இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான கூடுதல் வாய்ப்புகளை ஆராயும்: கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை
நியூயார்க்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வட்டமேஜை கலந்துரையாடலில் பிரதமர் மோடியுடன் உரையாடிய பின்னர் கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

பிரதமர் நரேந்திர மோடி தனது டிஜிட்டல் பார்வையால் இந்தியாவை மாற்றுவதில் கவனம் செலுத்தி வருவதாகவும், செயற்கை நுண்ணறிவு இந்திய மக்களுக்கு பயனளிக்கும் வழிகளை ஆராய்ந்து வருவதாகவும் கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
நியூயார்க்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வட்டமேஜை கலந்துரையாடலில் பிரதமர் மோடியுடன் உரையாடிய பின்னர் கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளை சந்தித்தார்.
பிரதமர் தனது டிஜிட்டல் இந்தியா பார்வை மூலம் இந்தியாவை மாற்றுவதில் கவனம் செலுத்தி வருகிறார். இந்தியாவில் தயாரிப்பதைத் தொடரவும், இந்தியாவில் வடிவமைப்பைத் தொடரவும் அவர் எங்களை ஊக்குவித்தார். எங்கள் பிக்சல் போன்களை இந்தியாவில் தயாரிப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்" என்று சுந்தர் பிச்சை கூட்டத்திற்குப் பிறகு கூறினார்.