தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Kr Vatsala: தாய்மை கொடுத்த சோதனை;‘10 மாசம் கழிச்சும் பிரசவ வலியே வரல’;விவாகரத்து பத்திரத்தில் படிந்த மை - கே.ஆர்.வத்சலா!

KR Vatsala: தாய்மை கொடுத்த சோதனை;‘10 மாசம் கழிச்சும் பிரசவ வலியே வரல’;விவாகரத்து பத்திரத்தில் படிந்த மை - கே.ஆர்.வத்சலா!

May 28, 2024 11:30 AM IST Kalyani Pandiyan S
May 28, 2024 11:30 AM , IST

KR Vatsala: நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுதே, என்னுடைய கணவர் அவருக்கு சரியான மனைவியாக நான் இல்லை என்று நினைத்திருக்கிறார். - கே.ஆர்.வத்சலா!

KR Vatsala: தாய்மை கொடுத்த சோதனை;‘10 மாசம் கழிச்சும் பிரசவ வலியே வரல’;விவாகரத்து பத்திரத்தில் படிந்த மை - கே.ஆர்.வத்சலா!

(1 / 5)

பிரபல நடிகையான கே.ஆர் விஜயாவின் சகோதரியும், நடிகையுமான கே.ஆர். வத்சலா, தன்னுடைய வாழ்க்கையில் தான் எதிர்கொண்ட சவால்கள் குறித்து கலாட்டா சேனலுக்கு அண்மையில் கொடுத்த பேட்டியில் பேசி இருந்தார். அந்த பேட்டியில் அவர் பேசும் போது, “ எங்களுடைய வீட்டில் அக்காதான் குடும்பத்தின் எல்லா வித பொறுப்பையும் தலையில் தூக்கிச்சுமந்தார். அவரைப் பார்த்தாலே, எங்களுக்கு ஒரு பயம் வரும். என்னுடைய கல்யாணத்தையும் அவரே எடுத்து நடத்தி வைத்தார். ஆனால் அந்தக் கல்யாணம் முழுமையான, சந்தோஷமான வாழ்க்கையை நோக்கிச் செல்லவில்லை.   

(2 / 5)

நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுதே, என்னுடைய கணவர் அவருக்கு சரியான மனைவியாக நான் இல்லை என்று நினைத்திருக்கிறார். இதையடுத்து நாங்கள் இருவரும் பிரிந்து விட்டோம். அவர் தற்போது வேறு ஒருவரை கல்யாணம் செய்து கொண்டு சந்தோஷமாக இருக்கிறார். பெண்களைப் பொறுத்தவரை, நம்முடைய திருமணம் காதல் திருமணமாக இருந்தாலும் சரி, வீட்டில் பார்த்து வைக்கப்பட்ட திருமணமாக இருந்தாலும் சரி, அது சரிவர அமைவது என்பது நம்முடைய தலையெழுத்தில்தான் இருக்கிறது. அந்த விஷயத்தில் என்னுடைய தாயையோ, தகப்பனையோ, அக்காவையோ நான் குறை சொல்ல முடியாது. எனக்கு பக்குவம் இல்லாத காரணத்தினால்தான், அந்த உறவை என்னால் கைகொள்ள முடியவில்லை.   

(3 / 5)

அந்த துயரச்சம்பவம், எனக்கு நிறைய பாடங்களை சொல்லிக் கொடுத்தது. பெண்கள் எக்காரணத்திற்கு கொண்டும், பொருளாதார ரீதியாகவோ, தொழில் ரீதியாகவோ, கல்வி ரீதியாகவோ பின்னோக்கி இருக்கவே கூடாது. நாம் என்றுமே நம்முடைய தனித்தன்மையோடு இருக்க வேண்டும். அந்த தொடர்ச்சியான முன்னேற்றத்தை இந்தத் திருமணம், குழந்தை உள்ளிட்ட இதர விஷயங்கள் பாதிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நான் அந்த காலகட்டத்தில், கல்வி ரீதியாக நாம் இன்னும் தேர்ந்த நிலையை அடைந்து இருக்க வேண்டுமே என்று யோசித்தேன்.  

(4 / 5)

எனக்கு  உடலில் சில பிரச்சினைகள் இருந்தன. அதனால் என்னால், தாய்மையை அடைய முடியுமா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் நான் தாய்மை அடைந்தேன். கிட்டத்தட்ட பத்து மாதங்கள் கழித்தும் கூட, எனக்கு பிரசவ வலி வரவில்லை. இந்த நிலையில், வேறுவழியில்லாமல் திடீரென்று ஒரு நாள் அவசரகதியாகச் சென்று, குழந்தையை வயிற்றிலிருந்து அறுவை சிகிச்சை மூலம் எடுத்தார்கள்.  மருத்துவர் மிகவும் சிக்கலான நிலைமை உங்கள் உடல் நிலையில் நிலவுகிறது. ஆகையால் இன்னொரு குழந்தை வேண்டாம் என்று சொன்னார்கள். ஆனால் குழந்தை இல்லாதவரை அதில் படும் கஷ்டங்கள் குறித்து பயந்த நான், குழந்தை வந்தவுடன் இன்னொரு பெண் குழந்தை இருந்தால், நன்றாக இருக்குமே என்று நினைத்தேன். 

(5 / 5)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்