தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kazan Khan: மாரடைப்பால் மரணமடைந்த கசான் கான் யார்? 23 வருடங்களில் அவர் நடித்த படங்கள் இவ்வளவா?

Kazan Khan: மாரடைப்பால் மரணமடைந்த கசான் கான் யார்? 23 வருடங்களில் அவர் நடித்த படங்கள் இவ்வளவா?

Aarthi V HT Tamil
Jun 13, 2023 12:51 PM IST

நடிகை கசான் கான் தென்னிந்திய திரையுலகில் 23 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய இவர் 54 படங்கள் மேல் நடித்து இருக்கிறார்.

மறைந்த கசான் கான்
மறைந்த கசான் கான்

ட்ரெண்டிங் செய்திகள்

பின்பு கோலிவுட் திரையுலகில் விஜய், சரத்குமார், சத்யராஜ் போன்றவர்களுடன் நடித்து இருந்தார். விஜயகாந்துடன் பல படங்களில் நடித்திருக்கிறார். அதே போல் மலையாளத்தில் மம்மூட்டி, மோகன்லால் உள்ளிட்டோர் படங்களில் வில்லனாகவும் நடித்து உள்ளார்.

தமிழில் இவர் கலைஞன், வேடன், சேதுபதி ஐபிஎஸ், என் ஆசை மச்சான், சிந்து நதி, டூயட், வல்லரசு, உள்ளிட்ட படங்களில் சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார். குறிப்பாக பத்ரீ, பிரியமானவளே படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். பெரும்பாலும் இவர் ஏற்று நடித்தது வில்லன் வேடம் தான்.

தனது அற்புதமான நடிப்பின் மூலம் மக்களுக்கு நெருக்கமானவர். இவர் வில்லன் வேடத்துக்கு ஏற்றவர் என ரசிகர்கள் பலரும் கூறினர். ஒரு காலத்தில் தென்னிந்தியாவின் அழகான வில்லன் என்று அழைக்கப்பட்டார். 

1992 இல் தனது வாழ்க்கையைத் தொடங்கிய கஜன் கான், கடைசியாக 2015 இல் லைலா ஓ லைலா திரைப்படத்தில் காணப்பட்டார். இதைத் தொடர்ந்து பிசினஸில் ஆர்வம் காட்டினார் கசான் கான். அவர் தன்னை தேடி வந்த பட வாய்ப்புகளையும் ஏற்கவில்லை என கூறப்படுகிறது. திரையுலகில் இருந்து ஒரேயடியாக விலகி கொண்டார்.  தென்னிந்திய திரையுலகில் 23 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய இவர் 54 படங்கள் மேல் நடித்து இருக்கிறார்.

இதனிடையே இவர் மாரடைப்பு காரணமாக நேற்று ( ஜூன் 12 ) உயிரிழந்தார். இந்த தகவலை பிரபல மலையாள தயாரிப்பாளர், என்.எம்.பாதுஷா சமூக வலைதளத்தின் மூலம் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து ரசிகர்கள், மற்றும் பிரபலங்கள் இவருக்கு தங்களுடைய இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

கசான் கானின் திடீர் மறைவுக்கு சினிமா கலைஞர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்