Chana Pulao: குழந்தைகளுக்கு ஹெல்தியான டிபன் பாக்ஸ் ரெசிபி.. டேஸ்டியான சன்னா புலாவ் இப்படி செய்து பாருங்க!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Chana Pulao: குழந்தைகளுக்கு ஹெல்தியான டிபன் பாக்ஸ் ரெசிபி.. டேஸ்டியான சன்னா புலாவ் இப்படி செய்து பாருங்க!

Chana Pulao: குழந்தைகளுக்கு ஹெல்தியான டிபன் பாக்ஸ் ரெசிபி.. டேஸ்டியான சன்னா புலாவ் இப்படி செய்து பாருங்க!

Pandeeswari Gurusamy HT Tamil
Mar 08, 2024 07:41 PM IST

சன்னா என்றாலே அது ஒரு ருசியான உணவு. அவை புரதம் நிறைந்தவை. தசைகளை கட்டியெழுப்பவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இந்த கொண்டை கடலையில் ஆண்டி ஆக்ஸிடன்ட்கள், மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. ருசியான சன்னா புலாவ் செய்வது எப்படி பார்க்கலாம்.

சன்னா புலாவ்
சன்னா புலாவ்

சன்னா புலாவ் செய்முறைக்கு தேவையான பொருட்கள்

பாஸ்மதி அரிசி - ஒரு கப்

கொண்டை கடலை - ஒரு கப்

வெங்காயம் - ஒன்று

தக்காளி - ஒன்று

கேரட் - ஒன்று

பட்டாணி - ஒரு கொத்து

எண்ணெய் - மூன்று கரண்டி

சீரகம் - ஒரு ஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்

மஞ்சள்தூள் - அரை ஸ்பூன்

மிளகாய் - ஒரு ஸ்பூன்

கொத்தமல்லி தூள் - மூன்று ஸ்பூன்

உப்பு - சுவைக்க

எலுமிச்சை சாறு - ஒரு ஸ்பூன்

சன்னா புலாவ் செய்முறை

1. பாஸ்மதி அரிசியை அரை மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

2. மேலும் கொண்டைக்கடலைக்கு தேவையான அளவு உப்பு  சேர்த்து வேக வைத்து தயாராக வைத்து கொள்ள வேண்டும் .

3. இப்போது குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்க்கவும்.

4. எண்ணெயில் சீரகத்தைச் சேர்க்க வேண்டும்.

5. பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் நிறம் மாறும் வரை வைக்கவும்.

6. பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும்.

7. அதில் பொடியாக நறுக்கிய தக்காளி, கேரட், பட்டாணி சேர்த்து வதக்க வேண்டும்.

8. சிறிது உப்பு சேர்த்து மூடி வைக்க வேண்டும்.

9. தக்காளி மென்மையாகும் வரை சமைக்க வேண்டும்.

10. பிறகு மூடியை அகற்றி மஞ்சள், மிளகாய், கொத்தமல்லி பொடியை சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

11. இப்போது முன் சமைத்த கொண்டைக்கடலையைச் சேர்த்து கலக்கவும்.

12. ஐந்து நிமிடம் கொதித்த பிறகு, முன் ஊறவைத்த பாசுமதி அரிசியை எடுத்து இந்த பாத்திரத்தில் போட வேண்டும்.

13. சிறிது கரம் மசாலா சேர்த்து நன்கு கலக்கவும்.

14. இப்போது மூடியை மூடி இரண்டு விசில் வரும் வரை விட வேண்டும்.

15. சிறிது நேரம் கழித்து குக்கரின் மூடியை அகற்றி அதன் மேல் கொத்தமல்லி இலைகளை தூவி இறக்க வேண்டும். தேவைப்பட்டால் மேலாக எலுமிச்சை பழத்தை பிழிந்து கலந்து விடலாம். அவ்வளவுதான், டேஸ்டியான சன்னா புலாவ் ரெடி.

சன்னா என்றாலே அது ஒரு ருசியான உணவு. அவை புரதம் நிறைந்தவை. தசைகளை கட்டியெழுப்பவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இந்த கொண்டை கடலையில் ஆண்டி ஆக்ஸிடன்ட்கள், மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அவற்றை உண்ண வேண்டும். கொண்டை கடலைஉணவில் சேர்த்துக் கொள்பவர்கள் காய்ச்சல், சளி போன்றவற்றைத் தவிர்க்கலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner
உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.