நளினிமா இல்லனா நா என்ன ஆகியிருப்பேனோ.. கூட இருக்க எல்லார்கிட்டயும் அவங்க சொல்லுறது இதுதான்..மனம் திறந்த மதுமிதா
நாளைக்கு டெலிவரினா இன்னைக்கு வரைக்கும் ஒர்க் பண்ணனும்.. டெலிவரினா ஸ்பெஷலா.. அம்மா பொருத்தவரைக்கும் நமக்கு சொல்லித் தர விஷயங்கள் எல்லாம் அப்படி இருக்கும். ஒரு பெண் தன்னை இரும்பு மாதிரி வச்சுக்கணும்னு நினைப்பாங்க. 24 *7 வேலை பார்க்கணும்.

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் நடிகர் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் மதுமிதா. இதில் ஜாங்கிரி என்ற நகைச்சுவை கதாபாத்திரத்தில் அவர் நடித்து இருந்தது ரசிகர்களிடையே பாராட்டை பெற்று கொடுத்தது. முதல் படம் இவருக்கு கை கொடுத்ததால் கோலிவுட்டில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. இவர் அடுத்தடுத்து இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஞ்சனா 2, ராஜா ராணி, விஸ்வாசம், ஸ்கெட்ச் உள்ளிட்ட படங்களில் காமெடி வேடங்களில் நடித்து இருந்தார். தொடர்ந்து பல படங்களில் நடித்து நடித்து வரும் மதுமிதா Rednool யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் மூத்த நடிகை நளினி குறித்தான தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அது குறித்து இங்கு பார்க்கலாம்.
வீட்ல இருந்தா ஒரு ரூபா யாரும் தர மாட்டாங்க.
நளினி மேடம் இப்ப வரை உங்களுக்கு எவ்வளவு வெல்விஷராக இருக்கிறார் என்றால் உங்கள் ப்ரெக்னன்ட் டைமில் எவ்வளவு உங்களை கேர்ஃபுல்லாக இருக்கச் சொன்னார்கள் என நெறியாளர் கேட்டதற்கு.. நிறைய சொன்னாங்க.. நாளைக்கு டெலிவரினா இன்னைக்கு வரைக்கும் ஒர்க் பண்ணனும்.. டெலிவரினா ஸ்பெஷலா.. அம்மா பொருத்தவரைக்கும் நமக்கு சொல்லித் தர விஷயங்கள் எல்லாம் அப்படி இருக்கும். ஒரு பெண் தன்னை இரும்பு மாதிரி வச்சுக்கணும்னு நினைப்பாங்க. 24 *7 வேலை பார்க்கணும் அவங்களுக்கு ஓகேவா.. வாய்ப்பு வந்தா விடக்கூடாது.. வீட்ல இருந்தா ஒரு ரூபா யாரும் தர மாட்டாங்க.
ப்ரெக்னன்சி அப்போ வொர்க் பண்ணு பாப்பா.. ஒர்க் பண்ணி தான் ஆகணும் போ அப்படீன்னு வாங்க.. அம்மா கால் வீங்கிடுச்சு அம்மா அப்படின்னா ஆமா வீங்கு ப்ரெக்னன்ட்டா இருக்க இல்ல.. வீங்கும் சுடு தண்ணில கால் வை.. சரியா போயிடும் அப்படின்னு வாங்க.. அம்மா மூணு மாச குழந்தை கூட்டிட்டு போறேன் மா.. கூட்டிட்டு போ.. நீ என்ன நினைக்கணும் தெரியுமா.. பாத்தியா அஞ்சு மாசத்திலேயே உன் குழந்தை பிளைட்ல பறக்கிறான்.. அதில் இருக்கும் பாசிட்டிவிட்டி அந்த மாதிரி விஷயங்கள் தான் சொல்லுவாங்க..
