என்னை மீறி ஒன்னும் பண்ண முடியாது.. சாமுண்டீஸ்வரிக்காக கார்த்திக் விட்ட சவால் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
சாமுண்டீஸ்வரி கதையை முழுவதுமாக கேட்ட கார்த்திக், என்னை மீறி ஒன்னும் பண்ண முடியாது என சிவானாண்டியிடம் சவால் விடுகிறான். கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்டில் என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம்
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சாமுண்டேஸ்வரி தனது வாழ்க்கையில் நடந்த விஷயத்தை கார்த்தியிடம் சொல்லிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
சிவனாண்டிக்கு சவால் விடும் கார்த்திக்
சாமுண்டீஸ்வரி கதையை சொல்லி முடித்ததும், ராஜராஜன் என் அப்பா அம்மாவால் சாமுண்டீஸ்வரிக்கு இப்படி நடந்ததால் அவளுக்கு வாழ்க்கை கொடுக்கணும் என்று சொல்லி அவளுடன் வந்து விட்டதாக சொல்கிறார்.
மொத்த கதையையும் கேட்ட கார்த்திக், நான் போய் அந்த சிவனாண்டிக்கு சவால் விட போறேன் என்று கிளம்பி வருகிறான். இங்கே கார்த்தியிடம் அடி வாங்கிய சிவனாண்டி முடியாமல் படுத்திருக்கிறார். சந்திரகலா அவனுக்கு உத்தடம் கொடுத்தபடி இருக்கிறாள்.
இந்த சமயத்தில் கார்த்திக் வந்து கதவை தட்ட கடைசி நொடியில் சந்திரகலா ஓடி ஒளிந்து கொள்கிறாள். இதுவரைக்கும் நீ அந்த குடும்பத்துக்கு குடைச்சல் கொடுத்த. இனிமே அந்த குடும்பத்துக்கு நான் இருக்கேன். என்னை மீறி உன்னால் ஒன்னும் செய்ய முடியாது சவால் விடுகிறான்.
அடுத்து கார்த்திக் சிவனாண்டியிடம் சவால் விடுவதை கேட்ட மயில் வாகனம், வீட்டுக்கு வந்து எல்லாரும் சாப்பிட்டு கொண்டிருக்கும் நேரத்தில் கார்த்திக் விட்ட சவாலை நேரில் பார்த்ததாகவும், கார்த்திக் செம மாஸாக பேசியதாகவும் சொல்கிறான்.
இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
கடந்த எபிசோடில் நடந்தது என்ன?
கோயிலில் நகை காணாமல் போன நிலையில், அந்த நகையை தேடும் போது சிவகாமி வீட்டின் வாசலில் ஒரு நகை கிடைக்கிறது. இதனால் ராஜா சேதுபதி, சிவகாமி தான் நகை திருடியதாக தவறாக புரிந்து கொள்கிறார்.
சிவகாமியை பார்த்து உனக்கு வேலை போட்டு கொடுத்து வீட்டில் தங்க வைத்தால் இப்படி பண்ணிட்டியேமா என்று கேட்கிறார். இதனால் அவமானம் தாங்காத சிவகாமி வீட்டுக்குள் ஓடிப்போய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறாள்.
அதன் பிறகு நாங்கள் அங்கு தனி மரமாக நின்னுட்டோம். நீயே சொல்லு குடும்பத்துல இப்படி நடந்தா எப்படி இருக்கும்? என சாமுண்டீஸ்வரி கார்த்தியை பார்த்து கேள்வி கேட்கிறாள்.
கார்த்திகை தீபம் புதிய சீசன்
தீபாவின் மறைவுடன், கார்த்திகை தீபம் முதல் சீசன் கடந்த மாதத்தின் தொடக்கத்தில் முடிவுக்கு வந்தது. இதையடுத்து புதிய கதைக்களத்துடன் இந்த தொடரின் புதிய சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இது முழுக்க கிராமத்து பின்னணியில் கொண்ட கதைகளத்தை கொண்டதாக உள்ளது.
ஜீ தமிழ் சேனலில் ரசிகர்கள் விரும்பி பார்க்கும் மற்றொரு சீரியலாக வள்ளியின் வேலன் இருந்து வருகிறது. இந்த தொடர் தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகும் மற்றொரு பிரபல சீரியலாக அண்ணா இருந்து வருகிறது. இந்த தொடர் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிப்பரப்பாகிறது.
டாபிக்ஸ்