கல்யாணம் பண்ணிட்டு ராணி மாதிரி வெச்சுக்குறேன்னு சொன்னாரு.. அம்மாகிட்ட பேசினால் கூட பொசசிவ்.. ஆர்த்தி சொல்வது என்ன?-videos of aarti and jayam ravi talking are going viral - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  கல்யாணம் பண்ணிட்டு ராணி மாதிரி வெச்சுக்குறேன்னு சொன்னாரு.. அம்மாகிட்ட பேசினால் கூட பொசசிவ்.. ஆர்த்தி சொல்வது என்ன?

கல்யாணம் பண்ணிட்டு ராணி மாதிரி வெச்சுக்குறேன்னு சொன்னாரு.. அம்மாகிட்ட பேசினால் கூட பொசசிவ்.. ஆர்த்தி சொல்வது என்ன?

Divya Sekar HT Tamil
Sep 11, 2024 07:36 AM IST

Jayam Ravi : ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து செய்தி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தங்கள் காதல் மற்றும் திருமண வாழ்க்கை குறித்து ஆர்த்தி மற்றும் ஜெயம் ரவி பேசும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.

கல்யாணம் பண்ணிட்டு ராணி மாதிரி வெச்சுக்குறேன்னு சொன்னாரு..   அம்மாகிட்ட பேசினால் கூட பொசசிவ்.. ஆர்த்தி சொல்வது என்ன?
கல்யாணம் பண்ணிட்டு ராணி மாதிரி வெச்சுக்குறேன்னு சொன்னாரு.. அம்மாகிட்ட பேசினால் கூட பொசசிவ்.. ஆர்த்தி சொல்வது என்ன?

காதல் மற்றும் திருமண வாழ்க்கை

இந்நிலையில், தங்கள் காதல் மற்றும் திருமண வாழ்க்கை குறித்து ஆர்த்தி மற்றும் ஜெயம் ரவி பேசும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அதில் ஒரு வீடியோவில், இந்த மாதிரி ஒரு கணவர் என் வாழ்க்கையில் கிடைச்சதற்கு நான் ரொம்ப கொடுத்து வச்சி இருக்கணும். அவர் எல்லா பெண்களையுமே ரொம்பவும் மரியாதையாக நடத்துவார். அவருடைய அம்மா, அக்கா, தோழிகள், அவருடன் நடிக்கும் நடிகை என எல்லோரையும் ரொம்ப மரியாதையாக நடத்துவார். அவங்களை பார்த்துக்கிறதுலயே நீங்கள் புரிந்துகொள்ளலாம் எனக்கு எவ்வளவு மரியாதை கொடுப்பார் என்று. 

என்னுடைய ராணி தான் ஆர்த்தி

வெளியே எப்படி நடந்து கொள்கிறாரோ அதைவிட 100 மடங்கு அதிகமாகத்தான் வீட்டில் நடந்து கொள்வார். அந்த விதத்தில் நான் எப்பவுமே ரொம்ப சிறப்பு வாய்ந்த பெண்ணாக தான் உணருகிறேன். அதற்கு பதிலளிக்கும் ஜெயம் ரவி என்னுடைய ராணி தான்  எப்போதுமே என்று சொல்கிறார். லவ் பண்ணும்போது ரவி ஒரே விஷயம் தான் சொன்னாரு. நான் உன்னை கல்யாணம் பண்ணிட்டு ராணி மாதிரி வெச்சுக்குறேன்னு சொன்னாரு. அதை இப்போது வரை பண்ணிட்டுருக்காரு என ஆர்த்தி சொகிறார். இந்த வீடியோவை பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

ரவி நூறு சதவீதம் சிறந்த கணவர்

மற்றொரு வீடியோவில், ஆர்த்தி பேசுகையில் ரவி நூறு சதவீதம் சிறந்த கணவர். அம்மா உடன் பேசினால் கூட பொசசிவாக ஃபீல் பண்ணுவாரு. இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய ரவி, நீ வேற யாருடன் பேசினாலும் நான் பொசசிவ் ஆக மாட்டேன். என்கிட்ட சொல்ல முடியாத விஷயங்களைககூட அவங்க அம்மா உடன் தான் சொல்லுவாங்க. அப்போ நான் பொசசிவாகதான் ஃபீல் பண்ணுவேன் என்கிறார். இந்த வீடியோவும் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் ஜெயம் ரவியும், ஆர்த்தியும் இணைந்து கொடுத்த பேட்டி ஒன்றும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அந்தப் பேட்டியில் பேசிய ஆர்த்தி, “முதல் குழந்தை பிறக்கும் பொழுது ரவி என்னுடன் இருக்க வேண்டும் என்று தான் நினைத்திருந்தார்; ஆனால் எதிர்பாராத விதமாக எனக்கு குழந்தை கொஞ்சம் சீக்கிரமாகவே பிறந்து விட்டது. அந்த சமயத்தில் ரவி எங்கேயும் எப்போதும் படத்திற்காக பாரீஸில் இருந்தார். ஆகையால் முதல் குழந்தை ஆரவ் அப்பா அருகில் இல்லாமல் பிறந்தான்.

100 மதிப்பெண்ணுக்கு மேல்தான் கொடுப்பேன்

நான் கர்ப்பமாக இருந்தபோது என்னை ரவி அருகில் இருந்து அப்படி பார்த்துக் கொண்டார். நான் வாந்தி எடுக்கும் பொழுது அதை கையில் ஏந்தினான். இரவில் நான் எழுந்து இதை சாப்பிட வேண்டும் அதை சாப்பிட வேண்டும் என்று சொல்லும் போது கூட அவர் எழுந்து வருவார். கணவராக அவருக்கு நான் 100 மதிப்பெண்ணுக்கு மேல்தான் கொடுப்பேன்.” என்று பேசினார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.