HBD Manorama : மறக்க முடியுமா இவரை? ஜில்ஜில் ரமாமணி.. கண்ணம்மா.. கின்னஸ் நாயகி ஆச்சி மனோரமா பிறந்தநாள் இன்று!
HBD Manorama : 1000க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த மனோரமா உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார். தமிழ்திரையுலக ரசிகர்கள் இவரை ஆச்சி என்றே அன்போடு அழைக்கிறார்கள். தென்னிந்தியாவின் 5 முதலமைச்சர்களுடன் நடித்த பெருமை கொண்டவர்.

காசியப்பன் 'கிளாக்குடையார்' மற்றும் ராமாமிர்தம் ஆகியோருக்கு மகளாக மே மாதம் 26 ஆம் தேதி 1937 ஆம் ஆண்டு பிறந்தார் மனோரமா. மனோரமாவின் இயற்பெயர் கோபிசாந்தா. மனோரமா தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ராஜமன்னார்குடியில் வசதியான குடும்பத்தில் பிறந்தார். இவரின் தந்தை ஒரு சாலை ஒப்பந்தக்காரராகப் பணியாற்றியவர்.
தந்தை காசியப்பன் கிளாக்குடையார் மனோரமாவின் தாயாா் ராமாமிா்தம் அவா்களின் தங்கையை இரண்டாம் தாரமாகத் திருமணம் புரிந்தார். இதையடுத்து கணவருடன் ஏற்பட்ட மனகசப்பால் புறக்கணிக்கப்பட்ட இராமாமிருதம் அம்மாள் மனோரமவை அழைத்து கொண்டு காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூர் என்ற ஊருக்கு குடிபெயர்ந்தார்.
தாயாருடன் பலகார வியாபாரம்
குடும்ப வறுமையின் காரணமாக பள்ளி படிப்பை தொடர முடியாத மனோரமா அங்குள்ள செட்டியார் வீடுகளில் வேலையாளியாக பணி செய்தார். அவர்கள் தாயாருடன் பலகார வியாபாரம் செய்து வாழ்க்கையைத் தொடங்கினார்கள். தனது பன்னிரண்டாவது அகவையில் நடிப்புத் தொழிலில் இறங்கினார்.