விஜயை தாண்டி வசூல் கொடுக்க இங்கு நிறைய ஆட்கள் இருக்கிறார்கள்.. சினிமா ஒருவரை நம்பியே இருக்காது - திருப்பூர் சுப்ரமணியம்!
விஜய் சினிமாவை விட்டு அரசியலுக்கு செல்வதால் நிச்சயம் திரைத்துறைக்கு எந்த விதமான நஷ்டமும் இல்லை என்று சில சர்ச்சையான கருத்துக்களை பேசி இருக்கிறார் தமிழக திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன்.
தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர் விஜய். இவர், உச்சத்தில் இருக்கும் போதே சினிமாவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அறிவிப்போடு நிறுத்திவிடாமல், தமிழக வெற்றிக் கழகம் எனும் புதிய கட்சி, கட்சிக்கான கொடி, கட்சிப் பாடல் போன்றவற்றை அறிமுகம் செய்தார். பின், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசன், முதல் மாநாடு என கட்சிப் பணிகளில் பரபர்பபாக ஈடுபடுகிறார்.
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு
தளபதி விஜய் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டி வி சாலை பகுதியில் நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள் இரவு, பகல் என சுழன்றவாறு செய்து வருகின்றனர். இதைடுத்து கட்சியின் முதல் மாநாடுக்கான பந்தகால் நடும் விழா சமீபத்தில் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடியை ஆகஸ்ட் 22ஆம் தேதி அறிமுகம் செய்தார் தளபதி விஜய். இந்த நிகழ்வில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் முதல் முறையாக கட்சி கொடியை ஏற்றினார். அத்துடன் பிளாக் ஆந்தம் என்ற பாடலும் வெளியிடப்பட்டது.
தமிழ் சினிமாவிற்கு பேரிழப்பு
கட்சியின் கொள்கைகளை தற்போதுவரை விஜய் வெளியிடாத நிலையில், தந்தை பெரியாருக்கு அவரது பிறந்த நாள் அன்று மரியாதை செலுத்தியது, விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு வாழ்த்து கூறாதது என பலவற்றை டிகோட் செய்து ஒவ்வொரு அரசியல் தலைவர்களும் விஜய்யின் கட்சி நிலைப்பாடு இதுதான். அவரின் கொள்கை இதுதான் என பேசி வருகின்றனர். இதற்கு அறிக்கை மூலம் விஜய் பதிலடி கொடுத்தாலும், பேச்சுகள் குறைந்த வண்ணம் இல்லை.
விஜய் ரசிகர்களும், சினிமா வட்டாரங்களும் நடிகர் விஜய் சினிமாவிலிருந்து விலகினால், அது தமிழ் சினிமாவிற்கு பேரிழப்பாக இருக்கும். அவர் கட்சிப் பணியுடன் இணைந்து சினிமாவிலும் தொடர்ந்து நடிக்க வேண்டும். இது தமிழ் சினிமாவிற்கும், அவரது கட்சி வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும் என பலரும் கூறிவந்தனர்.
திரைத்துறைக்கு எந்த விதமான நஷ்டமும் இல்லை
இந்நிலையில் விஜய் சினிமாவை விட்டு அரசியலுக்கு செல்வதால் நிச்சயம் திரைத்துறைக்கு எந்த விதமான நஷ்டமும் இல்லை என்று சில சர்ச்சையான கருத்துக்களை பேசி இருக்கிறார் தமிழக திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன்.
அவர், "விஜய் அரசியலுக்கு போனால் என்ன? விஜயை தாண்டி வசூல் கொடுக்க இங்கு நிறைய ஆட்கள் இருக்கிறார்கள். விஜய் இடத்துக்கு வரவும் இங்கு ஆட்கள் இருக்கிறார்கள். சினிமா எப்போதுமே ஒருவரை நம்பியே இருக்காது. ஒருவர் போனால் மற்றொருவர் அந்த இடத்திற்கு வந்து விடுவார். அதனால் விஜய் சினிமாவை விட்டு போனதும் அது ஒன்றும் பெரிய இழப்பாக எங்களுக்கு இருக்காது" என்று கூறி சர்ச்சையை கிளப்பியிருக்கிறார் திருப்பூர் சுப்ரமணியம்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.