59 Years of Server Sundaram: நடிப்பில் ருத்ரதாண்டவம் ஆடிய நாகேஷ்! தமிழ் சினிமாவில் சிறந்த கல்ட் கிளாசிக் படம்
நாகேஷ் கதையின் நாயகனாக தோன்றி நடிப்பில் ருத்ரதாண்டவம் ஆடிய படமாக சர்வர் சுந்தரம் உள்ளது. பிளாக் அண்ட் ஒயிட் சினிமாக்களில் சிறந்த காமெடி ட்ராமா படமாகவும் இது உள்ளது.
இயக்குநர் சிகரம் பாலச்சந்தர் எழுத்தில் அரங்கேற்றப்பட்ட மேடை நாடகம் அதே பெயரில் திரைவடிவம் பெற்று சூப்பர் டூப்பர் ஹிட்டாகி, தமிழ் சினிமாவின் முக்கிய படைப்பாக மாறிய படம்தான் சர்வர் சுந்தரம்.
மேடை நாடகத்திலும், சினிமாவில் கதையின் நாயகனாக நடித்தது நாகேஷ் என்கிற மாபெரும் கலைஞன். முத்துராமன், கேஆர் விஜயா, மனோரமா, மேஜர் சுந்தரராஜன், ரங்காராவ் பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்கள். இந்த படத்தில் கவுண்டமணியும் கார் ட்ரைவராக சிறிய வேடத்தில் தோன்றியிருப்பார்.
இந்த படத்தை கிருஷண் - பஞ்சு இயக்கியிருப்பார்கள். ஓட்டல் சர்வராக இருக்கும் நாகேஷ் தனது முதலாளி மகள் மீதான காதலால் வாழ்க்கையில் பெரிய ஆளாக முன்னேற வேண்டும் என முயற்சித்து நடிகர் ஆவது தான் படத்தின் கதை.
காமெடி, சீரிஸ், செண்டிமென்ட் என நடிப்பில் வெரைட்டி காட்டி வெளுத்து வாங்கியிருப்பார் நாகேஷ்.
சினிமாவில் நடக்கும் காட்சி உருவாக்கத்தின் பின்னணியை காட்சியாக வைத்து வந்த தமிழ் படமாக அமைந்திருக்கும் சர்வர் சுந்தரம் சிறந்த படத்துக்கான தேசிய விருதையும், பிலிம் பேர் விருதையும் வென்றது.
கண்ணதாசன், வாலி பாடல்கள் எழுத, எம்எஸ் விஸ்வநாதன் இசையமைப்பில் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டாகின. அவளுக்கென்ன, போக போக தெரியும் பாடல்கள் இன்று வரையிலும் கேட்டு ரசிக்ககூடிய சிறந்த கிளாசிக் பாடல்களாக இருந்து வருகின்றன.
100 நாள்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி சூப்பர் ஹிட்டான சர்வர் சுந்தரம் இந்தி, கன்னட மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் கல்ட் கிளாசிக் திரைப்படமாக அமைந்திருக்கும் சர்வர் சுந்தரம் வெளியாகி இன்றுடன் 59 ஆண்டுகள் ஆகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்