மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியது கண்டனத்துக்கு உரியது! இயக்குனர் வெற்றிமாறன் காட்டம்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியது கண்டனத்துக்கு உரியது! இயக்குனர் வெற்றிமாறன் காட்டம்!

மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியது கண்டனத்துக்கு உரியது! இயக்குனர் வெற்றிமாறன் காட்டம்!

Suguna Devi P HT Tamil
Dec 20, 2024 02:48 PM IST

அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதற்கு இயக்குனர் வெற்றிமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்

மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியது கண்டனத்துக்கு உரியது! இயக்குனர் வெற்றிமாறன் காட்டம்!
மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியது கண்டனத்துக்கு உரியது! இயக்குனர் வெற்றிமாறன் காட்டம்!

 இப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றது. மேலும் அதிக வசூலையும் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் சூரி, விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன், பவானி ஸ்ரீ, சேத்தன் மற்றும் இளவரசு உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்து இருந்தார். அரசின் அடக்குமுறைகளுக்கு எதிரான மக்கள் இயக்கம் மற்றும் அதிக தலைவரை மையமாக வைத்து இந்த படம் இயக்கப்பட்டு இருந்தது. 

 இந்நிலையில் இன்று இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்று வருகிறது, பலரும் இயக்குனர் வெற்றிமாறனை பாராட்டி வருகின்றனர். இப்படத்தில் விஜய் சேதுபதி முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும்  மஞ்சு வாரியார் உட்பட பலரும் இணைந்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளனர். படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. 

சென்னையில் வெற்றிமாறன் 

 இப்படத்தை பார்ப்பதற்காக இயக்குனர் வெற்றிமாறன் சென்னையில் உள்ள காசி திரையரங்கிற்கு சென்றார். படம் முடிந்த பின்பு செய்தியாளர்களிடம் பேசுகையில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அம்பேத்கர் குறித்து பேசியது பற்றி கேள்வி எழுப்பி இருந்தனர். இதற்கு பதில் அளித்த வெற்றிமாறன் அவர் பேசியது தவறு, அது கண்டனத்திற்குரியது எனவும் கூறினார்.

அம்பேத்கர் குறித்து பேசிய அமித்ஷா

 பாராளுமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அரசமைப்பு சட்டம் மீது விவாதம் நடந்து கொண்டிருந்தது. அப்போது பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அனைத்து எதிர்கட்சிகளும் அம்பேத்கர் பெயரை பல முறை முழக்கம் இட்டுக் கொள்வதை வாடிக்கையாக வைத்துக் கொண்டிருக்கின்றனர். 

அம்பேத்கர் பெயரை இவ்வாறு உச்சரிப்பதற்கு பதிலாக கடவுளின் பெயரை உச்சரித்தால் கூட இவர்கள் அனைவருக்கும் சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என கூறினார். இது இந்தியா முழுவதும் சர்ச்சையை கிளப்பியது. மேலும் இதற்கு எதிர்க்கட்சியினர் உட்பட பல அமைப்புகளும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும் அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் கூறி வருகின்றனர். முன்னதாக இயக்குனர் பா. ரஞ்சித் மற்றும் லப்பர் பந்து இயக்குனர் தமிழரசன் பச்சை முத்து என பல சினிமா பிரபலங்களும் இதற்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர். வெற்றி மாறனின் படங்கள் பெரும்பாலும் வெளிப்படையான அரசியலை பேசும் படங்களாகவே இருந்து வருகின்றன. இந்த நிலையில் இன்று வெளியாகியுள்ள விடுதலை படமும் கம்யூனிச சிந்தனைகளை உடைத்து பேசியுள்ளதாகவும், சமூகத்தின் அவல நிலையை அப்படியே பிரதிபலிப்பதாகவும் இருப்பதாக பல ரசிகர்கள் தெரிவித்து வந்தனர்.  

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.