தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vijay Antony: “எங்க அப்பாவும் தற்கொலைதான் பண்ணார்; தயசு செஞ்சு இப்படி பண்ணாதீங்க”- விஜய் ஆண்டனியின் வாழ்க்கை பாடம்!

Vijay Antony: “எங்க அப்பாவும் தற்கொலைதான் பண்ணார்; தயசு செஞ்சு இப்படி பண்ணாதீங்க”- விஜய் ஆண்டனியின் வாழ்க்கை பாடம்!

Kalyani Pandiyan S HT Tamil
Sep 19, 2023 10:50 AM IST

விஜய் ஆண்டனி மகள் மீரா தற்கொலை செய்து கொண்டிருக்கும் நிலையில் தற்கொலை குறித்து மேடை ஒன்றில் விஜய் ஆண்டனி பேசியவை இவை

விஜய் ஆண்டனி!
விஜய் ஆண்டனி!

ட்ரெண்டிங் செய்திகள்

காலையில் இதைப்பார்த்த குடும்பத்தினர் உதவியாளருடன் அவரது உடலை கீழே இறக்கி இருக்கிறார்கள். இதனையடுத்து மீராவை மருத்துவமனைக்கு குடும்பத்தினர் கொண்டு சென்று இருக்கிறார்கள்.

ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியிருக்கின்றனர். அவர் மன அழுத்ததில் இருந்ததாக முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன

விஜய் ஆண்டனி மகளின் உடலானது சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருக்கிறது.  சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு பயின்று வந்த மீராவிற்கு வயது 16 என்பது குறிப்பிடத்தக்கது!

இந்த நிலையில் பிரபல இயக்குநர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் தற்கொலை செய்து கொண்ட போது தற்கொலை குறித்து விஜய் ஆண்டனி மேடையில் பேசினார். 

அவரது பேச்சு இங்கே!

 “வாழ்கையில் ஒருவருக்கு என்ன துன்பம் வந்தாலும், என்ன பிரச்சினை வந்தாலும் தற்கொலை மட்டும் செய்யக்கூடாது. குறிப்பாக தான் வாங்காத கடனுக்காக ஒருவர் தற்கொலை செய்யவே கூடாது. அது பொறுப்பே கிடையாது. என்னுடைய தந்தை தற்கொலை செய்து கொண்டு இறந்தார். 

அப்போது எனக்கு ஏழு வயது. என்னுடைய தங்கைக்கு 5 வயது. அதற்கான காரணம் என்னுடைய பர்சனல் லைஃப்பை சார்ந்தது. அந்த தற்கொலைக்குப் பிறகு என்னுடைய அம்மா எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்பது எனக்கு மட்டும்தான் தெரியும். நான் நிறைய பேசமாட்டேன் என்றெல்லாம் சொல்கிறார்கள்.

காரணம் நான் அவ்வளவு பார்த்து விட்டேன். எனக்கு தெரியாத விஷயங்கள் என்று எதுவும் கிடையாது. வாழ்க்கை எவ்வளவு கடினமானது என்பது எனக்குத் தெரியும். எனக்கு பேசத் தெரியாமல் இல்லை. எனக்கும் பேசத் தெரியும்.

எல்லாமே இங்கு போலியாக இருக்கிறார்கள். என்னுடைய அம்மா அரசாங்கத்தில் கிளர்க்காக இருந்தார். நான் சவுண்ட் இன் ஜியனராக முதலில் வேலைக்கு சேர்ந்து வாங்கி சம்பளம் வெறும் 400 ரூபாய்தான். அதன் பின்னர் 3,000, 4000 என வாங்க ஆரம்பித்தேன். அதன் பின்னர்தான் நான் இசையமைப்பாளராக மாறினேன். நான் ரஹ்மான் மாதிரியோ, அனிருத் மாதிரியோ பெரிய இசையமைப்பாளர் கிடையாது.” என்று பேசினார்

தற்கொலை தீர்வல்ல:

வாழ்க்கையில் வரும் கவலைகளும், துன்பங்களும் நிரந்தமானது அல்ல. அவற்றை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் அதை எதிர்கொள்வதில் தான் உள்ளது. தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கையை மகிழ்வாய் வாழும் வழிகளை கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். ஒருவேளை உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உருவானாலோ அதிலிருந்து மீண்டும் வர கீழ்காணும் எண்களை அழைக்கலாம்.

மாநில உதவி மையம் :104

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

 

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்