HBD P. Vasu: சென்டிமென்ட் நாயகன்.. கலைமாமணி விருதிற்கு சொந்தக்காரர் பி.வாசு
இயக்குநர் பி.வாசு இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
இயக்குநர் பி.வாசு
இயக்குநர் பி.வாசு, 1954 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி கேரளாவில் பிறந்தார். இவரின் தந்தை எம்.ஜி.ஆர் மற்றும் என்.டி.ஆர் ஆகியோரிடம் ஒப்பனை கலைஞராக பணியாற்றியவர்.
தமிழ்நாட்டில் ஒப்பனை சங்கத்தின் தலைவராக ஆனார். 30 வருடங்கள் இந்தப் பணியைச் செய்து வந்த அவர் தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் சுமார் 25 படங்களைத் தயாரித்தார். பி.வாசுவின் மாமா சினிமா துறையில் ஒளிப்பதிவாளராக இருந்ததால், வாசுவின் அப்பா, வாசுவின் மாமா எம்.சி.சேகருடன் சேர்ந்து 150 படங்களில் பணியாற்றினார்.
வாசு தனது பள்ளிப் படிப்பை சென்னை வெஸ்லி உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். வாசுவுக்கு நான்கு உடன் பிறப்புகள் உள்ளனர். பின்னர் சினிமாவில் சி.வி.ஸ்ரீதரிடம் உதவி இயக்குநராக சேர்ந்ததில் இருந்து அவரது வாழ்க்கை தொடங்கியது.