Cook With Comali: இது எல்லாம் தேவையாங்க... எல்லாம் காசு தான்... உண்மைய சொன்னா சொம்புன்னுவாங்க- சரத் சூட்சமம்-vijay tv fame sarath about cook with comali issue - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Cook With Comali: இது எல்லாம் தேவையாங்க... எல்லாம் காசு தான்... உண்மைய சொன்னா சொம்புன்னுவாங்க- சரத் சூட்சமம்

Cook With Comali: இது எல்லாம் தேவையாங்க... எல்லாம் காசு தான்... உண்மைய சொன்னா சொம்புன்னுவாங்க- சரத் சூட்சமம்

Malavica Natarajan HT Tamil
Sep 23, 2024 04:18 PM IST

Cook With Comali: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலை- பிரியங்காவிற்கு இடையே ஏற்பட்ட சண்டை குறித்து பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக வந்த சரத் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

Cook With Comali: இது எல்லாம் தேவையாங்க... எல்லாம் காசு தான்... உண்மைய சொன்னா சொம்புன்னுவாங்க- சரத்
Cook With Comali: இது எல்லாம் தேவையாங்க... எல்லாம் காசு தான்... உண்மைய சொன்னா சொம்புன்னுவாங்க- சரத்

இதுகுறித்து, பல பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இப்போது, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக வந்த சரத் கருத்து தெரிவித்துள்ளார். சட்டம் என் கையில் என்ற படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய சரத், மணிமேகலையை மறைமுகமாகத் தாக்கிப் பேசியுள்ளார்.

இத வைச்சு நல்லா சம்மாதிக்குறாங்க

மணிமேகலை- பிரியங்கா சர்ச்சை நாட்டுக்கு தேவையான முக்கியமான விஷயங்களே கிடையாது. உண்மைய சொல்ல வேண்டும் என்றால், அவங்க ரெண்டு பேரும் போட்ட சண்டைய வச்சு வீடியோ போட்டு நல்லா சம்பாதிச்சுட்டாங்க. இன்னொருத்தவங்க சம்பாதிச்சுட்டு இருக்காங்க. ஆனா இத பாத்திட்டு இருக்குற நம்ம தான் ஒண்ணுமே இல்லாம இருக்கிறோம். அதனால் இது ஒரு முக்கியமான விஷயமே கிடையாது. இது ஒரு சின்ன ஈகோ மேட்டர்தான் எனக் கூறி நைசாக நழுவப் பார்த்தார்.

என்ன சொம்புன்னு சொல்லவா

செய்தியாளர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பிய நிலையில், யப்பா, எனக்கு எதுக்கு வம்பு. அப்பறம் என்னையும் சொம்பு கிம்புன்னு சொல்றதுக்கா? உண்மைய சொல்லப்போன நான் யாருக்கும் சப்போர்ட் பண்ணல. அவங்க இன்னைக்கு அடிச்சுப்பாங்க, நாளைக்கு சேந்துப்பாங்க. இந்த விஷயத்துல கருத்து சொன்னா நாம தான் முட்டாளா இருக்கணும். அதுனால இத பத்தி பேசவே வேணாம். 

டிஆர்பி கருத்து- நைசாக நழுவிய சரத்

இது அவங்களோட டிஆர்பிக்காக பண்ணிட்டு இருகக் விஷயம். யாரு தன்னப்பத்தி பேசிட்டே இருக்காங்களோ அவங்க இத டிஆர்பிக்காக யூஸ் பண்ணிக்குறாங்க. மக்கள் எல்லாம் என்ன மறந்துட்டாங்களோன்னு நெனச்சி இப்படி பண்ணலாம் என சரத் கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து நீங்கள் மணிமேகலையை குறிப்பிட்டு இதை சொல்கிறீர்களா என செய்தியாளர் ஒருவர் கேட்க, சிரித்துக் கொண்டே செய்தியாளரை மேலும் கீழும் பார்த்து நன்றி எனக் கூறி அந்த இடத்தை விட்டு வெளியேறினார்.

பிரியங்கா- மணிமேகலை பிரச்சனை குறித்து குக் வித் கோமாளி செட்டில் இருந்த குரேஷி, சுனிதா, புகழ், தர்ஷன் என பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். அதே வகையில், விஜய் டிவி பிரபலங்களான அமீர், அர்ச்சனா, தாமு, மாகாபா ஆனந்த் உள்ளிட்டோரும் கருத்து தெரிவித்திருந்தனர். மேலும், திரைப் பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்திருந்தர். இதில் பலர் மணிமேகலைக்கு ஆதரவாகவும் பலர் பிரியங்காவிற்கு ஆதரவாகவும் பேசினர்.

வீடியோ மூலம் விமர்சித்த மணமேகலை

இந்நிலையில், தனக்கு ஆதரவு தெரிவித்தவர்களுக்கு நன்றி கூறியும், தன்னை விமர்சித்தவர்களுக்கு பதிலடி தரும் வகையிலும் மணிமேகலை அவரது காதல் கணவர் ஹுசைனுடன் இணைந்து அவரது ஹூசைன் மணிமேகலை யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் பிரியங்காவிற்கு ஆதரவு தருபவர்களை மணிமேகலை சொம்பு என விமர்சித்திருந்தார். அதுமட்டுமின்றி, இந்த பிரச்சனையால், மணிமேகலையின் யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதைத்தான் சரத் சூட்சகமாக இந்தப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.