Karthigai Deepam: கரியை பூசிய நர்ஸ்.. தூள் தூளான துங்கா.. கார்த்தியை தேடி வந்த தீபா! - கார்த்திகை தீபம் அப்டேட்!-zee tamil karthigai deepam serial latest today promo september 16 2024 episode - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deepam: கரியை பூசிய நர்ஸ்.. தூள் தூளான துங்கா.. கார்த்தியை தேடி வந்த தீபா! - கார்த்திகை தீபம் அப்டேட்!

Karthigai Deepam: கரியை பூசிய நர்ஸ்.. தூள் தூளான துங்கா.. கார்த்தியை தேடி வந்த தீபா! - கார்த்திகை தீபம் அப்டேட்!

Kalyani Pandiyan S HT Tamil
Sep 17, 2024 12:21 PM IST

Karthigai deepam: தீபாவை தேடி வரும் கார்த்திக்.. துங்காவிற்கு காத்திருந்த ஏமாற்றம் - கார்த்திகை தீபம் அப்டேட்!

Karthigai Deepam:  கரியை பூசிய நர்ஸ்.. தூள் தூளான துங்கா.. கார்த்தியை தேடி வந்த தீபா! - கார்த்திகை தீபம் அப்டேட்!
Karthigai Deepam: கரியை பூசிய நர்ஸ்.. தூள் தூளான துங்கா.. கார்த்தியை தேடி வந்த தீபா! - கார்த்திகை தீபம் அப்டேட்!

இன்று நடக்கப்போவது என்ன?

அதாவது, கார்த்திக் ஹாஸ்பிடல் நோக்கி வர, இன்னொரு பக்கம் துங்கா ஆம்புலன்சில் கீதா என நினைத்து ஒருவரை அழைத்துச் செல்கிறான். ஒரு கட்டத்தில் ஆம்புலன்சில் இருப்பவரின் முகத்திரை விலக, அது கீதா இல்லை என தெரிந்து துங்கா தரப்பு அதிர்ச்சி அடைகிறது. இதையடுத்து அங்கிருந்து கிளம்பி மீண்டும் ஹாஸ்பிடலுக்கு அவர்கள் வருகின்றனர்.அடுத்து ஹாஸ்பிடல் வந்த துங்கா, கீதா குறித்து விசாரிக்க, அங்கிருந்த நர்ஸ் அதெல்லாம் தெரியாது என்றார்.

தீபா
தீபா

அடுத்து கார்த்திக் தீபா குறித்து விசாரிக்க, அங்கிருந்த நர்ஸ் எதுவாக இருந்தாலும் சீப் டாக்டரிடம் பேசுங்க அல்லது போலீசுடன் வாங்க என்று சொல்ல, சரவணன் நான் இன்ஸ்பெக்டர் தான் என்று சொல்லி தீபா குறித்து விசாரித்தான். அதற்கு அவர்கள், அவங்களை பத்தி எங்களுக்கும் தெரியல என்று சொல்கின்றனர். பிறகு டியூட்டியில் இருந்த நர்ஸ் கொடுத்த விவரங்களை சேகரித்து, நர்ஸ் சக்தி வீட்டிற்கு வந்து விசாரிக்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

கடந்த எபிசோடில் நடந்தது என்ன?

கார்த்திக்கிடம் அந்த பெண்மணி தீபாவை சென்னையில் உள்ள கவர்மெண்ட் ஹாஸ்பிடலில் சேர்த்து விட்டதாக சொல்ல, கார்த்திக் அங்கிருந்து கிளம்பினான். மறுபக்கம் தீபா, ஐசியூவில் இருக்க, அதே ஹாஸ்பிடலுக்கு வந்த ஐஸ்வர்யாவின் உறவினர் ஒருவர், தீபா ஐசியூவில் இருப்பதை பார்த்து ஐஸ்வர்யாவுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து அவளும் ஹாஸ்பிடலுக்கு கிளம்பி வந்தாள்.

அதேபோல் கீதாவை தேடி அலையும் துங்காவும் அதே ஹாஸ்பிடலுக்கு வர, அங்கு தீபாவை பார்த்த அவன், அவள்தான் கீதா என்று நினைத்து இவங்க பேர் கீதா, எனக்கு தெரிந்த பொண்ணு தான்.. எங்க கூட அனுப்பி வச்சிடுங்க என்று நர்ஸிடம் பாவமாக பேசினான். அதனை நம்பிய நர்ஸ் அவனுடன் தீபாவை அனுப்பி வைத்தாள்.

இதைத்தொடர்ந்து துங்கா, தனது ஆட்களுக்கு கீதா கிடைச்சிட்டா, அவளை நம்ப இடத்துக்கு கூட்டிட்டு போய் கொன்னுடலாம் என்று பேசிக் கொண்டிருந்தான். அதைக்கேட்ட நர்ஸ் தீபாவுக்கு பதிலாக வேறொரு பெண்ணை அவர்களுடன் ஆம்புலன்ஸில் அனுப்பி வைக்க முடிவு செய்தாள். துங்கா அந்த பெண்ணை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலில் இருந்து கிளம்ப, கார்த்திக் ஹாஸ்பிடல் நோக்கி வர, ஐஸ்வர்யாவும் இதே ஹாஸ்பிடலுக்கு வந்தாள்.

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.