வேட்டையன் படக்காட்சியை நீக்க கோரி காவல் நிலையத்தில் புகார்! அப்படி என்ன காட்சி !
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  வேட்டையன் படக்காட்சியை நீக்க கோரி காவல் நிலையத்தில் புகார்! அப்படி என்ன காட்சி !

வேட்டையன் படக்காட்சியை நீக்க கோரி காவல் நிலையத்தில் புகார்! அப்படி என்ன காட்சி !

Suguna Devi P HT Tamil
Oct 11, 2024 07:01 PM IST

ரஜினி நடிப்பில் வெளியான வேட்டையன் படத்தில் அரசுப்பள்ளி குறித்து சர்ச்சையான காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக அதனை நீக்க கோரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

வேட்டையன் படக்காட்சியை நீக்க கோரி காவல் நிலையத்தில் புகார்! அப்படி என்ன காட்சி !
வேட்டையன் படக்காட்சியை நீக்க கோரி காவல் நிலையத்தில் புகார்! அப்படி என்ன காட்சி !

இப்படத்தில் நடிகர் ரஜினி காந்த் மட்டுமின்றி, பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், மலையாளம் மட்டுமின்றி தென்னிந்தியாவையே தனது நடிப்பால் கலக்கிவரும் பகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியார் என நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நேற்று வேட்டையன் திரைப்படம் வெளியானது. அதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் ரஜினி நடித்து வருகிறார். ஜெய்பீம் பட இயக்குநர் த. செ. ஞானவேல் இயக்கத்தில் உருவாகி உள்ள வேட்டையன் படத்தின் டிரெய்லர் வெளியானதில் இருந்து கதை குறித்தும், படம் பேசப்போக்கும் விசயங்கள் குறித்தும் சமூக வலைத் தளங்களில் அனல் பறக்க விவாதங்கள் நடந்து வருகின்றன. 

படத்தில் சர்ச்சை காட்சி 

இப்படத்தின் இயக்குநர் த. செ. ஞானவேலின் முதல் படமான ஜெய்பீம் படத்தில் சிறை கைதிகள் அனுபவிக்கும் கொடுமைகள் குறித்தும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி குறித்து வெளிப்படையாக காட்டப்பட்டிருந்தது. மேலும் இப்படம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இப்படத்தின் கதை அமைக்கபத்திருந்தது. இப்படம் குறித்தே பல சர்ச்சைகள் கிளம்பிய வண்ணம் இருந்தன. இந்நிலையில் தற்போது வேட்டையன் படத்தின் காட்சி குறித்து சர்ச்சை ஏற்பட்டுள்ளது. 

வேட்டையன் படத்தில் கோவில்பட்டி அரசுப் பள்ளி மாணவர்கள் சிலர் ஆசிரியை பாடம் நடத்துவதை தவறாக சித்தரித்து போன் மூலம் பலருக்கு பகிர்வது போன்று இரு காட்சி இடம் பெற்று இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவில்பட்டி சமூக ஆர்வலர் கூட்டமைப்பினர்  கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகார் மனுவில், 2009 -2010ம் ஆண்டு தமிழ்நாட்டின் சிறந்த பள்ளியாக கோவில்பட்டி காந்திநகரில் உள்ள உயர்நிலைப்பள்ளி விருதுபெற்றது. இந்நிலையில் வேட்டையன் படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகளால் பள்ளிக்கு அவப்பெயர் ஏற்படும் என்பதால், அக்காட்சியை நீக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் கோவில்பட்டி காந்திநகர் பகுதியைச் சேர்ந்த மக்கள், தங்கள் பகுதியையும், தங்கள் பகுதியில் சிறப்பாக செயல்பட்டு வரும் அரசு பள்ளியையும் படத்தில் தவறாக சித்தரித்து உள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவில்பட்டியில் வேட்டையன் திரைப்படம் ஓடும் லட்சுமி திரையரங்கை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெண்கள் சிலர் கூச்சலிட்டு போராடியது அந்த இடத்தில் சற்று பதட்டம் நிலவியது. 

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.