Karthigai deepam: மீண்டும் மாஸாக வந்த தீபா.. ஐஸ்வர்யாவுக்கு வயிற்றில் புளி கரைசல்.. - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்!-zee tamil karthigai deepam serial latest today episode on september 20 2024 indicates deepa come again aiswarya shocked - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deepam: மீண்டும் மாஸாக வந்த தீபா.. ஐஸ்வர்யாவுக்கு வயிற்றில் புளி கரைசல்.. - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்!

Karthigai deepam: மீண்டும் மாஸாக வந்த தீபா.. ஐஸ்வர்யாவுக்கு வயிற்றில் புளி கரைசல்.. - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்!

Kalyani Pandiyan S HT Tamil
Sep 20, 2024 01:40 PM IST

Karthigai deepam: ஏதாவது தகவல் கிடைத்ததா என்று விசாரிக்க, மேனேஜர் இன்னும் எதுவும் கிடைக்கல. கண்டிப்பா உங்க நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும் என்று சொல்லி போனை வைத்தார். -கார்த்திகை தீபம்!

Karthigai deepam: மீண்டும் மாஸாக வந்த தீபா.. ஐஸ்வர்யாவுக்கு வயிற்றில் புளி கரைசல்..  - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்!
Karthigai deepam: மீண்டும் மாஸாக வந்த தீபா.. ஐஸ்வர்யாவுக்கு வயிற்றில் புளி கரைசல்.. - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்!
கார்த்திக்
கார்த்திக்

கீதாவை காப்பாற்ற முயற்சி செய்யும் கார்த்திக்

அதாவது, போலீஸ் தீபாவும், கீதாவும் ஒரே உருவத்தில் இருப்பது பெரிய சிக்கல். கூடிய சீக்கிரம் தீபாவை கண்டுபிடிக்கணும். துங்காவும், கீதாவை தீவிரமாக தேடிக்கிட்டு இருக்கான் என்று சொன்னாள். கார்த்திக், கீதா என்னை நம்பி வந்திருக்காங்க, அவங்களையும் காப்பாற்றணும் என்று சொன்னான்

அதன் பிறகு சக்தி, எஃப்எம் ரேடியோவிற்கு ஃபோன் போட்டு ஏதாவது தகவல் கிடைத்ததா என்று விசாரிக்க, மேனேஜர் இன்னும் எதுவும் கிடைக்கல. கண்டிப்பா உங்க நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும் என்று சொல்லி போனை வைத்தார். அதன் பிறகு கார்த்திக், போலீஸ் ரெஸ்டாரன்டில் இருந்து கிளம்ப, நர்ஸ் சக்தி அதை பார்த்து விடுகிறாள். ஆனால், அவளை கார்த்திக் கவனிக்காமல் கிளம்பி வந்து விடுகிறான். இருப்பினும், திடீரென யாரோ உன் தொடர்ந்து வந்தது போல கார்த்திக் உணர திரும்பி பார்த்தான். ஆனால், அங்கு யாரும் இல்லாததால் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ள முடியாமல் போகிறது.

 

 

களத்தில் கார்த்திக்
களத்தில் கார்த்திக்

மறுபக்கம் அபிராமி வீட்டுக்கு வந்த ஐஸ்வர்யா, வீட்டில் இருப்பது தீபாவே கிடையாது; கீதா என்ற உண்மையை போட்டுடைக்க கீதாவும் ஆமாம் என்று ஒப்புக்கொள்கிறாள். இதைக்கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இந்த நேரத்தில் கார்த்திக் தீபாவுடன் வீட்டுக்குள் நுழைய தீபாவோ, ஐஸ்வர்யா தான் தன்னை மலை உச்சியிலிருந்து தள்ளிவிட்டது என்ற உண்மையை உடைத்தாள். அதைக்கேட்ட அனைவரும் பேரதிர்ச்சி அடைகின்றனர்.

இதைக்கேட்டு தவித்த ஐஸ்வர்யா என்னை கைது பண்ணிடாதீங்க என்று அலறி துடிக்க, அது அவளது கனவு என்று தெரிய வருகிறது. இதனையடுத்து அருண் என்ன ஆச்சு என்ன உளறிட்டு இருக்க என்று கேட்க, அவனை அவள் சமாளிக்கிறாள்.

அதைத்தொடர்ந்து எஃப் எம்-ல் தீபா குறித்த அறிவிப்பு வெளியாகிறது. இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

நேற்றைய எபிசோட் அப்டேட்

Karthigai Deepam: கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய ( செப் 19 ) எபிசோட் அப்டேட் பற்றி பார்க்கலாம்.

கீதா கார்த்திக் சொல்வது அனைத்தையும் கேட்டுக் கொண்டு, தீபா நல்லவங்ககிட்ட பாதுகாப்பாக தான் இருக்கா, அவள ரவுடிகளிடமிருந்து காப்பாத்திதான் ஒருத்தர் கூட்டிட்டு போய் வச்சிருக்காங்க என்று சொன்னாள்.

ஹாஸ்பிடலில் தீபா

மறு பக்கம், நர்ஸ் சக்தி ஹாஸ்பிடலில் தீபாவை அட்மிட் செய்த பெண்மணியின் முகவரியை வாங்கிக் கொண்டு, அவளைப் பார்க்க கிளம்பி வந்தாள்.  அவள் விசார்த்த போது,அந்த பொண்ணை நான் தான் ஆஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணேன். ஆனா அவங்க சொந்தக்காரங்க யாரு என்ன என்று சொல்லிவிட்டாள். இதனால், தீபாவின் சொந்தக்காரர்கள் குறித்து தகவல் கிடைக்கும் என தேடி வந்த சக்தி ஏமாற்றம் அடைந்தாள்.

இன்ஸ்பெக்டர் சரவணன் வேறொரு கேஸ் விஷயமாக வெளியே சென்று விட்டதால், அவர் அனுப்பிய எஸ்ஐ ஒருவர், கார்த்தியிடம் வந்து அறிமுகமானார். இருவரும் சேர்ந்து தீபாவை தேட கிளம்பிச் சென்றனர்.

ரேடியோ ஸ்டேஷனில் தீபா குறித்த விஷயம்

நர்ஸ் சக்தி, தீபா பாடகி என்பதால் அவரைப் பற்றி எப்எம் ரேடியோவில் தகவல் கொடுக்கலாம் என்று சொல்லி, ஒரு எப்எம் ரேடியோ ஸ்டேஷன் வந்து, மேனேஜரை சந்தித்து பேசி அதற்கான ஏற்பாடுகளை செய்தாள். இறுதியாக தீபா குறித்த விஷயத்தை fm-யில் பதிவு செய்து தொடர்புக்கு தன்னுடைய நம்பரையும் கொடுத்தாள்.

ஜூஸ் கடைக்கு வரும் சக்தி

தீபாவை தேடி வந்த கார்த்திக் மற்றும் எஸ்ஐ, ஒரு ஜூஸ் கடைக்கு வந்து நின்ற நிலையில், சக்தியும் அதே ஜூஸ் கடைக்கு வந்தாள் ஆரம்பத்தில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாத நிலையில் கார்த்திக் கடையில் இருந்து கிளம்பும் சமயத்தில், சக்தி அவனை பார்த்து விட்டான்.

 

 

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.