ஒரு டாஸ்குக்காக இப்படியா.. விஜே விஷால் செய்த சம்பவம்.. ஷாக்கான பெண் போட்டியாளர்கள்.. புகழ்ந்து தள்ளும் நெட்டிசன்கள்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ஒரு டாஸ்குக்காக இப்படியா.. விஜே விஷால் செய்த சம்பவம்.. ஷாக்கான பெண் போட்டியாளர்கள்.. புகழ்ந்து தள்ளும் நெட்டிசன்கள்!

ஒரு டாஸ்குக்காக இப்படியா.. விஜே விஷால் செய்த சம்பவம்.. ஷாக்கான பெண் போட்டியாளர்கள்.. புகழ்ந்து தள்ளும் நெட்டிசன்கள்!

Divya Sekar HT Tamil
Oct 24, 2024 09:26 AM IST

விஜே விஷால் நடனம் ஆட பெண்கள் அணியும் ஆடையை உடுத்தி இந்த டாஸ்க்காக தனது மீசையை எடுத்து பெண் போல வேடமிட்டு நடனம் ஆடினார். இந்த வீடியோ சமூக வலைதள பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஒரு டாஸ்குக்காக இப்படியா.. விஜே விஷால் செய்த சம்பவம்..  ஷாக்கான பெண் போட்டியாளர்கள்.. புகழ்ந்து தள்ளும் நெட்டிசன்கள்!
ஒரு டாஸ்குக்காக இப்படியா.. விஜே விஷால் செய்த சம்பவம்.. ஷாக்கான பெண் போட்டியாளர்கள்.. புகழ்ந்து தள்ளும் நெட்டிசன்கள்!

உணவு சமைத்து தருவது, வாடிக்கையாளர்களை அழகுபடுத்துவது என நேற்று பிக்பாஸ் வீடே பரபரப்பாக காணப்பட்டது. இதையடுத்து, பிக்பாஸ் வீடு ஃபைவ் ஸ்டார் ஹோட்டலாக மாறியுள்ளது. அதில் ஹோட்டல் பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் என இரு அணி உள்ளது. இங்கு வாடிக்கையாளர்கள் கேட்பதை பணியாளர்கள் செய்து தர வேண்டும் என பிக்பாஸ் விதிமுறையை அமல்படுத்தியுள்ளது.

ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் டாஸ்க்

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 இல் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. முதலில் பெண்கள் அணியினர் ஹோட்டல் பணியாளர்களாக செயல்பட்டு அங்கு வாடிக்கையாளர்களாக வந்த ஆண்களை முடிந்த அளவு கடுப்பேத்தி இருப்பர்.

இந்நிலையில், தற்போது ஆண்கள் அணி ஹோட்டல் பணியாளர்களாக செயல்பட்டு வருகின்றனர். பிக்பாஸ் 5 ஸ்டார் ஹோட்டல் போட்டியில், பிக்பாஸ் ஹோட்டல் குறித்து புகார்களை தெரிவிக்குமாறு பிக்பாஸ் அறிவுறுத்தினார். இதையடுத்து அங்கு வைக்கப்பட்ட பலகை முழுவதிலும் போட்டியாளர்கள் புகார்களை எழுதினர்.

மனமுடைந்த முத்து

மேலும், சரியான ஒத்துழைப்பை தர ஹோட்டல் நிர்வாகம் தவறிவிட்டது, ஹோட்டல் சுத்தமாக பராமரிக்கப்படவில்லை என பெண்கள் தரப்பிலிருந்து புகார்கள் வந்த வண்ணம் இருக்கையில், முத்துக்குமரன் வாடிக்கையாளர்களை புரிந்து கொள்ள அவகாசம் வேண்டும் எனக் கூறினார். இதையடுத்து பிக்பாஸ் 5 ஸ்டார் ஹோட்டல் மீது வந்த புகார்களை கருத்தில் கொண்டு, ஹோட்டலின் மேனேஜரை மாற்ற பிக்பாஸ் முடிவு செய்துள்ளது. இதனால் மனமுடைந்த முத்து வேண்டுமென்ற செய்துள்ளனர் என புலம்பி தள்ளினார்.

இந்நிலையில் நேற்று பிக் பாஸ் வீட்டில் பெண்கள் அணியினர் கெஸ்ட் ரோலில் வந்து ஆண்கள் அணியினரை கடுப்பேத்தி விளையாடினர். இந்நிலையில் இந்த பைவ் ஸ்டார் ஹோட்டல் டாஸ்க்காக விஜே விஷால் ஏற்கனவே தாடியை எடுத்து டெடிகேஷன் ஆக இந்த டாஸ்கை விளையாடினார்.

விஜே விஷால் அசத்தல்

இந்நிலையில் முத்துக்குமரன் இன்னும் நமக்கு 150 ரூபாய் வந்தால் போதும் ஆயிரம் ரூபாய் வந்துவிடும் யாராவது சென்று நடனம் ஆடுகிறீர்களா என்று கேட்கிறார். அதாவது இந்த டாஸ்க்கில் வந்த கெஸ்ட்-யை ஹோட்டல் வாடிக்கையாளர்களான ஆண்கள் அணி எண்டர்டைன் செய்ய வேண்டும். அப்போது பெண்கள் அணி அவர்களின் திறமையை பார்த்து பணம் கொடுப்பார்கள். எனவே விஜே விஷால் நான் ஆடுகிறேன் என சொல்ல அதற்கு முத்துக்குமரன் நீ ஆடினால் கண்டிப்பாக பணம் கிடைக்கும். எனவே நீ நடனம் ஆடினால் சரியாக இருக்கும் என சொல்கிறார்.

பின்னர் விஜே விஷால் நடனம் ஆட பெண்கள் அணியும் ஆடையை உடுத்தி இந்த டாஸ்க்காக தனது மீசையை எடுத்து பெண் போல வேடமிட்டு நடனம் ஆடினார். இவருடன் பெண்களும் சேர்ந்து நடனம் ஆடியது செம வைப்பாக இருந்தது.இவரின் இந்த டெடிக்கேஷன்க்காகவே பெண்கள் பணத்தை வாரி இறைத்தனர். விஜே விஷால் தனது பெஸ்ட்டை இந்த டாஸ்க்குகாக கொடுத்துள்ளார். தற்போது விஜே விஷால் ஆடிய அந்த நடனம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பலர் ஒரு டாஸ்க்காக இவ்வளவு டெடிகேஷன் கொடுத்த விஜே விஷால் உண்மையில் நல்ல என்டர்டைனர் என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றன.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.