விஜய் சேதுபதிக்கு செக் வைத்த விஜய் டிவி.. இதைப் பண்ணவே கூடாதாம்.. பிக்பாஸ் கண்டிஷன்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  விஜய் சேதுபதிக்கு செக் வைத்த விஜய் டிவி.. இதைப் பண்ணவே கூடாதாம்.. பிக்பாஸ் கண்டிஷன்

விஜய் சேதுபதிக்கு செக் வைத்த விஜய் டிவி.. இதைப் பண்ணவே கூடாதாம்.. பிக்பாஸ் கண்டிஷன்

Malavica Natarajan HT Tamil
Oct 05, 2024 03:30 PM IST

நடிகர் விஜய் சேதுபதி பிக்பாஸ் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ள நிலையில், நிகழ்ச்சி நடைபெறும் 100 நாளும் விஜய் சேதுபதி ஒரு விஷயத்தை தப்பித் தவறி கூட செய்துவிடக் கூடாது என விஜய் டிவி கண்டிஷன் போட்டுள்ளதாம்.

விஜய் சேதுபதிக்கு செக் வைத்த விஜய் டிவி.. இதைப் பண்ணவே கூடாதாம்.. பிக்பாஸ் கண்டிஷன்
விஜய் சேதுபதிக்கு செக் வைத்த விஜய் டிவி.. இதைப் பண்ணவே கூடாதாம்.. பிக்பாஸ் கண்டிஷன்

மாறிவரும் நாகரிகம், வளர்ந்து வரும் கலாச்சார மாற்றம் உள்ளிட்டவை குடும்ப உறவுமுறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. அந்த ஐடியாவை பிடித்துக் கொண்ட விஜய் டிவி, இளம் தலைமுறைகளை ஈர்க்கும் வண்ணம் பல ரியாலிட்டி ஷோக்களை அளிக்கிறது. பாடல்கள், கேம்கள், குடும்ப உறவைகளைக் கொண்டு நடத்தப்படும் ஷோக்கள் என தனித்தனி வயதினரை ஈர்க்க ரியாலிட்டி ஷோக்கள் உள்ளன.

பிக்பாஸ் தமிழ்

ஆனால், வயது வித்யாசமின்றி மொத்த குடும்பத்தையும் கட்டிப்போடும் ஒரு ரியாலிட்டி ஷோ தான் பிக்பாஸ். ஹிந்தியில் பிரபலமடைந்த இந்த ஷோவை தமிழில் கொண்டுவர நினைத்த விஜய் டிவி இதற்கான ஆங்க்கராக தேர்ந்தெடுத்தது நடிகர் கமல் ஹாசனை. காரணம் ஒரு ஷோவையும் ஒரு கருத்துகளையும் பல கோணங்களில் அலசி ஆராய்ந்து அவற்றை விளக்கி தருவது மட்டுமல்லாமல், கோலிவுட்டின் பெரும் புள்ளி ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினால் அது இன்னும் கூடுதல் ரசிகர்களை கொண்டுவரும் என்ற கணக்கு.

கமல்ஹாசன் டூ விஜய் சேதுபதி

அந்தக் கணக்கு கடந்த 7 சீசனிலும் ஒர்க் அவுட் ஆகவும் செய்தது. ஆனால், கமல் ஹாசன் கட்சி வேலைகளிலும், படப்பிடிப்புகளில் பிஸியாக இருந்ததுடன், கடந்த சீசனில் பிரதீப்பை வெளியேற்றியது, மாயா உடனான வதந்திகள் என நிகழ்ச்சிக்கு பல பிளாக் மார்க்குகள் இருந்தது.

இதை அனைத்தையும் ஒன்று சேர்த்து தற்போது பிக்பாஸ் 8ஆவது சீசனுக்கு விஜய் சேதுபதியை தொகுப்பாளராக அறிவித்துள்ளது விஜய் டிவி நிர்வாகம். இதுதொடர்பான ப்ரமோக்களில் ஆட்டமும் புதுசு ஆளும் புதுசு என வெளியான வசனங்கள் ரசிகர்களுக்கு கூடுதல் எனர்ஜியையும் ஆர்வத்தையும் அளித்துள்ளது.

விஜய் சேதுபதி என்ன செய்ய வேண்டும்?

புதிய தொகுப்பாளரான விஜய் சேதுபதி நிகழ்ச்சியில் எப்படி நடந்து கொள்ள வேண்டும். அங்கு என்னென்ன சிக்கல்கள் உள்ளது, அதை எப்படி சமாளித்து பதிலளிக்க வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள் என்பதை அவர்களே ப்ரமோ வழியாக வெளிப்படுத்துகின்றனர். இதனால் இந்த சூடு பறக்கும் ஆட்டத்திற்கு விஜய் சேதுபதி எப்படி ஒத்து வருவார் அவர் அனைத்து போட்டியாளர்களையும் தாக்குப் பிடிப்பாரா,குரூப்பிசம் விவகாரத்தில் எப்படி தாக்குப் பிடிப்பார் என்பதைக் காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.

விஜய் சேதுபதிக்கு கண்டிஷன்

இந்நிலையில், நாளை முதல் விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 8 தொடங்க உள்ளது. இதற்கான போட்டியாளர்கள் யாராக இருப்பார்கள் என மக்கள் யோசித்துவரும் நிலையில், விஜய் சேதுபதி யோசிக்கவே முடியாத ஒன்றை கண்டிஷனாக கொடுத்துள்ளது விஜய் டிவி.

அதாவது, விஜய் சேதுபதி சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவ்வாக உள்ள நபர். இவர் நட்பு ரீதியாக பலரது படங்களுக்கு புரொமோஷன் செய்து வருவார். ஆனால், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி நடக்கும் 100 நாட்களும் விஜய் சேதுபதி தப்பித் தவறி கூட எந்தப் படத்தையும் புரொமோட் செய்யக் கூடாது என விஜய் டிவி கண்டிப்பாக சொல்லியுள்ளதாம்.

இது உண்மையாக இருந்தால், இவரது பங்களிப்பால் வெளியே தெரியும் பல சிறு பட்ஜெட் படங்கள் பாதிக்கப்படும் என சினிமா ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

Whats_app_banner
தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.