தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Meenakshi Ponnunga Serial Viewers Contest Announced

Meenakshi Ponnunga - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் பார்ப்பவர்களுக்குப் போட்டி - சூப்பர் பரிசை அறிவித்த ஜீ தமிழ்

Marimuthu M HT Tamil
Jan 23, 2024 08:07 PM IST

மீனாட்சி பொண்ணுங்க சீரியலைப் பார்ப்பவர்களுக்கு போட்டியினை அறிவித்துள்ளது, ஜீ தமிழ் தொலைக்காட்சி

மீனாட்சி பொண்ணுங்க சீரியல் பார்ப்பவர்களுக்குப் போட்டி - சூப்பர் பரிசை அறிவித்த ஜீ தமிழ்
மீனாட்சி பொண்ணுங்க சீரியல் பார்ப்பவர்களுக்குப் போட்டி - சூப்பர் பரிசை அறிவித்த ஜீ தமிழ்

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழ் சின்னத்திரையில் தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக விளங்கி வருகிறது, ஜீ தமிழ். இந்தச் சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்களுக்கு மக்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

டிவி சேனலும் தொடர்ந்து மக்களுக்கு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில், தொடர்ந்து பல்வேறு மாற்றங்களைச் செய்து வருகிறது.     

சீரியலை பார்க்கும் ஜீ தமிழ் நேயர்களை மகிழ்விக்கும் வகையில், பொங்கல் பண்டிகையின்போது ’சீதா விட்டு சீதனம்’ என்ற பெயரில் போட்டி ஒன்றை நடத்தியது. அதாவது, சீதாராமன் சீரியலின் இறுதியில் கேட்கப்படும் கேள்விக்குப் பதில் அளிக்கும் 5 அதிர்ஷ்டசாலி போட்டியாளர்களைத்தேர்வு செய்து, அவர்களுக்குப் பட்டு வேட்டி, பட்டு சட்டை, பட்டுப் புடவை மற்றும் அரை சவரன் மோதிரம் ஆகியவற்றைப் பரிசாக வழங்கப்படும் என அறிவித்திருந்ததைத் தொடர்ந்து, வெற்றியாளர்களின் விவரங்கள் நேற்று புதியதாக ஒளிபரப்பாகத் தொடங்கிய ‘நினைத்தேன் வந்தாய்’ தொடரின் இறுதியில் அறிவித்து இருந்தனர்.

இதனைத்தொடர்ந்து தற்போது அடுத்த போட்டியை அறிவித்துள்ளது, ஜீ தமிழ். வின்னர் வின்னர் 5 ஸ்டார் டின்னர் என்ற பெயரில் இந்தப் போட்டி நடைபெற உள்ளது. 

அதாவது திங்கள் முதல் வெள்ளி வரை, தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள ‘’மீனாட்சி பொண்ணுங்க'' சீரியலைப் பார்த்து, அதில் கேட்கப்படும் கேள்விக்கு சரியான பதிலை அளிக்க வேண்டும்.

ஒவ்வொரு நாளும் ஐந்து போட்டியாளர்கள் வீதம் மொத்தம் ஐந்து நாட்களுக்கு 25 அதிர்ஷ்டசாலி போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவர்களுக்கு குடும்ப உறுப்பினர்களுடன் (அதிகபட்சம்  4 நபர்கள்) இணைந்து, சென்னையில் உள்ள மிகப்பெரிய ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் டின்னர் சாப்பிடும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.

இதனால் திங்கள் முதல் தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் 'மீனாட்சி பொண்ணுங்க’ சீரியலை தவறாமல் பார்த்தால் பரிசுகள் பெறலாம் என்பது தெளிவாகிறது. 
குடும்பத்தோட ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் டின்னர் சாப்பிடும் வாய்ப்பை தட்டிச் செல்லலாம். அந்த அதிர்ஷ்டசாலி நீங்களாகவும் இருக்கலாம் என்பது மட்டும் இந்தச் செய்தியின் மூலம் தெரிகிறது. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.