மணமணக்கும் மத்தி மீன் ரசம்; மழைக்கு இதமா மனம் மகிழ்ந்து சாப்பிட இதோ ரெசிபி! சூடான சாதத்துக்கு ஏற்ற ஜோடி!
மத்தி மீன் ரசம் செய்வது எப்படி என்று பாருங்கள்.
சிம்பிளான மத்தி மீன் ரெசிபியை நீங்கள் குக்கரிலே செய்து முடித்துவிடலாம். ஒன்பாட் மத்தி மீன் ரசம். இதை ரசமாக சாதத்தில் சேர்த்து சாப்பிடலாம் அல்லது சூப்பாக அப்படியே பருகலாம்.
தேவையான பொருட்கள்
சுத்தம் செய்த மத்தி மீன் – 4
இஞ்சி – அரை இன்ச்
பூண்டு – 6 பல்
(இஞ்சி-பூண்டு இரண்டையும் இடித்து எடுத்துக்கொள்ளவேண்டும்)
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
கல் உப்பு – தேவையான அளவு
எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
மல்லித்தூள் – கால் ஸ்பூன்
மலலித்தழை – ஒரு கைப்பிடியளவு
பழுத்த தக்காளி – 1
மிளகுத்தூள் – ஒரு ஸ்பூன்
பெருங்காயத் தூள் – கால் ஸ்பூன்
புளித்தண்ணீர் – கால் கப்
தாளிக்க தேவையான பொருட்கள்
எண்ணெய் – ஒரு ஸ்பூன்
கடுகு – கால் ஸ்பூன்
சீரகம் – கால் ஸ்பூன்
உளுந்து – கால் ஸ்பூன்
வரமிளகாய் – 4 (கிள்ளியது)
செய்முறை
ஒரு குக்கரில் மத்தி மீன், இஞ்சி – பூண்டு விழுது, மஞ்சள் தூள், கல் உப்பு, கறிவேப்பிலை, மல்லித்தழை, எலுமிச்சை சாறு, மிளகுத்தூள், தக்காளி, மல்லித்தூள், பெருங்காயத்தூள், புளித்தண்ணீர் என அனைத்தும் சேர்த்து, போதிய தண்ணீர் ஊற்றி 4 விசில் விட்டு எடுங்கள்.
ஒரு தாளிப்பு கரண்டியில் எண்ணெய் விட்டு, சூடானவுடன் அதில் கடுகு, சீரகம், உளுந்து, வரமிளகாய் கிள்ளி சேர்க்க வேண்டும். அனைத்தும் பொரிந்தவுடன், அதை அந்த மத்தி மீன் ரசத்தில் சேர்த்தால், சூப்பர் சுவையான மட்டுமின்றி கமகமக்கும் மத்தி மீன் ரசம் தயார்.
இந்த மழைக்கு இதமாக இதை சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும். இந்த ரசத்தை அப்படியே சூப்பாகவும் பருகலாம். ஒருமுறை ருசித்தால் மீண்டும், மீண்டும் ருசிக்க வேண்டும் என்று எண்ணுவீர்கள். வீட்டில் அனைவருக்கும் பிடிக்கும்.
மற்றொரு ரெசிபியையும் தெரிந்துகொள்ளுங்கள்
தேவையான பொருட்கள்
மல்லித்தழை – 2 கட்டு
பச்சை மிளகாய் – 15
புளி – சிறிய அளவு
உப்பு – தேவையான அளவு
பூண்டு – 10 பல்
தாளிக்க தேவையான பொருட்கள்
கடுகு – ஒரு ஸ்பூன்
எண்ணெய் – கால் கப்
உளுந்து – கால் ஸ்பூன்
வறுத்துப் பொடிக்க தேவையான பொருட்கள்
வெந்தயம் – ஒரு ஸ்பூன்
பெருங்காயத் தூள் – ஒரு ஸ்பூன்
(கடாயில் எண்ணெய் சேர்க்காமல் வறுத்து பொடித்துக்கொள்ளவேண்டும்)
செய்முறை
மல்லித்தழையை நன்றாக அலசிவிட்டு, தண்ணீரை பிழிந்து எடுத்து, ஒரு வெள்ளை துணியில் பரப்பி காயவிடவேண்டும். அது நன்றாக உலர்ந்தவுடன் எடுத்துக்கொள்ளவேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடானவுடன், கடுகு, மிளகாய், பூண்டு, புளி என அனைத்தும் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கிக்கொள்ளவேண்டும். அடுத்து உலர்ந்த மல்லித்தழையை சேர்த்துக்கொள்ளவேண்டும். இதையும் வதக்கி, எடுத்து அனைத்தையும் ஆறவிடவேண்டும்.
அடுத்து அனைத்தையும் அரைத்து, அதில் வறுத்து பொடித்த, வெந்தயம் மற்றும் பெருங்காயத் தூளை கலந்துவிடுங்கள். அவ்வளவுதான் நிமிடத்தில் தயாராகிவிடும் சூப்பர் சுவையான மல்லித்தழை – பச்சை மிளகாய் தொக்கும்.
இதை சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் இந்த மழைக்கு சுள்ளென்று இருக்கும். இதற்கு தொட்டுக்கொள்ள அப்பளம், ஊறுகாய் இருந்தாலே போதும். சூப்பர் சுவையாக இருக்கும். மழைக்கு சமையலறையில் கிடந்து அவதிப்படவேண்டாம். இதையே டிஃபனுக்கும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.
இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்