சோகம்.. பிரபல சின்னத்திரை நடிகர் மகன் விபத்தில் பலி.. அப்பளம் போல் நொறுங்கிய கார்.. போலீசார் விசாரணை!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  சோகம்.. பிரபல சின்னத்திரை நடிகர் மகன் விபத்தில் பலி.. அப்பளம் போல் நொறுங்கிய கார்.. போலீசார் விசாரணை!

சோகம்.. பிரபல சின்னத்திரை நடிகர் மகன் விபத்தில் பலி.. அப்பளம் போல் நொறுங்கிய கார்.. போலீசார் விசாரணை!

Divya Sekar HT Tamil
Nov 01, 2024 12:25 PM IST

தீபாவளி பண்டிகை நாளில் சின்னத்திரை நடிகர் மகன் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சோகம்.. பிரபல சின்னத்திரை நடிகர் மகன் விபத்தில் பலி..  அப்பளம் போல் நொறுங்கிய கார்.. போலீசார் விசாரணை!
சோகம்.. பிரபல சின்னத்திரை நடிகர் மகன் விபத்தில் பலி.. அப்பளம் போல் நொறுங்கிய கார்.. போலீசார் விசாரணை!

சம்பவயிடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்

அப்போது வேளச்சேரி -தரமணி 100 அடி சாலை, விஜயநகர் பேருந்து நிறுத்தம் அருகே வரும் போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை நடுவே இருந்த தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.‌ இதில் காரை ஓட்டி சென்ற இளைஞர் நிதீஷ் ஆதித்யா சம்பவயிடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காரில் பயணம் செய்த ஜெய் கிருஷ்ணன், வெங்கட் இருவரும் காயங்களுடன் உயிர் தப்பினர்.

இதனை பார்த்து அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் இது குறித்து போக்குவரத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் அங்கு வந்த கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சாலை விபத்தில் உயிரிழந்த நித்தீஷ் ஆதித்யா உடலை கைப்பற்றி ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.‌

போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

மேலும் காயமடைந்த இருவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.‌ பின்னர் இந்த விபத்து குறித்து போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

விபத்து குறித்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். நேற்று விடுமுறை தினம் என்பதால், சாலையில் பெரிய அளவில் வாகனம் இல்லாததால், நிதீஷ் காரை வேகமாக ஓட்டி உள்ளார். இதனால், கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு சுவரில் மோதி விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் நிதீஸ் குமார் கார் அப்பளம் போல நொருங்கியது.

பிற்பகல் இறுதிசடங்கு

 இதுகுறித்து நிதீஷின் பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து அவர்களை மருத்துவமனையில் உள்ளனர். தீபாவளி நாள் அதுவும் சின்னத்திரை நடிகரின் மகன் உயிரிழந்தது சின்னத்திரை வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பிரேதப்பரிசோதனைக்கு பின் உடல் ராஜா அண்ணாமலைபுரம் நடிகர் கார்த்திக்கின் வீட்டுக்கு கொண்டுவரப்பட்டு இன்று பிற்பகல் இறுதிசடங்கு நடைபெறும் என சொல்லப்படுகிறது. தீபாவளி பண்டிகை நாளில் சின்னத்திரை நடிகர் மகன் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.