TTF Vasan: மஞ்சள் வீரனுக்கு சிவப்பு கொடி.. சூப்பர் ஸ்டாரை படத்திலிருந்து நீக்கிய இயக்குநர்.. பிக்பாஸின் வேலையா?-ttf vasan removed from manjal veeran movie says director - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ttf Vasan: மஞ்சள் வீரனுக்கு சிவப்பு கொடி.. சூப்பர் ஸ்டாரை படத்திலிருந்து நீக்கிய இயக்குநர்.. பிக்பாஸின் வேலையா?

TTF Vasan: மஞ்சள் வீரனுக்கு சிவப்பு கொடி.. சூப்பர் ஸ்டாரை படத்திலிருந்து நீக்கிய இயக்குநர்.. பிக்பாஸின் வேலையா?

Malavica Natarajan HT Tamil
Oct 01, 2024 01:58 PM IST

TTF Vasan: டிடிஎஃப் வாசன் தான் எங்களின் சூப்பர் ஸ்டார். ஆனால், அவரை நாங்கள் மஞ்சள் வீரன் படத்திலிருந்து நீக்குகிறோம் என அப்படத்தின் இயக்குநர் செல் அம் தெரிவித்துள்ளார்.

TTF Vasan: மஞ்சள் வீரனுக்கு சிவப்பு கொடி.. சூப்பர் ஸ்டாரை படத்திலிருந்து நீக்கிய இயக்குநர்.. பிக்பாஸின் வேலையா?
TTF Vasan: மஞ்சள் வீரனுக்கு சிவப்பு கொடி.. சூப்பர் ஸ்டாரை படத்திலிருந்து நீக்கிய இயக்குநர்.. பிக்பாஸின் வேலையா?

மஞ்சள் வீரன் திரைப்படத்திலிருந்து நீக்கம்

இந்த நிலையில், டிடிஎஃப் வாசன் மஞ்சள் வீரன் திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என மஞ்சள் வீரன் படத்தின் இயக்குநர் செல் அம் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பில், டிடிஎஃப் வாசனடன் இணைந்து பணியாற்ற எண்ணினேன். ஆனால், சூழ்நிலை ஒத்துழைக்கவில்லை எனக் கூறினார். மேலும், டிடிஎஃப் வாசன் தான் சூப்பர் ஸ்டார். அவர் படத்திலிருந்து நீக்கப்பட்டாலும் அவருடனான உறவு தொடரும் எனக் கூறினார்.

அத்துடன் வரும் அக்டோபர் 15ம் தேதி மஞ்சள் வீரன் படத்திற்கான புதிய கதாநாயகன் அறிவிக்கப்படுவார் எனவும் கூறியுள்ளார்.

சர்ச்சையான யூடியூபர்

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த டிடிஎஃப் வாசன், விலை உயர்ந்த பைக்குகளில் சாகசங்கள் செய்து அதனை யூடியூப்பில் பதிவேற்றம் செய்து வந்தார். மேலும், சாகசங்கள், அதிலுள்ள சிக்கல்கள், பைக்கிற்கு தேவையான விஷயங்கள் குறித்தும் விளக்கிவந்தார். இதனால், இவருக்கு தமிழ்நாடு மட்டுமின்றி, பல மாநிலங்களிலும் ரசிகர்கள் ஏராளமாக உள்ளனர்.

இதற்கிடையில், போக்குவரத்தை மீறி வாகனம் ஓட்டுவது, அனுமதியின்றி கூட்டம் கூட்டுவது, பொதுமக்களை அச்சுறுத்தும் வண்ணம் வாகனம் ஓட்டுவது, பொது இடங்களில் மக்களை தொந்தரவு செய்வது என பல்வேறு வழக்குகளும் உள்ளது.

