ஐயோ.. இந்த பொண்ணு கூட நடிக்க முடியாதுங்க என சொன்ன விஜயகாந்த் .. ஏன் தெரியுமா? ஓபனாக பேசிய நடிகை ஊர்வசி!
நடிகை ஊர்வசி தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் விஜயகாந்த் தன்னுடன் நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டார் என கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் சிறந்த குணச்சித்திர நடிகைகளில் தனக்கென தனி இடம் பிடித்தவர் ஊர்வசி. தமிழில் இயக்குநர் பாக்கியராஜின் முந்தானை முடிச்சில் தனது 13 வயதில் முருங்கை காயுடன் நாயகியாக அறிமுகமானார்.
ஊர்வசி 25 ஜனவரி 1969ல் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் சபரா விபி நாயர் விஜயலட்சுமி தம்பதியின் மகளாக பிறந்தவர். அவரது இயற்பெயர் கவிதா ரஞ்சனி. ஆனால் இவர் திரை உலகில் ஊர்வசி என்ற பெயரிலேயே பிரபலமானார். இவரது சகோதரிகள் கலாரஞ்சனி, கல்பானா. இவரது தாய் தந்தை நாடக நடிகர்களாக இருந்த நிலையில் சகோதரிகள் மூவருமே சிறந்த நடிகைகளாக இருந்தனர். அவரது சகோதரர்கள் பிரின்ஸ், கமல்ராய் ஆகியோரும் நடிகர்களாக இருந்தனர்.
8 வயதில் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக
1977ல் விதரொன்ன மொட்டுக்கள் என்ற திரைப்படத்தில் 8 வயதில் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் ஊர்வசி. அதேபடத்தில் அவரது சகோதரி கல்பனாவும் அறிமுகமானார். இவர் மளையாள நடிகர் மனோஜ் கே. ஜெயனை 1998 ல் திருமணம் செய்தார். ஒரு மகள் உள்ள நிலையில் கருத்து வேறுபாடுகள் காரணமாக 2008 ல் விவாகரத்து பெற்றார்.