V.N. Janaki : முதல்வரான முதல் நடிகை.. வறுமையில் சென்னை வந்து சினிமாவில் கலக்கிய நாயகி வி.என்.ஜானகி நினைவு நாள் இன்று!
V.N. Janaki : முதல்வரான முதல் நடிகை. வறுமையில் சென்னை வந்து சினிமாவில் கலக்கிய நாயகி வி.என்.ஜானகி நினைவு நாள் இன்று. அவர் குறித்து சில சுவாரஸ்ய தகவல்கள் இதோ.

யார் இந்த வி.என். ஜானகி?
திருவாங்கூர் மாவட்டம் வைக்கம் என்ற நகரில் பிறந்தவர் வைக்கம் நாராயணி ஜானகி. இவர் 1923ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதி பிறந்தார். இவர் ஜானகி ராமச்சந்திரன் என்றும் அழைக்கப்படுகிறார். இவரது தந்தை ராஜகோபால் ஐயர், தமிழகத்தின் தஞ்சாவூரைச் சேர்ந்த பிராமணர். இசையமைப்பாளர் பாபநாசம் சிவனின் சகோதரர்.
இவரது தாய் நாராயணி அம்மா கேரளாவின் வைக்கம் பகுதியைச் சேர்ந்தவர். இவர்களின் குழந்தைகள் தாயின் வழி பெயரால் அழைக்கப்பட்டனர். அதனால் தான் வைக்கம் நாராயணி ஜானகி அவர் அழைக்கப்படுகிறார். இவர் நடிகை மட்டும் அல்லாது இந்திய அரசியல்வாதி, செய்பாட்டாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். இவரது குடும்பம் தமிழ் மற்றும் மலையாள பின்புலத்தை கொண்டது.
தாய் இரண்டாவது திருமணம்
வறுமை காரணமாக ஜானகி தனது 12ஆவது வயதில் தன் தாயாருடன் தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணத்திற்கு இடம் பெயர்ந்தார். அங்கிருந்த சிறுமலர் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து பயின்றார். அங்கு அவருக்கு ஆசிரியராக இருந்தவர் இராசகோபால ஐயர்.