டிடிஎஃப் வாசன் என்ற பெயர் 2கே கிட்ஸ்களுக்கு பரிட்சையமான பெயராக இருந்தாலும், மக்கள் மத்தியில் பிரபலமடைந்தது அவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது தான். இவரது பிறந்த நாளை பூங்கா ஒன்றில் கொண்டாடுவதாக டிடிஎஃப் வாசன் அறிவித்திருந்த நிலையில், பல்வேறு மாநிலங்களிலிருந்தும் இளைஞர்கள் அந்த இடத்தில் கூடினர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்ட பிறகு தான் டிடிஎஃப் வாசன் என்ற பெயர் மக்கள் மத்தியில் உலாவ ஆரம்பித்தது.

சில நாட்களுக்குப் பின் அவர், காஞ்சிபுரம் அருகே பைக்கில் மிக வேகமாக சென்று கொண்டிருந்த போது வீலிங் செய்ய முயன்று விபத்தில் சிக்கினார். இதுகுறித்த வழக்கில், அவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது, போக்குவரத்து விதிகளை பலமுறை மீறியதாகக் கூறி 10 ஆண்டுகள் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

தொடரும் சர்ச்சை

பின் பைக்கை விட்டுவிட்டு, காரில் சுற்றிக் கொண்டு டிடிஎஃப் வாசன் வீடியோ பதிவிட்டு வருகிறார். அப்போதும், அவர் மீது பல புகார்கள் அளிக்கப்பட்டு, தொடர் சர்ச்சையிலேயே இருந்தார், போலீசாரால் கைது செய்யப்பட்ட பின்பும், கெத்தாக பேசியது, காவல் நிலையத்தில் கையெழுத்திட சென்றபோது கோட் சூட் அணிந்து ரீல்ஸ் எடுப்பது என பல சர்ச்சைகள் இவரைச் சுற்றி வந்த வண்ணமே இருந்தது.

இதற்கு அடுத்ததாக, நண்பர்களுடன் திருப்பதி சென்ற டிடிஎஃப் வாசன், அலுவலர்களுக்கு தெரியாமல் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்ட பகுதிகளில், அத்துமீறி வீடியோ எடுத்து சிக்கினார்.

மஞ்சள் வீரன்

இந்த சர்ச்சைகளுக்கு இடையில் தான், யூ டியூப் மூலம் பிரபலமான டிடிஎஃப் வாசனை கதாநாயகனாக வைத்து செல் அம் என்ற இயக்குநர் படம் இயக்க உள்ளதாகவும் அதற்கு மஞ்சள் வீரன் என பெயரிட்டுள்ளதாகவும் அறிவித்திருந்தார். ஆனால், இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு தொடர்பான எந்த தகவலும் வெளியாகமாலே இருந்த நிலையில், மஞ்சள் வீரன் படத்தில் இருந்து கதாநாயகன் டிடிஎஃப் வாசன் நீக்கப்படுவதாக படத்தின் இயக்குனர் செல்அம் தெரிவித்துள்ளார்.

டிடிஎஃப் வாசன் என்னுடன் இணைந்து பயணிக்க வேண்டும் என விரும்பினேன். ஆனால், சூழ்நிலை ஒத்துவரவில்லை எனக் கூறி இத்திரைப்படத்திற்கான புதிய கதாநாயகனை அறிவிக்க உள்ளதாகவும் கூறி, டிடிஎஃப் வாசனின் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறார்.

பிக்பாஸ் எண்ட்ரி

இத்தனை நாள் மஞ்சள் வீரன் பட இயக்குநர் எடுத்த திருவிக பூங்கா படத்தில் வெளியான நம்பு நம்பு நலம் தான் பாடலுக்கு வைப் செய்து வந்தவர்கள் இப்போது, துக்கத்தில் இருக்கின்றனர். நிலமை இப்படி இருக்க, டிடிஎஃப் வாசன் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்ல உள்ளார். அதனால் தான் அவர் திரைப்படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார் எனவும் பலரும் கூறி வருகின்றனர்,

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.