தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Aloe Vera Benefits : உச்சி முதல் பாதம் வரை; உடலுக்கு உள்ளே மற்றும் வெளியே பல பலன்கள்! கற்றாழையின் முழு நன்மைகள்!

Aloe Vera Benefits : உச்சி முதல் பாதம் வரை; உடலுக்கு உள்ளே மற்றும் வெளியே பல பலன்கள்! கற்றாழையின் முழு நன்மைகள்!

Priyadarshini R HT Tamil
Apr 09, 2024 07:46 AM IST

Benefits of Aloe vera : உடலுக்கு உள்ளேயும், வெளியேயும் பல பலன்களை தரும் கற்றாழையின் நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்.

Aloe Vera Benefits : உச்சி முதல் பாதம் வரை; உடலுக்கு உள்ளே மற்றும் வெளியே பல பலன்கள்! கற்றாழையின் முழு நன்மைகள்!
Aloe Vera Benefits : உச்சி முதல் பாதம் வரை; உடலுக்கு உள்ளே மற்றும் வெளியே பல பலன்கள்! கற்றாழையின் முழு நன்மைகள்!

ட்ரெண்டிங் செய்திகள்

ஒவ்வொரு இலையிலும் உள்ள ஜெல் போன்ற பகுதி தண்ணீரை சேமிக்கிறது. அந்த பாகம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இந்த தாவரத்தின் நன்மையே அந்த ஜெலில்தான் உள்ளது. இதில் வைட்டமின்கள், மினரல்கள், அமினோ அமிலங்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது.

இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டி பாக்டீரியல் தன்மைகள் உள்ளது

ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் முக்கியம். கற்றாழையில் சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது பாலிஃபீனால்கள் என்று அழைக்கப்படுகின்றன.

இதில் உள்ள பாலிஃபினால்கள் மற்றும் உள்ள உட்பொருட்கள், சில பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கின்றன. இதனர்ல மனிதர்களுக்கு தொற்று ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

காயங்களை ஆற்றும் தன்மை

மருந்தாக கற்றாழை பயன்படுத்தப்படுகிறது. இதை சாப்பிடுவதைவிட சருமத்தில் தேய்ப்பது சிறந்தது. இது காயங்கள், தழும்புகள், சூரிய ஒளிகளால் ஏற்படும் தழும்புகள் ஆகியவற்றை சரிசெய்கிறது. இது சருமத்துக்கு பாதுகாப்பைக் கொடுக்கிறது.

மிதமான காயங்களுக்கு மருந்தாகும் என்ற ஆய்வுகள் கூறுகின்றன. காயங்கள் குணமாகும் நேரத்தை குறைக்கிறது. சருமத்தில் உள்ள எரிச்சல், தொற்று மற்றும் சருமம் சிவத்தல் ஆகியவற்றை தடுக்கிறது.

பற்களில் ஏற்படும் தொற்றுக்களை குணப்படுத்துகிறது

பற்சிதைவு, ஈறுகளில் ஏற்படும் தொற்றுகள் ஆகியவை பற்களில் ஏற்படும் பொதுவாக பிரச்னைகள். இதனால் பற்களில் பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. கற்றாழை மவுத் வாஷ்கள் பல் தொற்றுகளை சரி செய்ய உதவுவதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வாய் புண்களை குணப்படுத்துகிறது

கற்றாழை வாயில் ஏற்படும் புண்களை குணப்படுத்த உதவுகிறது. மவுத் அல்சர் எனப்படும் வாய்க்குள் ஏற்படும் புண்கள், உதடுகளுக்கு கீழ் ஏற்படும் புண்கள் ஆகியவற்றை போக்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதனால் ஏற்படும் வலிகளையும் குறைக்கிறது.

மலச்சிக்கலை போக்குகிறது

கற்றாழையின் ஜெல்லில் இருந்து சுரக்கும் மஞ்சள் நிற திரவத்துக்கு காரணம் அலான், இது மலத்தை இலக்கும் தன்மை கொண்டது. ஆனால் இதை அடிக்கடி பயன்படுத்தக்கூடாது.

சருமத்தை காக்கும் மற்றும் சுருக்கங்களை தடுக்கும்

வயோதிகத்தை மெதுவாக்கும் தன்மை கற்றாழை சாற்றுக்கு உள்ளது. கற்றாழை ஜெல்லை தொடர்ந்து பயன்படுத்தினால் சருமம் இலகுவாவது ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. சருமத்தில் ஈரப்பத்தை தக்கவைக்கிறது, வறண்ட சருமத்தை போக்குகிறது.

நீரிழிவு நோயை குறைக்கிறது

நீரிழிவு நோயாளிகளுக்கு மருந்தாகிறது. இதன் இன்சுலின் சென்சிட்டிவ் தன்மை, ரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது.

தலைமுடி ஆரோக்கியத்துக்கு உதவுகிறது

தலை மற்றும் முகத்தில் மஞ்சள் படர்தல் மற்றும் சிவத்தல் போன்ற பிரச்னைகள் செபோரஹெய்க் டெர்மடிடிஸ் என்று அழைக்கப்படுகிறது. இதனால் தலையில் அரிப்பு, எரிச்சல் ஆகியவை ஏற்படும். அதை கற்றாழை போக்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த நோயினல், முடி உதிர்வு அதிகரிக்கக்கூடும். அதை தடுத்து முடி வளர்ச்சிக்கு கற்றாழை உதவும்.

இதை ஜெல் மற்றும் ஆயின்மென்ட் என பல்வேறு வழிகளில் பயன்படுத்தலாம்.

ஆபத்துக்கள்

வாய் வழியாக எடுத்துக்கொள்ளும்போது, அதிகம் உட்கொண்டால், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். கல்லீரல் பாதிப்பைக் கூட ஏற்படுத்தலாம். இதை தோலுடன் பயன்படுத்தக்கூடாது. அப்படி பயன்படுத்தினால் புற்றுநோய் ஆபத்தை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

WhatsApp channel

டாபிக்ஸ்