தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Viduthalai: விடுதலை தமிழ் திரையுலகம் பார்த்திராத கதைக்களம்-ரஜினிகாந்த் டுவிட்

Viduthalai: விடுதலை தமிழ் திரையுலகம் பார்த்திராத கதைக்களம்-ரஜினிகாந்த் டுவிட்

Pandeeswari Gurusamy HT Tamil
Apr 08, 2023 11:04 AM IST

வெற்றி மாறன் - தமிழ் திரையுலகின் பெருமை; இரண்டாவது பாகத்திற்காக காத்துக்கொண்டிருக்கிறேன் என நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

படக்குழுவினருடன் ரஜினிகாந்த்
படக்குழுவினருடன் ரஜினிகாந்த்

ட்ரெண்டிங் செய்திகள்

எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் நாவலை அடிப்படையாக கொண்டு இரண்டு பாகங்களாக விடுதலை உருவாக்கப்பட்டுள்ளது ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் எல்ராட் குமார் தயாரித்து உள்ள இந்த திரைப்படத்தை பிரபல இயக்குநர் வெற்றிமாறன் இயக்கி இருக்கிறார். கதையின் நாயகனாக சூரி நடித்து இருக்கிறார். வாத்தியாராக விஜய்சேதுபதி நடித்து இருக்கிறார்.

இவர்களுடன் கௌதம் மேனன், ராஜீவ்மேனன், சேத்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். மார்ச் 31 அன்று உலகம் முழுவதும் வெளியான 'விடுதலை-1' படம் கலவையான விமர்சனங்களை பெற்று பாக்ஸ் ஆபீஸில் வசூலை குவித்து வருகிறது.

இப்படம் 'ஏ' தணிக்கை சான்றிதழ் பெற்ற படமாக இருந்தாலும், திரையரங்கில் ரசிகர்கள் கூட்டம் அதிகமாக கணப்படுகிறது. சூரி வழக்கமான தனது பாணியில் இருந்து முற்றிலும் விலகி, முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு, இளையராஜா இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தை பார்த்த திரையுலக பிரபலங்கள் பலரும் வெற்றிமாறனையும், விடுதலை படக்குழுவினரையும் பாராட்டி பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் விடுதலை' படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினரை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து பாராட்டியுள்ளார்.

விடுதலை திரைப்படத்தை பார்த்துவிட்டு இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் சூரியை நேரில் வரவைத்து நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலானது இந்நிலையில் நடிகர் ரஜினி தனது டுவிட்டர் பதிவில் இரண்டாவது பாகத்திற்காக காத்துக்கொண்டிருக்கிறேன் என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்,

விடுதலை இதுவரை தமிழ் திரையுலகம் பாத்திராத கதைக்களம். இது ஒரு திரைக்காவியம்!

சூரியின் நடிப்பு - பிரமிப்பு
இளையராஜா- இசையில் என்றும் ராஜா
வெற்றி மாறன் - தமிழ் திரையுலகின் பெருமை தயாரிப்பாளருக்கு என்னுடைய வாழ்த்துகள் . இரண்டாவது பாகத்திற்காக காத்துக்கொண்டிருக்கிறேன் என நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்