தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Vj Maheswari About Azeem Victory In Bigg Boss

Azeem: தவறான உதாரணம்… அசீம் வெற்றியால் கடுப்பான சக போட்டியாளர்

Aarthi V HT Tamil
Jan 24, 2023 12:34 PM IST

பிக் பாஸில் அசீம் வெற்றிப்பெற்றது தவறான உதாரணம் என சக போட்டியாளரான விஜே மஹேஸ்வரி குற்றம் சாட்டியுள்ளார்.

அசீம்
அசீம்

ட்ரெண்டிங் செய்திகள்

ஒரு பக்கம் அவர் யாருக்கு பிரச்னை என்றாலும் ஓடி சென்று உதவி செய்தாலும், சண்டை என்றால் அடுத்தவர்களை தரக்குறைவாக பேசுவது, திருநங்கை ஷிவினை கேலி செய்தது, விக்ரமனை ஒருமையில் பேசியது, அமுதவாணனிடம் எகிறியது, ரக்சிதாவை வேஸ்ட் என சொல்லியது என அவர் செய்த தவறை சொல்லிக்கொண்டே போகலாம். இது எல்லாம் மக்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அதனால் அசீம் வெற்றி பெற வாய்ப்பே இல்லை என இருந்தது.

இவருக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என சமூக வலைத்தளத்தில் ஹேஷ் டேக் கூட ட்ரெண்டானது.

ஒரு பக்கம் இவருக்கு எதிர்ப்புகள் வந்தாலும், மறு பக்கம் அவரை ரசிக்க ஒரு தனி கூட்டம் இருக்கிறது. இதன் விளைவாக அசீம், பிக் பாஸ் 6 டைட்டில் பட்டத்தை வென்றுவிட்டார்.

விக்ரமன் அல்து ஷிவின் தான் வெற்றி பெற வேண்டும் என்று அதிகமான ரசிகர்கள் தங்களுடைய விருப்பங்களை தெரிவித்து வந்தனர். ஆனால் நடந்தது என்னவோ வேறு.

இதனால் ரசிகர்கள் பலரும் பிக் பாஸை திட்டி தீர்த்து வருகின்றனர். இதன் காரணமாக #BoycottVijayTV என்ற ஹேஷ் டேக் உருவாக்கி இது நியாயமா? அப்போ பிக் பாஸ் வீட்டில் சண்டை போட்டால் டைட்டில் கிடைக்குமா? என கேள்வி எழுப்பி வருகின்றனர். விக்ரமன் தான் ரியல் வின்னர் என ரசிகர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:

இந்த நிலையில் பிக்பாஸ் டைட்டில் வின்னராக அசீம் வெற்றி பெற்றது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் இது குறித்து செய்திகள் வெளியாகி உள்ளன.

அந்த வகையில் முன்னணி ஊடகம் ஒன்று அசீமுக்கு டைட்டில் பட்டம் கொடுத்தது தவறான முன்னுதாரணம் என பதிவு செய்யப்பட்ட கட்டுரையை, விஜே மஹேஸ்வரி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.

அசீமுக்கு எதிராக விஜே மஹேஸ்வரி பகிர்ந்துள்ள பதிவை பார்த்து நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். அசீமின் பெரும் ரசிகர் பட்டாளத்துக்கு எதிராக அவர் பேசுவதற்கு தனி துணிவு வேண்டும் எனவும் கூறுகின்றனர்.

 

IPL_Entry_Point

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்