Vaazhai OTT Release: பாக்ஸ் ஆபிஸில் வசூல் மழை..ரசிகர்களை பெரிதும் கவர்ந்த வாழை! ஓடிடி ரிலீஸ் எப்போது?
Vaazhai OTT Release: பாக்ஸ் ஆபிஸில் வசூல் மழை பொழிந்து, ரசிகர்களை பெரிதும் கவர்ந்த வாழை திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பெரிய நடிகர்கள் இல்லாத போதிலும் இந்த ஆண்டில் வசூலை குவித்து வெற்றி படமாக மாறியுள்ளது.

Vaazhai OTT Release: பாக்ஸ் ஆபிஸில் வசூல் மழை..ரசிகர்களை பெரிதும் கவர்ந்த வாழை! ஓடிடி ரிலீஸ் எப்போது?
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் என இதுவரை இயக்கிய மூன்று படங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்திய இயக்குநராக இருப்பவர் மாரி செல்வராஜ். இந்த படங்களை தொடர்ந்து புதுமுகங்களை வைத்து அவர் இயக்கியிருக்கும் படம் வாழை.
கடந்த மாதம் 23ஆம் தேதி வெளியான இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததுடன், விமர்சக ரீதியாக பாராட்டை பெற்றது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களும் இந்த படத்தை வெகுவாக பாராட்டியுள்ளனர்.
வாழை தார் தூக்கும் தொழிலாளிகளின் வாழ்க்கையை மையப்படுத்தி வெளியாகியிருக்கும் இந்த படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, ஜே. சதீஷ் குமார் ஆகியோர் மட்டுமே தெரிந்த நடிகர்கள் நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாரயணன் இசையில் படத்தின் பாடல்களும் வரவேற்பை பெற்றுள்ளன.