Trisha Koovathur Issue: ’த்ரிஷா உடன் என்னை தொடர்பு படுத்துவதா?’ ஏவி ராஜு மீது கருணாஸ் போலீசில் புகார்!-trisha koovathur issue complaint filed against former aiadmk executive av raju at actor karunas police station - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Trisha Koovathur Issue: ’த்ரிஷா உடன் என்னை தொடர்பு படுத்துவதா?’ ஏவி ராஜு மீது கருணாஸ் போலீசில் புகார்!

Trisha Koovathur Issue: ’த்ரிஷா உடன் என்னை தொடர்பு படுத்துவதா?’ ஏவி ராஜு மீது கருணாஸ் போலீசில் புகார்!

Kathiravan V HT Tamil
Feb 21, 2024 05:25 PM IST

“கூவத்தூர் விவகாரம் தொடர்பாக பொய்யான அவதூறுகளை பரப்பி உள்ளனர்”

கருணாஸ்
கருணாஸ்

த்ரிஷா குறித்து சர்ச்சை பேச்சு

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஏவி.ராஜூ, சில நாட்களுக்கு முன்னர் அளித்த பேட்டியில், அதிமுகவில் எம்.எல்.ஏவாக இருந்த வெங்கடாஜலம், கூவத்தூரில் செய்த சேட்டைகள் பற்றி, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஏ.வி.ராஜூ பேட்டிகொடுத்துள்ளார். அதில், ‘அதிமுகவில் ஒரு சாதாரண எம்.எல்.ஏ.வாக இருந்த வெங்கடாஜலம் கூவத்தூரில் இருக்கும்போது தன்னுடன் பொழுதைக் கழிக்க நடிகை த்ரிஷா வேண்டும் என்று அடம்பிடித்தார்.

நான் கூவத்தூரில் இருக்கும் வெங்கடாஜலத்தைப் பார்க்கப்போனேன். வெங்கடாஜலம் மது குடிக்க மாட்டார். ஆனால், அதற்குப் பதிலாக கூவத்தூரில் இருக்குபோது த்ரிஷாவை வேண்டும் என்று கேட்டு அடம்பிடித்தார். இது நடிகர் கருணாஸுக்கு தெரியும். எந்ததெந்த எம்.எல்.ஏக்களுக்கு நடிகைகள் வேண்டுமோ, அவர்களுக்கு நடிகைகளிடம் பேசி அவர்களை கூவத்தூருக்கு அழைத்து வந்தது கருணாஸ் தான். பெரும்பாலான நடிகைகள் அங்கு வந்தனர். அதையெல்லாம் வெளிப்படையாக சொல்ல முடியாது. வெங்கடாஜலத்துக்காக நடிகை த்ரிஷாவிடம் ரூ.25 லட்சம் கொடுத்து அவரை அழைத்து வந்தனர். நாங்கள் பார்த்ததை கேட்டதைச் சொல்கிறோம்’’ என கூறி இருந்தார்.

த்ரிஷா ட்வீட்

இந்த பேட்டி இணைய தளங்களில் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதிமுக முன்னாள் நிர்வாகி ஏவி.ராஜூ மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போவதாக நடிகை த்ரிஷா ட்வீட் செய்துள்ளார்.

மன்னிப்பு கேட்ட ஏவி ராஜூ

இந்த நிலையில், தனது பேச்சு குறித்து அதிமுக முன்னாள் நிர்வாகி ஏவி.ராஜூ விளக்கம் அளித்துள்ளார். அதில், என்னை கட்சியை விட்டு நீக்கியது குறித்தும், என்னிடம் வெங்கடாசலம் சொன்னது குறித்தும் மட்டுமே பத்திரிக்கையாளர்களிடம் பேசி உள்ளேன். எனக்கு தர வேண்டிய பணத்தை தராதது குறித்து ஈபிஎஸின் மனு கொடுத்தேன். ஆனால் அதனை அவர் விசாரிக்கவில்லை என்பதுதான் பிரச்னை.

எனக்கு அந்த பெண்ணை பற்றியோ, நடிகரை பற்றியோ யார் என்றே தெரியாது. முன்னாள் எம்.எல்.ஏ வெங்கடாசலம் பேசியது, த்ரிஷா மாதிரி என்று சொன்னாரே தவிர, அது த்ரிஷா என்று சொல்லவில்லை.

நான் பேசிய வார்த்தையை சில தொலைக்காட்சிகள் தவறாக ஒளிபரப்பு செய்கிறார்கள். கூவத்தூருக்கு நான் சென்றபோது, அவர் இது குறித்து கூறினார். அழகான ஒரு சின்ன பெண் என்றுதான் பேசினாரே தவிர, நடிகை என்று சொல்லவில்லை. நான் கருணாஸ் பற்றி பேசவில்லை, கருணாஸ் அண்ணனும் இருந்தாரு, இதனை அண்ணன் சேரன் அவர்களும், விஷால் அவர்களும் புரிந்து கொள்ள வேண்டும். என் கருத்தால் த்ரிஷா மனம் புண்பட்டு இருந்தால் மன்னிப்பு கேட்கிறேன் என கூறி உள்ளார்.

கருணாஸ் புகார் 

இந்த நிலையில் ஏவி ராஜு மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் கருணாஸ் புகார் மனு அளித்துள்ளார். அதில், கூவத்தூர் விவகாரம் தொடர்பாக பொய்யான அவதூறுகளை பரப்பி உள்ளனர். நடிகை த்ரிஷாவையும் என்னையும் தொடர்பு விளம்பரத்துக்காக ஏ.வி.ராஜு பேட்டி கொடுத்துள்ளார். உண்மைக்கு மாறான பேட்டியால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். 

Whats_app_banner
தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.