அப்போ சல்மான் கான்..இப்போ ஷாருக்கான்! ரூ. 50 லட்சம் தராவிட்டால்..போலீசுக்கே வந்த கொலை மிரட்டல் போன்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அப்போ சல்மான் கான்..இப்போ ஷாருக்கான்! ரூ. 50 லட்சம் தராவிட்டால்..போலீசுக்கே வந்த கொலை மிரட்டல் போன்

அப்போ சல்மான் கான்..இப்போ ஷாருக்கான்! ரூ. 50 லட்சம் தராவிட்டால்..போலீசுக்கே வந்த கொலை மிரட்டல் போன்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Nov 07, 2024 06:05 PM IST

பாலிவுட் கான்களில் ஒருவரான சல்மான் கானுக்கு சமீபத்தில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுதொடர்பாக சில கைதும் செய்யப்பட்டனர். தற்போது மற்றொரு கான் நடிகரான ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. போலீசுக்கே வந்த கொலை மிரட்டல் போன் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அப்போ சல்மான் கான்..இப்போ ஷாருக்கான்! ரூ. 50 லட்சம் தராவிட்டால்..போலீசுக்கே பரந்த கொலை மிரட்டல் போன்
அப்போ சல்மான் கான்..இப்போ ஷாருக்கான்! ரூ. 50 லட்சம் தராவிட்டால்..போலீசுக்கே பரந்த கொலை மிரட்டல் போன் (PTI)

கிரிமினல் வழக்குப்பதிவு

பாலிவுட் நடிகர் ஷாருக்கானைக் கொல்ல திட்டமிட்டுள்ளதாக எச்சரித்து, போலீஸ் லேண்ட்லைன் எண்ணுக்கு மிரட்டல் வந்ததை அடுத்து, அடையாளம் தெரியாத நபர் மீது மும்பையில் உள்ள பாந்த்ரா போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஐபிசி பிரிவு 308 (4) மற்றும் 351 (3)(4) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மிரட்டல் தொடர்பாக சைபர் காவல் நிலையத்துடன் இணைந்து போலீஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

சமீபத்தில் பாலிவுட் டாப் நடிகரான சல்மான் கானுக்கு இதே போன்ற மிரட்டல்கள் வந்ததை தொடர்ந்து, தற்போது ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. போனில் அழைத்து மிரட்டல் விடுத்தவரை கண்டுபிடித்து நடிகர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

ரூ. 50 லட்சம் தருமாறு மிரட்டல்

மும்பை பந்த்ரா காவல் நிலையத்துக்கு வந்த அழைப்பில், ரூ. 50 லட்சம் தராவிட்டால் ஷாருக்கானை கொலை செய்வதாக மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டபோதிலும், கைது நடவடிக்கைகள் எதுவும் நடக்கவில்லை.

இந்த மிரட்டல் அழைப்பு சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் வந்திருப்பதாக மும்பை போலீசார் கண்டறிந்துள்ளனர். இதையடுத்து போலீஸ் குழு ராய்ப்பூருக்கு விசாரணைக்காக விரைந்துள்ளது.

சல்மான் கானுக்கு கொலை மிரட்டல்

முன்னதாக, பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு கடந்த 5ஆம் தேதி, லாரன்ஸ் பிஷ்னோய் கேங்கிடமிருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. அதில் நடிகருக்கு இரண்டு வாய்ப்புகள் மட்டுமே உள்ளது. தனது செயலுக்கு அவர் மன்னிப்பு கோர வேண்டும் அல்லது உயிருடன் இருக்க வேண்டுமானால் ரூ. 5 கோடி செலுத்த வேண்டும் என கூறப்பட்டது.

மும்பை காவல்துறை போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்கு வாட்ஸ்அப் மூலம் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டது. அதில், "அவர் எங்கள் கோவிலுக்கு சென்று மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது ரூ.5 கோடி கொடுக்க வேண்டும். அப்படி செய்யாவிட்டால் கொன்று விடுவோம். எங்கள் கும்பல் இன்னும் செயல்பாட்டில் உள்ளது" என தெரிவிக்கப்பட்டிருந்தது.

லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் இந்த செய்தியை அனுப்பியதாக கூறப்பட்டது. இதன் பின்னர் அடுத்த ஒரு வாரத்தில் சல்மான் கானுக்கு வரும் இரண்டாவது கொலை மிரட்டல் இதுவாகும். முன்னதாக, மும்பை காவல்துறை போக்குவரத்துக் கட்டுப்பாட்டிற்கு கிடைத்த கொலை மிரட்டலில், நடிகரிடம் இருந்து ரூ. 2 கோடி கேட்கப்பட்டது.

கடந்த அக்டோபர் 24 ஆம் தேதி, ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்த ஒருவரை, லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பேரில் சல்மானை கானை கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்த நபரை மும்பை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து தற்போது ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாலிவுட் சினிமாவில் டாப் ஹீரோக்களாக இருக்கும் இருவருக்கு அடுத்தடுத்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.