Mari Selvaraj Speech: ‘சரிதாதான் என்னுடைய கனவுக்கன்னி; சிவாவுடன் இணைவது எப்போது?-மாவீரன் மேடையில் மாரிசெல்வராஜ் பேச்சு!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Mari Selvaraj Speech: ‘சரிதாதான் என்னுடைய கனவுக்கன்னி; சிவாவுடன் இணைவது எப்போது?-மாவீரன் மேடையில் மாரிசெல்வராஜ் பேச்சு!

Mari Selvaraj Speech: ‘சரிதாதான் என்னுடைய கனவுக்கன்னி; சிவாவுடன் இணைவது எப்போது?-மாவீரன் மேடையில் மாரிசெல்வராஜ் பேச்சு!

Kalyani Pandiyan S HT Tamil
Jul 03, 2023 12:09 AM IST

எப்படி வடிவேல் சாரின் போட்டோவை வீட்டில் மாட்டும் அளவுக்கு அவரின் ரசிகனாக இருந்தேனோ, அதேபோலத்தான் சரிதாவுக்கும் நான் அப்படி ஒரு ரசிகனாக இருந்தேன். அவர் இன்னும் அப்படியே இருக்கிறார். மாமன்னன் படத்தைப் பார்த்து எனக்கு போன் செய்து பேசினார்.

Director mari selvaraj speech at sivakarthikeyan MaaveeranPreReleaseEvent
Director mari selvaraj speech at sivakarthikeyan MaaveeranPreReleaseEvent

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, “ இந்த படக்குழுவில் எல்லோரும் எனக்கு நன்கு பரிச்சயமானவர்கள். குறிப்பாக எஸ். கே. சாரை சொல்ல வேண்டும். எஸ். கே. சாரும் நானும் நிறைய இரவுகளில் கிரிக்கெட் விளையாடி இருக்கிறோம்.

அவர் பாலில் நான் அடிக்கடி அவுட் ஆகி இருக்கிறேன். பாலை மெதுவாக போடுங்கள் என்று சொல்வேன். ஆனால் அவர் கேட்காமல் வேகமாக போடுவார். என்னை அவுட் ஆக்கி விட்டு சாரி ப்ரோ என்று சொல்வார்.

எஸ்.கே. என்னை பாராட்டி இருக்கிறார்

அவருக்கு என்னுடைய நன்றி. காரணம் என்னுடைய பரியேறும் பெருமாள் தொடங்கி மாமன்னன் வரை எல்லா படைப்புகளையும் பார்த்து பாராட்டியிருக்கிறார். என்னுடைய படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் இருந்து கவனித்து அதற்காக வாழ்த்து சொல்வதோடு மட்டுமல்லாமல் நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அது நடக்கும் என்று நம்பிக்கை சொல்வார். வாழை படத்திற்கு இப்போதே அவர் வாழ்த்து சொல்லி விட்டார்.

நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நன்றி சார். யாரிடமாவது கேள்வி கேழுங்கள் என்று சொன்னார்கள். நான் எஸ்.கே.சாரிடம் கேள்வி கேட்க வேண்டும் என்று நினைத்தேன். அதற்கான பதில் எனக்கு படத்தின் ட்ரெய்லரை பார்க்கும் போது கிடைத்து விட்டது. ட்ரெய்லர் மிகவும் அற்புதமாக இருந்தது.

நாம் எஸ்.கே சாரை எப்படி பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டமோ, அப்படி ஒரு படமாக மாவீரன் இருக்கும் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது. படத்தில் மிஷ்கின் சார் இருக்கிறார். அவரையும் எஸ். கே.சாரையும் எதிர் எதிராக பார்க்க மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். 

எப்படி பகத் சாரும் வடிவேலு எப்படி எதிரெதிராக  இருந்தார்களோ அப்படி இருப்பார்கள் என்று நம்புகிறேன். ஏனென்றால் படத்தில் ஏதோ ஒன்று இருக்கிறது. தயாரிப்பாளர் அருண் அண்ணனிடம் நான் இதுகுறித்து கேட்டுக் கொண்டே இருப்பேன். மிஷ்கின் சாரிடம் இதுவரை நாம் பார்த்தது ஒரு வாஞ்சையோடு டெரரான ரத்தமும் சதைமான படைப்புகளைதான்.

ஆனால் இந்தப் படத்தில் அவர் வேறு மாதிரி இருப்பார் என்று நினைக்கிறேன். இவர்களுடைய இரண்டு பேரும் காம்போ ஆடியன்ஸுக்கு பயங்கரமாக பிடிக்கும் என்று நினைக்கிறேன்.

என் கனவு நாயகி சரிதா!

