Thiruchitrambalam collection: வலிமை பட வசூலை உடைத்த திருச்சிற்றம்பலம்!
தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் வலிமை திரைப்படத்தின் வசூலை முறியடித்துள்ளது.
தனுஷ் நடித்து மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் திருச்சிற்றம்பலம். இந்த படத்தில் பாரதிராஜா, பிரகாஷ் ராஜ், நித்யா மேனன், பிரியா பவானி சங்கர் போன்ற பல நடிகர்கள் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருவதோடு மட்டுமல்லாமல் வசூலையும் வாரிக் குவித்து வருகிறது. இந்தியா மட்டுமின்றி பிரான்ஸ், ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளிலும் இப்படம் பெரும் வசூலை பெற்று வருகிறது. இத்திரைப்படம் ஆஸ்திரேலியாவில் 1.7 கோடி ரூபாய் வசூலையும், பிரான்சில் 13000க்கும் மேற்பட்ட என்ட்ரிகளை தாண்டி உள்ளது. இந்த இந்த ஆண்டில் இரண்டு நாடுகளிலும் அதிக வசூலைக் குவித்த மூன்றாவது படமாகத் திருச்சிற்றம்பலம் பெருமையைப் பெற்றுள்ளது.
முதலிடத்தில் விக்ரம் திரைப்படமும், இரண்டாவது இடத்தில் பீஸ்ட் திரைப்படமும், மூன்றாவது இடத்தில் வலிமை திரைப்படமும் இருந்தன. தற்போது வலிமை திரைப்படத்தை பின்னுக்குத் தள்ளி திருச்சிற்றம்பலம் திரைப்படம் வசூல் சாதனையில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. தற்போது வரை தமிழ்நாட்டில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் 65 கோடி ரூபாய் வசூலை எட்டியுள்ளது. உலகம் முழுவதும் விரைவில் 100 கோடி ரூபாய் 8 என எதிர்பார்க்கப்படுகிறது.
டாபிக்ஸ்