பொய்யான புன்னகையுடன் இருந்திருப்பேன்.. கடவுளுக்கு நன்றி.. ஐஸ்வர்யா ராயுடனான பிரேக் அப் குறித்து பேசிய விவேக் ஓபராய்
பொய்யான புன்னகையுடன் இருந்திருப்பேன்.. கடவுளுக்கு நன்றி.. ஐஸ்வர்யா ராயுடனான பிரேக் அப் குறித்து பேசிய விவேக் ஓபராய்
பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் தனது வாழ்க்கையில் பல வெற்றி தோல்விகளைக் கண்டவர். மன உளைச்சல் மற்றும் பலநேரம் படங்கள் ஓடாதபோது, அவர் பல வாழ்க்கைப் பாடங்களைப் பெற்றிருக்கிறார். அவற்றை அவர் மக்களுடன் அவ்வப்போது பேட்டிகள் மூலம் பகிர்ந்து கொள்கிறார்.
இப்போது, ஒரு சுவாரஸ்யமான பாட்காஸ்டில், விவேக் ஓபராய் தன் வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதில் மகிழ்ச்சி அடைவது பற்றிக் கூறினார். இல்லையெனில் அவரே உருக்குலைவு ஆகியிருக்கிறார். அபிஷேக் பச்சனை பாராட்டிய பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய், சல்மான் கான் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோரைப் பற்றியும் பேசினார்.
டாக்டர் ஜெய் மதனின் யூடியூப் சேனலில், விவேக் ஓபராய் வாழ்க்கை தொடர்பான சில நல்ல மற்றும் கெட்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். அதில் விவேக் ஓபராய்க்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் அவர் சில பெயர்களைக் கேட்டு ரியாக்ட் செய்ய வேண்டும்.
ஐஸ்வர்யா ராய் மற்றும் சல்மான் கான் பற்றி விவேக் ஓபராய் பேசியது:
அதன்படி, விவேக் ஓபராயின் தந்தை சுரேஷ் ஓபராயின் பெயர் அவர் முன்னால் உச்சரிக்கப்பட்டது. அதனைக்கேட்டபின், அது தனக்கான உத்வேகம் என்று சொன்னார், விவேக் ஓபராய். மனைவி பிரியங்கா பெயரை சொல்லி, அதுகுறித்த அவரது ரியாக்ஷன் கேட்கப்பட்டது. அதற்கு விவேக் ஓபராய், ‘முழுக்க காதல் மட்டுமே’ எனப் பதில் அளித்தார்.
நடிகர் சல்மான் கான் பெயர் வந்தபோது விவேக் ஓபராய், "கடவுள் அவரை ஆசிர்வதிக்கட்டும்" என்று கூறினார். அடுத்து ஐஸ்வர்யா ராய் பற்றி கேட்கப்பட்டபோது, ‘அவரையும் கடவுள் ஆசிர்வதிக்கட்டும்’ என்று விவேக் கூறினார்.
அடுத்து அபிஷேக் பச்சனைப் பற்றி கேட்கப்பட்டபோது, "அவர் இதயத்தில் மிகவும் நல்லவர். அவர் மிகவும் நல்ல பையன்’’ என வெகுவாகப் பாராட்டினார், விவேக் ஓபராய்.
ஐஸ்வர்யா ராய்யுடனான காதல் பற்றி பேசிய விவேக் ஓபராய்:
விவேக் ஓபராய் - ஐஸ்வர்யா ராய்யும் 2000-ன் முற்பகுதியில் காதலித்ததாகக் கூறப்படுகிறது. ஐஸ்வர்யா ராயுடனான தனத்ஹு காதல் முறிவை கடந்து வந்துள்ளார், விவேக் ஓபராய். இவரது கதைகள் பலமுறை பொதுவெளியில் உலாவியிருக்கின்றன. இருப்பினும், விவேக் ஓபராய் பேசுகையில், செலிபிரிட்டி என்பதன் கொடுமை என்னவென்றால், உங்கள் காதல் முறிவு செய்தி எங்கும் பரவுகிறது என ஆதங்கப்பட்டார். மேலும், ஒருவரை விட்டு வெகு தூரம் தான் வந்துவிட்டதாகவும் கூறுகிறார்.
அந்தக் காதல் தோல்வி நேரத்தில் கடவுள் தனது பிரார்த்தனையை கேட்கவில்லை என்றும், அதனால் தான் தற்போது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் விவேக் ஓபராய் மகிழ்ச்சியடைகிறார்.
இப்போது ஐஸ்வர்யா ராய் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறாள் என்றும்; ஒரு நல்ல வாழ்க்கைத் துணையைக் கண்டுபிடித்திருக்கிறாள் எனவும் விவேக் ஓபராய் தெரிவித்தார். மேலும், இதுகுறித்து அவர் கூறுகையில், ’’எனது சொந்த அனுபவத்தில் இருந்து சொல்கிறேன். சில நேரங்களில் நாம் தவறான உறவில் இருக்கிறோம். உங்களைப் பயன்படுத்தும் உறவில், அவர்கள் உங்களை மதிக்கமாட்டார்கள். உங்கள் சுய மதிப்பை நீங்கள் அங்கீகரிக்காததால் நீங்கள் அத்தகைய உறவில் விழுகிறீர்கள்’’ எனத் தெரிவித்தார்.
அதேபோல், அந்த கடினமான கட்டத்தை கடந்து சென்றதை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்? என்ற கேள்விக்கு, அவர் கூறுகையில், "ஒருவேளை நானும் ஒரு போலி நபராக மாறியிருக்கலாம். அவர் ஒரு போலி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தார். பொய்யான புன்னகை கொண்ட மக்கள் மத்தியில் நானும் பொய்யானவனாக மாறியிருப்பேன். இப்போது மக்கள் என்னை ட்ரோல் செய்தால் எனக்கு கவலையில்லை. ஏனென்றால் வாழ்க்கையின் நோக்கம் எனக்குத் தெரியும்’ என நடிகர் விவேக் ஓபராய் பதிலளித்தார்.
டாபிக்ஸ்