வெயில் காலத்தில் கற்றாழையை எடுத்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்
pixa bay
By Pandeeswari Gurusamy Apr 07, 2024
Hindustan Times Tamil
கற்றாழை ஒரு காயகல்ப மூலிகை. கற்றாழைகற்றாழை ஒரு காயகற்ப மூலிகை. கற்றாழை பொடியை முறையாக சாப்பிட்டு வர எப்போதும் இளமையாகவும், உடல் வன்மையோடும் வாழலாம். பொடியை முறையாக சாப்பிட்டு வர எப்போதும் இளமையாகவும், உடல் வன்மையோடும் வாழலாம்.
pixa bay
கற்றாழை உடல் சூட்டை தணித்து, உடலுக்கு வலிமை தரும்.
pixa bay
பெண்களுக்கு, சிறுநீர் எரிச்சல், வெள்ளைப்படுதல், நீர்கட்டி, மாதவிடாய் கோளாறுகள், குழந்தைப்பேறு இல்லாமை போன்ற நோய்கள் குணமாகும் வாய்ப்புண்டு.
pixa bay
கற்றாழை சாறெடுத்து வெண்ணெய் (அ) கற்கண்டு, வால் மிளகுத்தூள் சேர்த்து சாப்பிட்டால் (30 மிலி) நீர்ச்சுருக்கு (சிறுநீர் குறைந்து மஞ்சள் நிறத்தில் வெளிப்படல்) நீங்கும். உடல் வெப்பம், உடலரிப்பு நீங்கும்.
pixa bay
கற்றாழையின் சோற்றை எடுத்து பலமுறை கழுவி, இதில் சிறிது படிகாரம் சேர்த்து, சிறு துணியில் முடிந்து தொங்கவிட, அதிலிருந்து நீர் வடியும். அந்நீரை கண்களில் விட கண் சிவப்பு, கண் நோய்கள் நீங்கும்.
pixa bay
மருத்துவ குணங்கள் நிறைந்த கற்றாழை அழகுசாதன பொருட்களில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. கற்றாழையில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட், ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆன்டி ஃபங்கல் உட்பொருட்கள் மனிதர்களை தொற்றுக்களில் இருந்து காக்கிறது.
pixa bay
கற்றாழையில் உள்ள மருத்துவ குணங்கள் காயத்தைப்போக்கும். சருமத்தை பளபளப்பாக்கும். தழும்புகளை மறையச்செய்யும். அதற்கு கற்றாழையை உட்கொள்வதற்கு பதிலாக சருமத்தில் வைத்து தேய்க்க வேண்டும்.
pixa bay
பற்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. மலச்சிக்கலை குணப்படுத்துகிறது. வயோதிகத்தால் ஏற்படும் சரும சுருக்கம் உள்ளிட்ட பிரச்னைகளை சரிசெய்யும். ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கும். தலைமுடி வளர்ச்சியை ஊக்கப்படுத்தும்.
pixa bay
இந்த வாரம் (நவ.24-30) வரை 12 ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று பார்ப்போம்