நீ பெரும் கலைஞன்.. நிரந்தர இளைஞன்.. 70 வயதிலும் 35 வயது இளைஞரின் முறுக்கு.. கமல்ஹாசனின் உடற்பயிற்சி, டயட் சீக்ரெட்ஸ்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  நீ பெரும் கலைஞன்.. நிரந்தர இளைஞன்.. 70 வயதிலும் 35 வயது இளைஞரின் முறுக்கு.. கமல்ஹாசனின் உடற்பயிற்சி, டயட் சீக்ரெட்ஸ்

நீ பெரும் கலைஞன்.. நிரந்தர இளைஞன்.. 70 வயதிலும் 35 வயது இளைஞரின் முறுக்கு.. கமல்ஹாசனின் உடற்பயிற்சி, டயட் சீக்ரெட்ஸ்

Marimuthu M HT Tamil
Nov 07, 2024 11:20 AM IST

நீ பெரும் கலைஞன்.. நிரந்தர இளைஞன்.. 70 வயதிலும் 35 வயது இளைஞரின் முறுக்கு.. கமல்ஹாசனின் உடற்பயிற்சி, டயட் சீக்ரெட்ஸ் குறித்துப் பார்ப்போம்.

நீ பெரும் கலைஞன்.. நிரந்தர இளைஞன்.. 70 வயதிலும் 35 வயது இளைஞரின் முறுக்கு.. கமல்ஹாசனின் உடற்பயிற்சி, டயட் சீக்ரெட்ஸ்
நீ பெரும் கலைஞன்.. நிரந்தர இளைஞன்.. 70 வயதிலும் 35 வயது இளைஞரின் முறுக்கு.. கமல்ஹாசனின் உடற்பயிற்சி, டயட் சீக்ரெட்ஸ்

சமீபத்தில் வெளியான இந்தியன் 2 படத்தில் தாத்தாவாக நடித்திருந்தார், நடிகர் கமல்ஹாசன். 70 வயது ஆகிய நிலையிலும் நடிகர் கமல்ஹாசன் சுறுசுறுப்பாக இருக்கிறார். அதற்குக் காரணம் அவரது சீரான வாழ்க்கை முறை மற்றும் உடற்பயிற்சி வழக்கம் எனலாம். நடிகர் கமல்ஹாசனின் வாழ்க்கை முறையை நாம் பின்பற்றினால், நாமும் ஆரோக்கியமாகவும் ஃபிட்டாகவும் இருக்க முடியும் என்பது நிதர்சனம்.

கமல்ஹாசனுக்கு ஜிம்முக்கு செல்வது மிகவும் பிடிக்கும். உடற்பயிற்சி செய்வது நம் மனதையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்கிறது என்று நடிகர் கமல்ஹாசன் அடிக்கடி கூறுகிறார். விஸ்வரூபம், தசாவதாரம் போன்ற படங்களின் படப்பிடிப்பின்போது கூட நடிகர் கமல்ஹாசன் காலையில் ஜிம்முக்கு செல்வதைத் தவிர்க்கவில்லை. அனுதினமும் ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் கமல்ஹாசன் இப்போதும் உடற்பயிற்சி செய்கிறார்.

கமல்ஹாசனுக்கு உடற்பயிற்சி செய்வது மிகவும் பிடிக்கும்:

வயிற்றுப்பகுதியில் உள்ள சதையைக் குறைக்க உதவும் க்ரஞ்சஸ் பயிற்சி, பளுதூக்குதல் மற்றும் கைகளை உற்சாகப்படுத்தும் உடற்பயிற்சிகளுக்கு முன்னுரிமை அளிக்கிறார், கமல் ஹாசன்.

ஏதோ ஒரு காரணத்தைக் கூறி உடற்பயிற்சி செய்வதைத் தள்ளிப்போடுவதில்லை. பரபரப்பான படப்பிடிப்புக்கு மத்தியிலும் கிடைக்கும் வசதிகளை பயன்படுத்தி உடற்பயிற்சி செய்கிறார். புஷ்-அப் செய்து கொண்டே இருக்கிறார். விக்ரம் படத்தின் படப்பிடிப்பு இடைவெளியில் கமல்ஹாசன் புஷ்-அப் செய்ததை, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமீபத்திய பேட்டிகளில் கூட சொல்லியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், கமல்ஹாசனுக்கு யோகா என்றால் கொள்ளைப் பிரியம். தினமும் குறைந்தது அரை மணி நேரமாவது யோகா செய்ய விரும்புகிறார். உடலின் நெகிழ்வுத்தன்மை, மனதின் சமநிலை மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு யோகா உதவுகிறது என்று கமல்ஹாசன் முன்பு பேட்டிகளில் கூறியிருந்தார்.

கூடவே நடப்பதும் கமல்ஹாசனுக்குப் பிடிக்கும். நேரம் கிடைக்கும் போது எல்லாம் நீண்ட தூரம் நடக்கிறார். நடக்க நேரம் ஒதுக்க முயற்சிக்கிறார். தினமும் 14 கி.மீ., நடக்கிறேன். தனக்கு நடக்க பிடிக்கும் என்று அவர் முன்னதாக ஒரு ஊடக பேட்டியில் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசனின் டயட்

உணவுக்கட்டுப்பாட்டு விஷயத்திலும் கமல்ஹாசன் கண்டிப்பானவர். எப்போதும் கமல்ஹாசன் சரிவிகித உணவையே உட்கொள்கிறார். அதாவது, புரதம், நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் கொண்ட உணவுகளை கமல்ஹாசன் சாப்பிடுகிறார்.

அதே நேரத்தில், பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை, ஆல்கஹால் ஆகியவற்றை முற்றிலுமாகத் தவிர்க்கிறார். மேலும், புதிய பழங்கள் மற்றும் காய்கறிகளை கமல்ஹாசன் விரும்பி உண்கிறார். இரவில் மிதமாகவே சாப்பிடுகிறார்.

உடற்பயிற்சி மற்றும் சரிவிகித உணவின் உதவியுடன், கமல்ஹாசன் தனது 70 வயதிலும் 35 வயது இளைஞர்களுடன் போட்டிபோடும் வகையில் ஆரோக்கியமாக இருக்கிறார்.

கமல்ஹாசனின் பூர்வீகம்:

தமிழ்நாட்டிலுள்ள பரமக்குடியில் கமல்ஹாசன் நவம்பர் 7, 1954ஆம் ஆண்டு, ஒரு தமிழ் பிராமண ஐயங்கார் குடும்பத்தில் பிறந்தார். தனது ஆறு வயதில் களத்தூர் கண்ணம்மா என்னும் தமிழ்ப் படம் மூலம் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார், கமல்ஹாசன்.

ஒரு குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமாகி, தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், தெலுங்கு ஆகியப் பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர், கமல்ஹாசன்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.