உடற்பயிற்சிக்கு நோ! வெறும் டயட் மட்டும் தான்..படு ஸ்லிம்மாக மாறிய வித்யா பாலன் - டயட் ரகசியம் என்ன?
உடற்பயிற்சிக்கு நோ சொன்னதுடன், வெறும் டயட் மட்டும் பின்பற்றி படு ஸ்லிம்மாக மாறிய வித்யா பாலன் டயட் ரகசியம் என்ன என்பதை பேட்டி ஒன்றில் அவரே வெளிப்படுத்தியுள்ளார். அதை பற்றி பார்க்கலாம்.
கேரளாவை பூர்வீகமாக கொண்டு பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக கோலோச்சியவர் நடிகை வித்யா பாலன். பிரபல இந்தி சினிமா தயாரிப்பாளரான சித்தார்த் ராய் கபூரை திருமணம் செய்து கொண்டு பாலிவுட் மருமகள் ஆகியிருக்கும் இவர், திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து சினிமாக்களில் நடித்து வருகிறார்.
தற்போது 45 வயதாகும் வித்யா பாலன், தனது இளமை தோற்றத்தையும், அழகான உடல் அமைப்பையும் அப்படியே பராமரித்து வருகிறார். திறமையான நடிகை வித்யா பாலன் தனது உடலை குறைத்து குறைத்து ஸ்லிம்மாக மாறியிருப்பது அவரது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஸ்லிம்மாக மாறுவதற்கு அவர் என்ன மாயஜாலம், மந்திரம் செய்தார் என்று தெரிந்துகொள்ளும் ஆவல் பலருக்கும் இருந்து வருகிறது.
உடலை ஸ்லிம் ஆக்க உடற்பயிற்சியை காட்டிலும் டயட்டில் மிகவும் கவனமாக இருந்துள்ளாராம். உடற்பயிற்சி எதுவும் செய்யாமல் உடல் எடையை குறைத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கலாட்டா இந்தியா ஊடகத்துக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில், தனது எடை குறைப்பு குறித்து பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். திருமணத்துக்கு பின் குண்டான தோற்றத்துக்கு மாறியபோது, பல விமர்சனங்களை சந்தித்த நடிகை வித்யா பாலன் தற்போது ஸ்லிம்மாக மாறி இருப்பது குறித்து பேசியுள்ளார்.
முழுக்க டயட்டில் இருந்தேன்
"உங்களுக்கு தெரியும், நான் ஒல்லியாக மாற என் வாழ்நாள் முழுவதும் நிறைய போராடினேன். நான் பைத்தியம் போல் டயட் செய்திருக்கிறேன். தொடர்ந்து உடற்பயிற்சி செய்தேன். அந்த நேரத்தில். இதன் விளைவாக சில நேரங்களில் உடல் எடையை குறையும். ஆனால் மீண்டும் எடை அதிகரிக்கும்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், சென்னையில் அமுரா (அமுரா ஹெல்த்) என்ற ஊட்டச்சத்துக் குழுவைச் சந்தித்தேன். எனது குண்டான உடம்பு வெறும் வீக்கம் என்று சொன்னார்கள்; அது கொழுப்பு இல்லை. அதனால், வீக்கத்திலிருந்து விடுபட, அவர்கள் எனக்கு வேலை செய்யும் டயட்டில் வைத்தார்கள். இது எனக்கு வேலை செய்தது. எடை இறங்கியது. ஏனென்றால் எனக்கு நல்லது அல்லாத உணவுகளை அவர்கள் குறைத்துவிட்டார்கள்.
எந்த உணவு உங்கள் உடலுக்கு தேவை என்பதை கண்டறியவும்
நான் சைவ உணவு உண்பவள். ஆனால் கீரையும், பூசணியும் எனக்கு நல்லதல்ல என்று எனக்கு தெரியாது. பொதுவாக எல்லா காய்கறிகளும் நமக்கு நல்லது என்று நினைக்கிறோம். ஆனால் அப்படி இல்லை. உங்கள் உடலுக்கு எது நல்லது என்பதை நீங்கள் குறிப்பாக கண்டுபிடிக்க வேண்டும். அது மற்றவருக்கு நல்லதாக இருந்தாலும் அது உங்களுக்கு நல்தாக இல்லாமல் போகலாம்.
உடற்பயிற்சியை முற்றிலுமாக நிறுத்தினேன்
நான் செய்த இரண்டாவது விஷயம், உடற்பயிற்சி செய்வதை முற்றிலுமாக நிறுத்தியது. அமுரா ஹெல்த் என்னை வொர்க் அவுட் செய்வதை நிறுத்தச் சொன்னார். இப்போது எல்லோரும் என்னிடம், 'கடவுளே, நீங்கள் மிகவும் ஒல்லியாக இருக்கிறீர்கள்' என்று சொல்கிறார்கள். ஆனால் நான் ஒரு வருடமாக வேலை செய்யவில்லை. நான் வேலை செய்யாத முதல் வருடம் இது.
அதனால் பலரும் என்னிடம், 'அப்படியானால் நீங்கள் இப்போது என்ன செய்கிறீர்கள்?' என கேட்கிறார்கள். அவர்களுக்காகன பதிலாக நான் ஒன்றும் செய்யவில்லை என்பதுதான். நான் என உடலை ரசிக்கிறேன். முன்னெப்போதையும் விட ஆரோக்கியமாக இருக்கிறேன். நீங்கள் வேலை செய்யக்கூடாது என்று நான் சொல்லவில்லை. ஆனால், இரண்டு வெவ்வேறு நபர்களும் ஒரே மாதிரியானவர்கள் அல்ல. நமது தனித்துவத்தை மதிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்'' என்றார்.
வித்யா பாலன் படங்கள்
2003இல் வெளியான பாலோ தேகோ என்ற பெங்காலி படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வித்யா பாலன். அதன் பிறகு பிரணிதா என்ற படம் மூலம் பாலிவுட் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து இந்தி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உருவெடுத்த வித்யா பாலன், தாய் மொழியான மலையாளம், தெலுங்கு, மராத்தி மொழி படங்களிலும் நடித்தார். தமிழில் அஜித்குமார் ஜோடியாக நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்திருந்தார். இந்த ஆண்டில் வித்யா பாலன் நடிப்பில் தோ அவுர் தோ பியார், பூல் புலையா 3 ஆகிய படங்ள் வெளியாகியுள்ளன.
சில்க் ஸ்மிதா வாழ்க்கை வரலாறு படமான டர்ட்டி பிக்சர் படத்தில் நடித்திருந்த வித்யா பாலன், சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றார். அதேபோல் சிறந்த நடிகைக்கான பிலிம் ஃபேர் விருதையும் வித்யா பாலன் வென்றுள்ளார்.