World Vegetarian Day: இதய மற்றும் நீரிழிவு நோய் அபாயத்தைக் குறைக்கும் சைவ உணவுகள்: சைவ உணவு தினம் அறிந்ததும் அறியாததும்!
World Vegetarian Day: இதய மற்றும் நீரிழிவு நோய் அபாயத்தைக் குறைக்கும் சைவ உணவுகள்: சைவ உணவு தினம் அறிந்ததும் அறியாததும்!
World Vegetarian Day: சைவத்தின் நன்மைகள் மற்றும் சுற்றுச்சூழலில் அது எவ்வாறு முக்கியப் பங்கு வகிக்கிறது என்பது பற்றிய விழிப்புணர்வை பரப்புவதற்காக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1ஆம் தேதி ‘’உலக சைவ தினம்'' கொண்டாடப்படுகிறது.
தாவர அடிப்படையிலான உணவுகளின் நன்மைகளையும், அது ஆரோக்கியத்திற்கு எவ்வாறு நன்மைகளைச் செய்யும் என்பதையும் ஆய்வுகள் உறுதிப்படுத்துவதால் சைவ உணவு உண்பது கடந்த 10 ஆண்டுகளில் பிரபலமடைந்துள்ளது.
சைவ உணவு இதய நோய் மற்றும் சில வகையான புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்கும் என்பதை பல ஆய்வுகள் நிரூபிக்கின்றன. இது உடல் பருமன் மற்றும் நீரிழிவு வகை 2-ன் அபாயத்தையும் குறைக்கும்.
பல பிரபலங்கள் அசைவ உணவைத் தவிர்த்து, சைவ உணவைத் தழுவக் காரணம் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த தான், என தரவுகள் தெரிவிக்கின்றன.
நமக்கு தெரிந்த பிரபலங்களான கங்கனா ரனாவத், ஷாஹித் கபூர், அனுஷ்கா சர்மா, அமீர் கான், சோனம் கபூர் மற்றும் ஆலியா பட் எனப் பல பிரபலங்களும் அசைவ உணவுகளை வேண்டாம் என்று கூறிவிட்டு, சைவ உணவினை உண்ணத் தொடங்கியிருக்கின்றனர்.
உலக சைவ தினம்:
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1ஆம் தேதி உலகம் முழுவதும் உலக சைவ தினம் அனுசரிக்கப்படுகிறது.
உலக சைவ தினம் 1977ஆம் ஆண்டில் வட அமெரிக்க சைவ சங்கத்தால் நிறுவப்பட்டது. சைவ உணவுகள் உண்பதால் உண்டாகும் மகிழ்ச்சி, இரக்கம் மற்றும் வாழ்க்கையை மேம்படுத்தும் சாத்தியங்களை மேம்படுத்துவதற்காக 1978ஆம் ஆண்டு, சர்வதேச சைவ ஒன்றியத்தால், உலக சைவ தினம் அங்கீகரிக்கப்பட்டது.
மறுமலர்ச்சி காலத்திலும் அறிவுசார் யுகத்திலும்கூட சைவ உணவு பற்றிய கருத்து மக்களை ஈர்த்தது. அப்போது பல்வேறு ஆளுமைகள் சைவ உணவைப் பயிற்சி செய்தனர்.
இங்கிலாந்தில் 1847ஆம் ஆண்டு முதல் சைவ உணவு உண்போர் சங்கம் தொடங்கப்பட்டு 1908ஆம் ஆண்டு சர்வதேச சைவ உணவு உண்போர் சங்கம் உருவானது. அதேசமயம், முதல் சைவ சங்கம் 1944ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
முக்கியத்துவம்:
உலக மக்கள்தொகையில் சுமார் 22% மக்கள் சைவ உணவு உண்பவர்கள் தான் என்றும்; இந்த எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் 38% சைவ உணவு உண்பவர்கள் வசிக்கின்றனர். மொத்த மக்கள் தொகையில் 38% இறைச்சி இல்லாத உணவை மக்கள் பின்பற்றுகின்றனர்.
சைவ உணவின் நன்மைகள்:
- நன்கு சீரான சைவ உணவு என்பது உடல் பருமன் அபாயத்தைக் குறைக்க உதவும். இது நாட்பட்ட நோய்களைத் தடுக்கலாம்.
- ஒரு சைவ உணவு கொழுப்பின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். சைவ உணவுகள் இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவும்.
- சைவ உணவை உண்ணும் மக்களுக்கு நீரிழிவு மற்றும் சில வகையான புற்றுநோய்கள் போன்ற வளர்சிதை மாற்ற கோளாறுகளை உருவாக்கும் வாய்ப்புகள் குறைவாக இருக்கும்.
- நட்ஸ், பருப்பு வகைகள், சோயாபீன் பாலின் கட்டி வடிவமான டோஃபு, முழு தானிய உணவுகள், பால் பொருட்கள், அடர் கீரைகள், சோயா என அனைத்தும் சைவ உணவைப் பின்பற்றுபவர்களுக்கு ஒரு சீரான உணவின் அத்தியாவசிய கூறுகள் ஆகும்.
டாபிக்ஸ்