’அப்படி செய்து இருக்க கூடாது’ - மணிமேகலை vs ப்ரியங்கா பஞ்சாயத்திற்கு தீர்ப்பு சொல்லும் பிக் பாஸ் போட்டியாளர்
மணிமேகலை vs ப்ரியங்கா பஞ்சாயத்து தொடர்பாக பிக் பாஸ் போட்டியாளர் விஷால் தனது கருத்தை தெரிவித்து உள்ளார்.
மக்களின் விருப்பமான நிகழ்ச்சியில் ஒன்று, குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் சமீபத்தில் தொகுப்பாளர் மணிமேகலைக்கும் பங்கேற்பாளர் பிரியங்காவிற்கும் இடையே மோதல் வெடித்து சோசியல் மீடியா வரை சென்றது. இதனால், பலரும் இவ்விவகாரம் தொடர்பாக கருத்துகளை பகிர்ந்து வந்தனர்.
அந்த வகையில் மணிமேகலை செய்தது தவறு என்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கும் விஷால் தனது சக போட்டியாளர்களுடன் உரையாடி கொண்டு உள்ளார்.
யார் மேல் தவறு
அவர் பேசுகையில், “ ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்னை இருக்கும். அதை அவர் வெளியில் சொன்னால், அது வேறு விதமாக மாறிவிடும். எனவே இது தேவையில்லாத ஒன்று.
இப்போது இங்கு கூட பிக் பாஸ் நிகழ்ச்சியில் நாம் இருக்கிறோம். அதில் நமக்குள் 1000 பிரச்னைகள் இருக்கலாம். ஆனால் அதை வெளியே சொல்ல கூடாது. மக்களை எப்படி என்டர்டெயின்மென்ட் செய்ய வேண்டும் என யோசிக்க வேண்டும். அது போல தான் மணிமேகலையும் அந்த நிகழ்ச்சியில் நடந்த சம்பவங்களை வெளியே சொல்லியிருக்க கூடாது.
அவர் சொல்லிவிட்டார் ஆனால் ப்ரியங்கா அதை கண்டு கொள்ளவில்லை. அது ரொம்ப நல்ல விஷயம். மணிமேகலை இதை பற்றி பேசியிருக்க கூடாது என்று பின்னாளில் யோசிப்பார் “ என்றார்.
மணிமேகலை பேச்சு
முன்னதாக நிகழ்ச்சியில் இருந்து விலகியது தொடர்பாக மணிமேகலை பேசுகையில், “ மிகுந்த நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் நான் எப்பொழுதும் எனது 100% முயற்சிகளையும் கடின உழைப்பையும் குக் வித் கோமாளிக்கு கொடுத்திருக்கிறேன். 2019 ஆம் ஆண்டு, நவம்பரில் இருந்து குக் வித் கோமாளி என்னும் ஸ்ட்ரெஸ் பஸ்டர் நிகழ்ச்சி தொடங்கியது. அப்போது இருந்தே என் உழைப்பைத் தந்திருக்கிறேன்.
சுயமரியாதை முக்கியம்
ஆனால், சுய மரியாதையைவிட முக்கியமானது எதுவுமில்லை! என் வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் நான் அதைக் கண்டிப்பாகப் பின்பற்றுகிறேன். புகழ், பணம், தொழில், வாய்ப்புகள் அல்லது எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. சுய மரியாதை என்று வரும்போது எல்லாமே இரண்டாம் பட்சம்தான். அதனால் நான் குக் வித் கோமாளி சீசன் 5ல் இருந்து விலகுகிறேன்.
இந்த சீசனில் மற்றொரு பெண் தொகுப்பாளர் ஆதிக்கம் செலுத்தினார். குறிப்பாக தொகுப்பாளராக இருக்கும் ஒருவர் இந்த குக் வித் கோமாளி சீசன் 5ன் படி, நிகழ்ச்சியின் சமையல்காரராக செயல்பட வேண்டும். ஆனால், அவர் அதை அடிக்கடி மறந்து விடுகிறார். வேண்டுமென்றே என்னை வேலையைச் செய்யவிடாமல் தடுத்து, எனது ஆங்கரிங் என்னும் நெறியாள்கையில் குறுக்கிடுகிறார்.
நமது உரிமைகளைக்கேட்பதும், கவலையை எழுப்புவதும்கூட இந்த குக் வித் கோமாளி சீசன் 5ல் குற்றமாகிவிடும். ஆனால், என் மனது எப்போதும் எது சரியானதோ அதற்காக குரல் எழுப்பும். நான் யாரைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. பல எதிர்மறை மற்றும் சிலரின் ஆதிக்கம் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியின் அசல் தன்மையை மறைக்கிறது. இது நான் முன்பு வேலை செய்து மகிழ்ந்த அதே குக் வித் கோமாளி நிகழ்ச்சி அல்ல. எனவே, நான் இனி அதன் பகுதியாக தொடரமாட்டேன் " எனக் குறிப்பிட்டார்.
பொறுப்புத் துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்