சரிதா மேமை பார்க்கும் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. கொஞ்ச நாட்களுக்கு முன்னால் தான் அவரை நான் சந்தித்தேன். அவர் என்னுடைய கனவு நாயகி. ரொம்ப நாளாக நான் சொல்லிக் கொண்டே இருந்தேன் அவரை எப்படி சந்திப்பது.. அவர் எங்கு சென்றார் என்றெல்லாம் கேட்டுக் கொண்டே இருந்தேன். 

எப்படி வடிவேல் சாரின் போட்டோவை வீட்டில் மாட்டும் அளவுக்கு அவரின் ரசிகனாக இருந்தேனோ, அதேபோலத்தான் சரிதாவுக்கும் நான் அப்படி ஒரு ரசிகனாக இருந்தேன். அவர் இன்னும் அப்படியே இருக்கிறார். மாமன்னன் படத்தைப் பார்த்து எனக்கு போன் செய்து பேசினார். எனக்கு அப்படியே ஷாக் ஆகிவிட்டது. அதற்கு நான் அவருக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். நான் அதை எதிர்பார்க்கவே இல்லை.

அஸ்வினின்  மண்டேலா திரைப்படத்தை நாம் பார்த்திருக்கிறோம். அவர் தன்னுடைய படத்தில் சமூகத்திற்கு தேவையான ஏதோ ஒன்று இருக்க வேண்டும் என்ற ஆசை படக்கூடிய இயக்குனர் மாவீரன் படத்திலும் சமூகத்திற்கு தேவையானது இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

மன உளைச்சலுக்கு உள்ளாகிறோம்.

ஒரு படத்திற்காக நிறைய உழைப்பை போடுகிறோம் மன உளைச்சலுக்கு உள்ளாகிறோம். அந்த படத்தின் வெற்றியைத் தாண்டி, அதில் நாங்கள் யார் என்று வெளியே தெரிய வேண்டும் என்று நினைக்கிறோம். 

நான் ஏன் இந்தக் கதையை தேர்வு செய்தேன்; நான் ஏன் இந்த கதைக்காக உழைத்தேன் என்று வெளியே தெரிய வேண்டும் என்பதற்காகத்தான் ஒவ்வொரு இயக்குநரும் ஆசைப்படுகிறோம்.  ‘மண்டேலா’ திரைப்படத்தில் அவ்வளவு நேர்த்தியாக அரசியலை சொன்ன அஸ்வின் எஸ் கே மாதிரியான ஒரு ஹீரோவை வைத்து எப்படி ஒரு கதை எடுத்து இருப்பார் என்பதை நான் நினைத்துப் பார்க்க முடிகிறது. 

அந்த வகையில் இது மக்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு படமாக இருக்கும் என்று நினைக்கிறேன். சமூகத்தை பிரதிபலிக்கும் ஒரு கதையாக இந்த படம் இருக்கும் என்று நினைக்கிறேன். திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய என்னுடைய வாழ்த்துக்கள். நானும் இந்த படத்தின் தயாரிப்பாளர் அருணும் நமக்காக யாராவது படம் செய்ய மாட்டார்களா? என்று ஏங்கி இருக்கிறோம். 

 

சிவகார்த்திகேயனுடன் இணைவது எப்போது? 

இன்றைக்கு அவர் ஒரு மிகப்பெரிய தயாரிப்பாளராக மாறிவிட்டார். நானும் ஒரு இயக்குனராக மாறிவிட்டேன். ஆகையால் நானும் அவரும் இணைவது எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். அவரிடம் எந்த தயாரிப்பாளரும் ஒத்துக் கொள்ளாத கதையை கொண்டு கொடுப்பேன். அவரும் அதை நிச்சயம் செய்வார். 

அவரிடம் எந்த தயாரிப்பாளரும் ஒத்துக் கொள்ளாத கதையை கொண்டு கொடுப்பேன். அவரும் அதை நிச்சயம் செய்வார். சிவகார்த்திகேயன் உடன் இணைவது பற்றி கேட்கிறீர்கள்? தற்போது எல்லாக் கதவுகளும் திறந்து விட்டன.

எல்லா கதைகளையும் மக்கள் அங்கீகரிக்க ஆரம்பித்து விட்டார்கள். மக்கள் சமூகத்திற்கு எது நல்லது கெட்டது என்பதை எல்லாம் மிகவும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த சமூகத்திற்கு நல்லது  எதை செய்தாலும் அதை மக்கள் அங்கீகரிப்பார்கள். ஆகையால் யார வேண்டும் என்றாலும் என்ன மாதிரியான படைப்பு வேண்டுமென்றாலும் இங்கு கொடுக்கலாம்.” என்று பேசினார். 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.