தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Leofirstsingle: நான் ரெடி எப்ப ரிலீஸ்? - டைம் போட்டு அப்டேட் கொடுத்த லோகேஷ்!

LEOFirstSingle: நான் ரெடி எப்ப ரிலீஸ்? - டைம் போட்டு அப்டேட் கொடுத்த லோகேஷ்!

Kalyani Pandiyan S HT Tamil
Jun 22, 2023 12:49 PM IST

‘லியோ’ படத்தில் இருந்து இன்று வெளியாக இருந்த ‘நான் ரெடி’ பாடல் எப்போது வெளியாகும் என்பது குறித்தான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

Vijay Lokesh Kanagaraj Leo naan ready will be out today 6.30 pm
Vijay Lokesh Kanagaraj Leo naan ready will be out today 6.30 pm

ட்ரெண்டிங் செய்திகள்

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’. இந்தப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிக்கிறார். கிட்டத்தட்ட 14 வருடங்களுக்குப் பிறகு இந்த ஜோடி மீண்டும் இந்தப்படத்தில் இணைந்திருக்கிறது. இவர்களுடன் இயக்குநர்கள் கெளதம் மேனன், மிஷ்கின், நடிகர் அர்ஜூன், நடிகர் சஞ்சய் தத், நடன இயக்குநர் சாண்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இந்தப்படத்திற்கு முன்னதாக விஜயின் ‘பீஸ்ட்’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். அண்மையில் இந்தப்படத்தில் கிறிஸ்டோபர் நோலன் படத்தில் நடித்த நடிகர் டென்சில் ஸ்மித் இணைந்ததாகவும் கூறப்பட்டது.

இந்தப்படத்தின் டைட்டில் வீடியோவிற்கே மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு கிடைத்தது. அதனைத்தொடர்ந்து காஷ்மீரில் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்த படக்குழு படத்தில் பணியாற்றிய கடைநிலை ஊழியர்களை பெருமை படுத்தும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டது. வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி படம் வெளியாகுமென முன்னமே அறிவிக்கப்பட்டு விட்டதால் படம் குறித்தான அப்டேட்களை விஜய் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கேட்டுக்கொண்டே இருந்தனர்.

 

இந்த நிலையில்தான் விஜய் பிறந்தநாளான இன்றைய தினம் படத்தின் முதல் பாடலான ‘நான் ரெடி’ பாடலும், நள்ளிரவு 12 மணிக்கு படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நள்ளிரவு 12 மணிக்கு லியோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விஜயின் பிறந்தநாள் வாழ்த்தோடு வெளியிடப்பட்டது.

 

அந்த ஃபர்ஸ்ட் லுக்கில் ஓநாய் ஒன்று கொக்கரிக்க, அதற்கு முன்னால் நிற்கும் விஜய் இரத்தம் தெறிக்க சுத்தியலோடு நின்று கொண்டு இருக்கிறார். முன்னதாக படத்தில் அவருடன் ஒரு சிங்கம் நடிக்க இருப்பதாகவும், அதற்கான கிராஃபிக்ஸ் பணிகளுக்காக பெருமளவு செல்வழிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியான நிலையில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஓநாய் இடம் பெற்றிருப்பது ரசிகர்கள் மத்தியில் சற்று குழப்பத்தை ஏற்படுத்திருக்கிறது என்றே சொல்லலாம். இது மட்டுமல்லாமல் போஸ்டரில் வசனம் ஒன்றும் இடம் பெற்று இருக்கிறது. அதில், “ கட்டுக்கடங்காத நதிகளின் உலகில் அமைதியான நீர் தெய்வீக பொருளாக அல்லது பயங்கரமான பேய்களாக மாறும்” என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்தப்போஸ்டரை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் நான் ரெடி பாடல் அப்டேட்டை லோகேஷ் பதிவிட்டு இருக்கிறார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்