CWC புகழின் மகள் 1 வயசுல பண்ண வேலய பாத்தீங்களா? குவியும் பாராட்டுகள்.. கின்னஸ் சாதனை புத்தகத்தில் ரிதன்யா!
Pugazh Daughter : புகழின் ஒரு வயது மகள் ரிதன்யா சாதனை புரிந்துள்ளதால் அவருக்கு பாராட்டுகள் குவிகின்றன. அதாவது அதிக நேரம் டம்பெல்ஸை தூக்கி குழந்தை என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார்.

குக் வித் கோமாளி புகழின் மகள் ரிதன்யா. 1 வயதே ஆன ரிதன்யா, தனது திறமையால் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி, சர்வதேச சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். 17 வினாடிகளில் 2 கிலோ டம்பெல்ஸை இடைவிடாமல் பிடித்துக் கொண்டு சாதனை படைத்துள்ளார். இளம் வயதில் இவ்வளவு திறமை காட்டியதால், ரிதன்யாவிற்கு பல்வேறு துறைகளில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்த சாதனையை பார்த்து மகிழ்ந்த புகழ் – பென்ஸி தம்பதியினர், மகள் ரிதன்யாவின் திறமையை உலகிற்கு காட்டியதற்கு பெருமிதம் அடைந்துள்ளனர்.மகள் ரிதன்யாவிற்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
ஏராளமான ரசிகர்கள்
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி மூலம் பிரபலமானவர் புகழ். இவரது ஹேர்ஸ்டைல், பாடிலாங்குவேஜ். நகைச்சுவை உணர்வு ஆகியவற்றுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளார்கள்.’ குக் வித் கோமாளி ‘ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகர் புகழ் . ஷிவாங்கியுடன் இவர் செய்யும் சேட்டைகள் அனைத்தும் இந்த நிகழ்ச்சி பார்க்கும் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது. இதன் மூலம் இவருக்கு தொடர்ந்து ஏராளமான பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தது.
பெண் வேடம் அணிந்து கவனம் ஈர்த்த புகழ்
ஆனால் இவர் முதலில் விஜய் டிவியில் கலக்க போவது யாரு, அது இது எது உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் காமெடி செய்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் புகழ். பெண் வேடம் அணிந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இதையடுத்து தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக வந்து ரசிகர்களை அதிகம் சம்பாதித்துவிட்டார்.