தேங்காய் சேர்க்காமல் ஒரு கிரேவி! டிபஃனுக்கு செம்ம காம்போ! உச்சுக்கொட்டி சாப்பிடும் சுவையில் செய்யலாமா?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  தேங்காய் சேர்க்காமல் ஒரு கிரேவி! டிபஃனுக்கு செம்ம காம்போ! உச்சுக்கொட்டி சாப்பிடும் சுவையில் செய்யலாமா?

தேங்காய் சேர்க்காமல் ஒரு கிரேவி! டிபஃனுக்கு செம்ம காம்போ! உச்சுக்கொட்டி சாப்பிடும் சுவையில் செய்யலாமா?

Priyadarshini R HT Tamil
Oct 26, 2024 04:42 PM IST

தேங்காய் சேர்க்காமல் ஒரு கிரேவி செய்யலாமா? அனைத்து டிபஃனுக்கும் செம்ம காம்போ, உச்சுக்கொட்டி சாப்பிடும் சுவையில் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேங்காய் சேர்க்காமல் ஒரு கிரேவி! டிபஃனுக்கு செம்ம காம்போ! உச்சுக்கொட்டி சாப்பிடும் சுவையில் செய்யலாமா?
தேங்காய் சேர்க்காமல் ஒரு கிரேவி! டிபஃனுக்கு செம்ம காம்போ! உச்சுக்கொட்டி சாப்பிடும் சுவையில் செய்யலாமா?

தேவையான பொருட்கள்

பெரிய வெங்காயம் – 4

பூண்டு – 25 பல்

இஞ்சி – கால் இன்ச்

பச்சை மிளகாய் – 4

கசகசா – ஒரு ஸ்பூன் (ஊறவைத்தது)

மிளகுத்தூள் – ஒரு ஸ்பூன்

கரம் மசாலாத்தூள் – ஒரு ஸ்பூன்

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

தயிர் – கால் கப் (கெட்டியானது)

கசூரி மேத்தி – சிறிதளவு

மல்லித்தழை – கொஞ்சம்

தாளிக்க தேவையான பொருட்கள்

எண்ணெய் – 4 ஸ்பூன்

பட்டை – 1

கிராம்பு – 4

ஏலக்காய் – 1

பிரியாணி இலை – 1

ஸ்டார் சோம்பு – 1

மிளகு – கால் ஸ்பூன்

செய்முறை

ஒரு மிக்ஸி ஜாரில் பெரியவெங்காய், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், முந்திரி கசகசா சேர்த்து நல்ல பேஸ்டாக அரைத்துக்கொள்ளவேண்டும்.

ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் பட்டை, கிராம்பு, ஸ்டார் சோம்பு, ஏலக்காய், பிரியாணி இலை மற்றும் மிளகு சேர்த்து தாளிக்க வேண்டும். தாளித்தவுடன் அதில் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து நன்றாக கொத்திக்கவிடவேண்டும்.

இது நன்றாக கொதித்தவுடன் அதில் மஞ்சள் தூள், கரம் மசாலாத்தூள், உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடவேண்டும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடவேண்டும்.

எண்ணெய் பிரிந்து வரும் பதம் பார்த்துக்கொள்ளவேண்டும். அப்போது தயிர் சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிடவேண்டும். நன்றாக கொதித்து வந்தவுடன் கசூரி மேத்தி தூவி இறக்கவேண்டும். மல்லித்தழை மற்றும் கசூரி மேத்தி தூவி இறக்கவேண்டும்.

இதை இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி என எதற்கு வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். இதில் காரம் இருக்காது என்பதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் ஒன்றாக இந்த கிரேவி இருக்கும். ஒருமுறை ருசித்தால், மீண்டும் மீண்டும் கட்டாயம் ருசிப்பீர்கள். அத்தனை சுவை நிறைந்ததாக இருக்கும்.

இதுபோன்ற எண்ணற்ற ரெசிபிக்கள், ஆரோக்கிய குறிப்புகள் மற்றும் தகவல்களை ஹெச்.டி தமிழ் உங்களுக்காக தொகுத்து வழங்கி வருகிறது. எனவே அரிய பல தகவல்கள் மற்றும் வித்யாசமான ரெசிபிக்களை தெரிந்துகொள்ள எங்கள் இணையப் பக்கத்துடன் இணைந்திருங்கள்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.