம் சாப்பிடவேண்டும்.
அப்பளம், ஈசியான சைட்டிஷ், வீட்டில் தனியாக சைட்டிஷ் செய்வதற்கு நேரம் இல்லையென்றாலோ அல்லது இரவு உணவுக்கு உடனடியான தேவை என்றாலோ அப்பளத்தை எடுத்து பொரித்து சாப்பிட்டு விடலாம். குழந்தைகளுக்கு அது உணவு மட்டுமல்ல, ஸ்னாக்ஸ். அப்பளத்தை பொரித்தால் அவர்கள் வெறும் வாயிலேயே சாப்பிட்டு முடித்துவிடுவார்கள். எனவே வீட்டில் அப்பளம் பொரிக்கும்போது கொஞ்சம் கூடுதலாக செய்து வைத்துக்கொள்ளவேண்டும். அப்போதுதான் நமக்கு சாப்பாட்டுக்கு தொட்டுக்கொள்ள கிடைக்கும். ஆனால் இந்த அப்பளத்திலே குழம்பு செய்ய முடியும் என்றால் உங்களுக்கு ஆச்சர்யமாக இல்லை. அப்பளத்தில் குழம்பு செய்யும்போது அது கூடுதல் சுவையானதாக இருக்கும். இதற்கு தொட்டுக்கொள்ளவும் எதுவும் வேண்டாம். ஏனெனில் குழம்பில் உள்ள அப்பளமே போதுமானது.
அப்பளக் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம். இந்தக் குழம்பை நாம் வழக்கமாக செய்யும் புளிக்குழம்புபோல்தான் செய்யவேண்டும். உங்களுக்கு புளிக்குழம்பு செய்ய தெரிந்தாலே போதும் நீங்கள் அப்பளக்குழம்பை எளிதாக செய்துவிடலாம். இதற்கு தொட்டுக்கொள்ள நீங்கள் தனியாக காய்கறிகள் செய்யவும் மெனக்கெடவேண்டாம். குழம்பிலே அப்பளம் உள்ளது. அவசரமான நாளுக்கு ஏற்ற சிம்பிள் ரெசிபி இந்த அப்பளக்குழம்பு.
தேவையான பொருட்கள்
நல்லெண்ணெய் – 2 ஸ்பூன்
கடுகு – கால் ஸ்பூன்
பெருங்காயத் தூள் – கால் ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கைப்பிடியளவு
சின்ன வெங்காயம் – 15 (பொடியாக நறுக்கியது)
பூண்டு – 15 பல்
தக்காளி – 2 (பழுத்தது, மசித்துக்கொள்ளவேண்டும்)
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
குழம்பு மிளகாய்த் தூள் – 3 ஸ்பூன்
மிளகாய்த் தூள் – 2 ஸ்பூன்
புளிக்கரைசல் – கால் கப்
(கொஞ்சம் புளியை சூடான தண்ணீரில் ஊறவைத்து கரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்)
சிறு துண்டுகளாக நறுக்கி பொரித்த அப்பளம் – ஒரு கப்
செய்முறை
கடாயில் எண்ணெய் சேர்த்து நன்றாக சூடானவுடன், அதில் கடுகு சேர்த்து பொரியவிடவேண்டும். அடுத்து பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.
அடுத்து பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். வெங்காயம் பொன்னிறமானவுடன் அதில் மசித்தோ அல்லது அரைத்தோ வைத்துள்ள தக்காளியை சேர்த்துக்கொள்ளவேண்டும்.
அடுத்து உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், குழம்புத் தூள் என அனைத்தையும் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவேண்டும். அடுத்து புளிக்கரைசலை சேர்த்துக்கொள்ளவேண்டும்.
குழம்பு நன்றாக கொதித்தவுடன், அதில் பொரித்த அப்பளத்தை சேர்க்கவேண்டும். குழம்பில் உள்ள தண்ணீரை அப்பளம் அப்படியே உறிஞ்சி குழம்பு கெட்டியாகிவிடும்.
அப்பளம் ஊறியவுடன் அடுப்பை அனைத்து இறக்கினால், சூப்பர் சுவையான அப்பளக்குழும்பு தயார். இதை சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும். இதற்கு தொட்டுக்கொள்ள வெள்ளரி, பாசிபருப்பு கூட்டு நன்றாக இருக்கும்.
இதை உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒருமுறை இந்த குழம்பை வைத்துவிட்டால் நீங்களே மீண்டும், மீண்டும் சாப்பிடவேண்டும் என்று எண்வீர்கள்.
இந்த குழம்பை சாதத்தில் சேர்த்து மட்டுமல்ல, டிஃபனுக்கும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும். குறிப்பாக தோசைக்கு ஏற்றது இந்த அப்பளக்குழம்பு.
இதுபோன்ற எண்ணற்ற வித்யாசமான ரெசிபிக்கள், தகவல்கள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்