‘இடுப்பில் துண்டோடு சுற்றி வந்த ரஜினி.. வேட்டி சட்டை கொடுத்த விஜய்காந்த்.. வெளிநாட்டில் நடந்த சுவாரஸ்யம்’
ஏற்பாட்டாளர்களில் ஒருவரான தயாரிப்பாளர் காஜா மைதீன், ஓட்டலுக்கு வந்த போது, ஒருவர் இடுப்பில் துண்டு கட்டிக் கொண்டு சுற்றிக் கொண்டிருந்திருக்கிறார். ‘யார் இது.. ஸ்டார் ஓட்டலில் இப்படி’ என சந்தேகித்த காஜா மைதீன், ‘ஹலோ யாருங்க..’ எனக் கேட்டுள்ளார். பார்த்தால், அது ரஜினி.
நடிகர் சங்கத்தின் கடன் அடைக்க அப்போதைய தலைவராக இருந்த விஜயகாந்த் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். அதில் ஒன்று தான் நட்சத்திர கலைவிழா. மலேசியா, சிங்கப்பூர் போன்ற தமிழர்கள் அதிகம் கொண்ட நாடுகளை தேர்வு செய்து, அங்கு கலை நிகழ்ச்சி நடத்தி, அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் கடனை அடைப்பது தான் திட்டம். அதற்காக ரஜினி முதல் அனைத்து பிரபலங்களையும் தமிழாட்டில் இருந்து அலைத்துச் செல்கின்றனர். மலேஷியாவில் கலை நிகழ்ச்சி முடிந்த பின், சிங்கப்பூர் செல்ல தயாராகிறது தமிழ் சினிமா குழு. விமானம் மற்றும் பேருந்து மூலமாக சிங்கப்பூர் செல்ல இரு மார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வர மறுத்த நடிகர்கள்.. களத்தில் இறங்கிய ரஜினி
விமானம் ரத்தானதால், மாற்று ஏற்பாடு திட்டத்தின் படி, பேருந்தில் செல்ல ஏற்பாட்டு குழுவினர் முயற்சித்தனர். ஆனால், பெரும்பாலானோர் அதில் பயணிக்க மாறுத்து, பேருந்தில் ஏற மறுத்தனர். அந்த நேரத்தில் அங்கு வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஏற்பாட்டாளர்களிடம் விபரத்தை கேட்கிறார். நிலைமையை அவர்கள் விளக்கியதும், ‘ஏன் பஸ்ஸில் போனால் என்ன?, எல்லாரையும் வரச் சொல்லுங்க.. நான் கூப்பிட்டேனு சொல்லுங்க.. என்று முதல் ஆளாக பேருந்தில் ஏறி அமர்ந்து கொண்டார் ரஜினி. ரஜினி ஏறிய பின், மற்றவர்கள் எப்படி? அவர்களும் அடித்துபிடித்து ஏறிக் கொண்டனர். 6 பேருந்துகள் மலேஷியாவில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டனர். வழிநெடுகிலும், 6 பேருந்துகளிலும் மாறி மாறி பயணம் செய்து, அனைவரையும் உற்சாகப்படுத்தியுள்ளார். அதற்கு காரணம், நாம் சொல்லி தான் அனைவரும் பேருந்தில் வருகின்றனர், அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்பதற்காக. அவர் நினைத்த படி, ஆட்டம் பாட்டமாக தான் அந்த பயணம் தொடர்ந்துள்ளது. ஒருவழியாக பேருந்து சிங்கப்பூர் வருகிறது. அனைவரும் ஸ்டார் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இடுப்பில் துண்டோடு சுற்றி வந்த ரஜினி
ஏற்பாட்டாளர்களில் ஒருவரான தயாரிப்பாளர் காஜா மைதீன், ஓட்டலுக்கு வந்த போது, ஒருவர் இடுப்பில் துண்டு கட்டிக் கொண்டு சுற்றிக் கொண்டிருந்திருக்கிறார். ‘யார் இது.. ஸ்டார் ஓட்டலில் இப்படி’ என சந்தேகித்த காஜா மைதீன், ‘ஹலோ யாருங்க..’ எனக்கேட்டுள்ளார். பார்த்தால், அது ரஜினி. ‘சார் என்ன சார்?’ என்று காஜா கேட்டுள்ளார். ‘6 பஸ்ல மாறி மாறி வந்தேன்.. என் லக்கேஜ் எங்கே போச்சுனு தெரியல.. டிரஸ் இல்ல’ என்று கூறியுள்ளார் ரஜினி. ‘சார்.. இருங்க சார்.. உடனே வாங்கிட்டு வர்றேன்னு’ காஜா சொல்லியுள்ளார். ‘நோ நோ.. வேண்டாம் வேண்டாம்.. விஜிட்ட( விஜயகாந்த்) வேட்டி, சட்டை இருக்கும் வாங்கிட்டு வாங்க’ என்று கூறியுள்ளார். ரஜினி. ரஜினி கேட்டதும், புது வேட்டி சட்டையை கொடுத்துள்ளார் விஜய்காந்த். உண்மையில் அது பெரிய சைஸ் வேறு. சிங்கப்பூர் கலைநிகழ்ச்சியில் அதை தான் அணிந்திருந்தார் ரஜினி. அது வழக்கம் போல அவர் அணியும் ஆடையை விட பெரிதாக இருந்திருக்கும் என்பதை நிகழ்ச்சியை பார்த்திருந்தால், உங்களுக்கு புரிந்திருக்கும்.
டூரிங் டாக்கிங் யூடியூப் சேனலில் ஃசாய் வித் சித்ரா நிகழ்ச்சியில், தயாரிப்பாளர் காஜா மைதீன், இந்த சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார். அவருடைய இந்த பேட்டி, பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
டாபிக்ஸ்