Story of Song : இந்த வரி வேண்டாம்.. வருத்தப்பட்ட ஜானகி..போட்டே ஆக வேண்டும் என வைரமுத்து.. நாதம் என் ஜீவனே பாடல் கதை!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Story Of Song : இந்த வரி வேண்டாம்.. வருத்தப்பட்ட ஜானகி..போட்டே ஆக வேண்டும் என வைரமுத்து.. நாதம் என் ஜீவனே பாடல் கதை!

Story of Song : இந்த வரி வேண்டாம்.. வருத்தப்பட்ட ஜானகி..போட்டே ஆக வேண்டும் என வைரமுத்து.. நாதம் என் ஜீவனே பாடல் கதை!

Divya Sekar HT Tamil
Jan 13, 2024 06:38 AM IST

Story of Song : காதல் ஓவியம் படத்தில் இடம்பெற்ற நாதம் என் ஜீவனே பாடல் உருவான கதை குறைத்து இதில் காண்போம்.

காதல் ஓவியம் படத்தில் இடம்பெற்ற நாதம் என் ஜீவனே பாடல் உருவான கதை
காதல் ஓவியம் படத்தில் இடம்பெற்ற நாதம் என் ஜீவனே பாடல் உருவான கதை

இப்படத்தில் இடம்பெற்ற அத்தனை பாடல்களும் ஹிட். குறிப்பாக நாதம் என் ஜீவனே உணர்வு பூர்வமாக இருக்கும். இப்பாடல் உருவான கதை குறித்து இதில் காண்போம்.

"நாதம் என் ஜீவனே

வா வா என் தேவனே

உந்தன் ராஜ ராகம்

பாடும் நேரம்

பாறை பால் ஊருதே ஓ

பூவும் ஆளானதே

நாதம் என் ஜீவனே

வா வா என் தேவனே

உந்தன் ராஜ ராகம்

பாடும் நேரம்

பாறை பால் ஊருதே ஓ

பூவும் ஆளானதே

நாதம் என் ஜீவனே

இசையை அருந்தும் சாதகப் பறவைப்

போல நானும் வாழ்கிறேன்

உறக்கமில்லை எனினும் கண்ணில்

கனவு சுமந்து போகிறேன்

தேவதை பாதையில்

பூவின் ஊர்வலம்

நீ அதில் போவதாய்

ஏதோ ஞாபகம்"

இந்தப் பாடலை வைரமுத்து எழுதியிருப்பார் அந்த காட்சிக்கு ஏற்றவாறு உணர்வுபூர்வமாக அந்த வரிகளை எழுதி இருப்பார். இந்த பாடலில் விதவை ஆகிப் போகுமே என்ற ஒரு வரி இடம்பெற்று இருக்கும்.

”அமுத கானம்

நீ தரும் நேரம்

நதிகள் ஜதிகள் பாடுமே

விலகிப் போனால் எனது சலங்கை

விதவை ஆகி போகுமே”

இந்த வரியை நீக்க சொல்லி வைரமுத்துவிடம் அசிஸ்டன்ட் கூறுகிறார். ஆனால் அவர் அதை நீக்க முடியாது இந்த பாடலில் இந்த வரி மிகவும் முக்கியமான வரி. இதனை ஜானகி அவரின் குரலில் உணவு பூர்வமாக பாட வேண்டும் என வைரமுத்து கூறுகிறார். இதையடுத்து ஜானகி அதை பாடுவதாக சம்மதித்து அந்த பாடலை பாடுகிறார். பாடல் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது.

சில வருடங்களுக்குப் பிறகு ஜானகி கணவனை இழந்த நிலையில் அதே ஸ்டுடியோவில் ஒரு பாடலை பாட வருகிறார். அப்போது வைரமுத்து அதனைப் பார்த்து மனம் வருந்துகிறார். அந்த வரிகளை சேர்க்காமல் இருந்திருக்கலாமோ என நினைக்கிறார். இதனை ஒரு மேடையில் அவர் கூறியிருப்பார். 

அதில் அவர் கூறுகையில் நான் எழுதுன வரிகளால தான் அவங்களுக்கு இந்த நிலைமை அப்படின்னு நான் சொல்ல மாட்டேன். அந்த அளவுக்கு நான் மூடநம்பிக்கையா இல்ல. ஆனா இனி நான் எழுதும் பாடல்களில் இந்த மாதிரியான வார்த்தைகளை பயன்படுத்த மாட்டேன் என தெரிவித்து இருப்பார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.