எங்கப்பாக்கு ரெண்டு பொன்னாட்டி.. அது லீகலா? இல்லீகலா?.. வைரலான வனிதா எழுப்பிய கேள்வி!
எனது தந்தை விஜயகுமாருக்கு இரண்டு மனைவிகள் இருக்கின்றனர். அவர்களை நீங்கள் லீகலான மனைவியா இல்லையா என எப்படி எடுத்துக் கொள்வீர்களோ அது உங்களுடைய இஷ்டம் என வனிதா கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் மூத்த நடிகரான விஜயகுமார்- மஞ்சுளாவின் தம்பதியின் மகள் தான் வனிதா விஜயகுமார். ஆனால் தற்போது தனது தந்தையுடன் பேச்சு வார்த்தை இல்லாமல் தனியாக வாழ்ந்து வருகின்றார்.
எதற்கும் பயப்படாமல், யாருடைய கருத்திற்கும் உடன்படாமல் இருக்கும் இவரது செயலால் இவர் திரையுலகம் மட்டுமல்ல மக்களிடமும் மிகவும் பரிட்சையமானவர். அப்படி இருக்கையில், சில நாட்களுக்கு முன், அவர் தனது தந்தை குறித்து பேசிய வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.
என் அப்பாவிற்கு 2 மனைவிகள்
அதில், 2ம் திருமணம் குறித்து தொகுப்பாளரிடம் பேசிக் கொண்டிருப்பார். அந்த சமயத்தில், நான் இதை சொன்னால் எப்படி எடுத்துக் கொள்வீர்கள் எனத் தெரியாது. நாங்கள் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அங்கு பெரும்பாலான ஆண்களுக்கு 2 மனைவிகள் தான். ஏன் இன்னும் சொல்லப் போனால், என் தந்தை விஜய குமாருக்கும் 2 மனைவிகள் தான். அதை நீங்கள் லீகல் என்று சொன்னாலும் சரி, இல்லீகல் என்று சொன்னாலும் சரி. அதை நீங்கள் எப்படி எடுத்துக் கொண்டாலும் சரி தான் என பேசி இருப்பார்.
இவர் என்னதான் தந்தையுடன் சண்டை போட்டு பேசாமல் இருந்தாலும், அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பொது வெளியில் இப்படி பேசியிருக்க வேண்டாம் என பலரும் கூறி வந்தனர்.
வனிதாவை வேண்டுமன்றே தவிர்த்த விஜயகுமார்
இது இப்படி இருக்க, வனிதா குறித்து அவரது தந்தை விஜயகுமார் பேட்டியில் பேசாமலே தவிர்த்திருப்பார். இதை வனிதாவின் நலம் விரும்பிகள் அவருக்கு அனுப்பி வைக்க வனிதா இதை பிஹைண்ட்உட்ஸ் பேட்டி ஒன்றில் பேசி கொந்தளித்திருப்பார் வனிதா.
அந்தப் பேட்டியில், என் தந்தை விஜயகுமார் எனது பிள்ளைகளில் வனிதா மட்டும் தான் என் பேச்சை கேட்க மாட்டார் என கூறியிருந்தால் பரவாயில்லை. அவரை நான் பாராட்டி இருப்பேன். ஆனால், அவரோ என் அக்கா, தங்கை என அனைவர் குறித்தும் பேசிவிட்டு வேண்டுமென்றே என் பெயரை குறிப்பிடாமல் தவிர்த்திருப்பார். அவரது இந்த செயல் அவ்வளவாக நல்லதென தெரியவில்லை.
நானும் அப்பா பேச்சை கேட்ட பொன்னு தான்
நானும் அவருடைய பேச்சை கேட்டு வளர்ந்தவள் தான். ஆனால், எனது அப்பா அவருக்கு எது சரியானதோ அதை மட்டும் செய்யச் சொல்லி என்னை வற்புறுத்துவார். அது எனக்கு சரியானதா எந்பதை அவர் சிந்திக்கவும் மாட்டார். ஒரு கட்டத்தில் என் உணர்வுகள் என்ன சொல்கிறதோ அதை கேட்டு நடக்க ஆரம்பித்தேன். அது என் அப்பாவிற்கு பிடிக்கவில்லை.
இது ஒரு கட்டத்தில் எங்கள் இருவருக்கும் பிரச்சனையாக வந்த சமயத்தில் நான் அவரை விட்டு பிரிந்து விட்டேன். அவருடனான அனைத்து உறவுகளிலிருந்தும் வெளியே வந்துவிட்டேன் எனக் கூறியிருந்தார்.
இந்த வீடியோ தற்போது மீண்டும் வைரலாகி வரும் நிலையில், வனிதாவின் வார்த்தைகளும் ஏற்றுக் கொள்ளக் கூடியவை தானே என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சினிமாவில் அறிமுகம்
விஜய் நடித்த சந்திரலேகா திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமான அவர், தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்தார். வனிதா விஜயகுமாரை பொறுத்தவரை அவர் நடிகையாக பிரபலமானதை விட, அவருடைய பர்சனல் பிரச்சினைகளின் வழியாகவே பிரபலம் அடைந்ததே அதிகம்.
வனிதாவின் திருமண வாழ்க்கை
முதலில் நடிகர் ஆகாஷை திருமணம் செய்த அவர் கருத்துவேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார். அதன் பின்னர் தொழிலதிபர் ஆனந்த் ஜெய் ராஜனை திருமணம் செய்து கொண்டார். அந்த மண உறவும் சில ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது. பின்னர், 2013ஆம் ஆண்டு நடன இயக்குநர் ராபர்ட்டுடன் வாழ்க்கையைத் தொடங்கிய வனிதா, 2017ஆம் ஆண்டு உறவில் இருந்து விலகினார். அதன் பின்னர் பீட்டர் பால் என்பவருடன் உறவில் இருந்த வனிதா அவரையும் திருமணம் செய்து கொண்டு பின்னர் பிரிந்தார்.
இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற வனிதா விஜயகுமார் மீண்டும் மீடியா வெளிச்சத்திற்கு வந்தார். அதனைத்தொடர்ந்து தன்னுடைய மகளான ஜோவிகாவையும் அண்மையில் நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற செய்தார்.
டாபிக்ஸ்